NARRINAI -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0



 பகுதி – (ஆ) – இலக்கியம்

    ETTUTHOGAI NOOLGAL-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES - எட்டுத்தொகை:


நற்றிணை-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES :

நற்றிணை என்பது தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கிய வகைப்பாட்டினுள் காணப்படும் ஒரு நூலாகும். இந்நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்கள் இவையெனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். 

எட்டுத்தொகை நூல்களில் "நல்" என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இதுவேயாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. 

அவைகளில் பெரும்பான்மையானவை 9 அடி முதல் 12 அடிகள் கொண்ட பாடல்களாக அமைந்துள்ளன. இந்நூலைத் தொகுத்தவர் யாரென அறியப்படவில்லை என்றாலும் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். நற்றிணைப் பாடல்கள் அனைத்தும் அகப்பொருள் அமையப் பெற்ற பாடல்களாம். நற்றிணையில் 7 அடிகள் கொண்ட பாடலும் 13 அடிகள் கொண்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  • 7 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
  • 8 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
  • 9 அடிகளில் அமைந்த பாடல்கள் - 106
  • 10 அடிகளில் அமைந்த பாடல்கள் - 96
  • 11 அடிகளில் அமைந்த பாடல்கள் - 110
  • 12 அடிகளில் அமைந்த பாடல்கள் - 77
  • 13 அடிகளில் அமைந்த பாடல்கள் - 8
  • 234-ஆவது பாடல் கிடைக்கவில்லை.
  • திணை = அகத்திணைபாவகை = ஆசிரியப்பாபாடல்கள் = 400புலவர்கள் = 175அடி எல்லை = 9-12

நற்றிணை நூலின் வேறுபெயர்கள்

  • நற்றிணை நானூறு
  • தூதின் வழிகாட்டி

ஆசிரியர் குறிப்பு:

மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால் மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.

இவர் ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.

இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு பாடல்களும் குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல்கள் உள்ளன.

இவர் சங்க காலத்தவர்.

பாடியோர்:

குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடலில் இடம்பெற்றுள்ள தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் -

  • வண்ணப்புறக் கந்தத்தனார்
  • மலையனார்
  • தனிமகனார்,
  • விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
  • தும்பிசேர்க்கீரனார்
  • தேய்புரிப் பழங்கயிற்றினார்
  • மடல் பாடிய மாதங்கீரனார்

என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இந்நூலில் உள்ள நானூறு பாடல்களில் 234 ஆம் பாடலும் 385 ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கப்பெறவில்லை. 

இந்நூலினைத் திணை அடிப்படையில் ஆராயும்போது,

  • குறிஞ்சித் திணைப் பாடல்கள்-132
  • பாலைத் திணைப் பாடல்கள்-104
  • நெய்தல் திணைப் பாடல்கள்-102
  • மருதத் திணைப் பாடல்கள்-32
  • முல்லைத் திணைப் பாடல்கள்-30 அமைந்துள்ளன.

நற்றிணை காட்டும் வாழ்க்கை:

நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி, தன்தலைவனின் வரவைச் சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கமும் காதலன் வரவைப் பல்லி கத்தும் ஓசையை வைத்துச் சகுனம் பார்க்கும் வழக்கமும் அக்காலமக்களிடம் இருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன

நற்றிணைக் கடவுள் வாழ்த்து:

திணை-பாடாண்

துறை-கடவுள் வாழ்த்து

துறைவிளக்கம் :

இந்நூல் என்றும் நின்று நிலவ வேண்டிக் கடவுளை வாழ்த்துவான் எடுத்துக்கொண்ட ஆசிரியர், மாயோனே வேதமுதல்வனென ஆன்றோர் கூறுவராதலின், யாமும் அவனையே வணங்குவோமென்று வாழ்த்துக் கூறாநிற்பது. (இலக்கண விளக்கம்)

“பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே

நாடுங் காலை நாலிரண் டுடைத்தே” (தொல்.பாடாண். நூ.80)

எனப் பெறப்பட்ட கடவுள் வாழ்த்து வகை முதலிய எட்டு வகையினுள் இது கடவுள் வாழ்த்து என்னும் வகையினுள் அடங்கும்.

“வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே” என்னும் விதிபற்றி ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூற்கு ஆசிரியப்பாவாற் கடவுள் வாழ்த்துக் கூறுவாராயினர் என்க. இஃது உலகிற்குப் பயன்பட இறைவனைப் படர்க்கையில் வைத்து வாழ்த்தியபடியாம்.

நற்றிணை:(தோழி தலைமகனிடம் கூறியது)

“அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்

மறுகால் உழுத ஈரச் செறுவின்

வித்தொடு சென்ற வட்டி பற்பல

மீனொடு பெயரும் யாணர் ஊர

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வம் செல்வமென் பதுவே”.- மிளைகிழான் நல்வேட்டனார்

கூற்று வாரியாகப் பாடல்களின் எண்ணிக்கை:

  • தோழிக்கூற்று = 218 பாடல்கள்
  • தலைவிக்கூற்று = 92 பாடல்கள்
  • தலைவன் கூற்று = 90 பாடல்கள்
  • செவிலி தாய் கூற்றுகள் = 11 பாடல்கள்
  • பரத்தை கூற்று = 12 பாடல்கள்
  • பாகன் கூற்று = 1 பாடல் 
  • கண்டோர் கூற்று = 3 பாடல்கள்
  • கூற்று அமையாதது = 1 பாடல்  

முக்கிய அடிகள்:

  • 'சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில்
  • பிறப்புப் பிறிதாகுவ தாயின்
  • மறக்குவென் கொல்என் காதலன் எனவே (397)'
  • கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக்
  • கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
  • ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப்
  • பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே (110)
  • சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
  • புன்கண் அஞ்சும் பண்பின்
  • மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே (210)
  • முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
  • நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் (355)
  • முக்கிய அடிகள்
  • விளையா டாயமோடு வெண்மணல் அழுத்தி
  • மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
  • நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்பப்
  • நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
  • முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும்
  • நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் 
  • நீரின்றி அமையா உலகம் போலத்
  • தம்மின்றி அமையா நம்நயந்து அருளி – (கபிலர்)
  • இளமையிற் சிறந்த வளமையும் இல்லை 
  • சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
  • பிறப்புப் பிரித்து ஆகுவதாயின் 
  • ஒருமுலை இழந்த திருமா உண்ணி 
  • நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
  • செல்வம் அன்று

பதிப்பு வரலாறு:

எட்டுத்தொகை நூல்களில் பழைய உரை இல்லாத ஒரே நூலான நற்றிணை என்னும் இந்நூல் முற்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் என்னும் தமிழறிஞர் இந்நூலின் பல சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து ஒப்பிட்டு ஆய்வுசெய்து முதன்முதலில் புத்துரையுடன் 1915-ம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர் வேறு பல தமிழ்ச் சான்றோரும் உரையுடன் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர்

KEY POINTS TNPSC EXAMS -நற்றிணை
  1. நல் + திணை = நற்றிணை
  2. திணை = நிலம், குடி, ஒழுக்கம்
  3. நற்றிணை என்பதற்கு “நல்ல ஒழுக்கலாறு” என்று பொருள்.
  4. திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் நற்றிணை மட்டுமே.
  5. எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூல்
  6. வேறுபெயர் : நற்றிணை நானூறு
  7. இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  8. இந்நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = திருமால்
  9. இந்நூலினை தொகுப்பிதவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
  10. வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை கூறப்பட்டுள்ளது.
  11. நற்றிணையை “தூதின் வழிகாட்டி” என்பர்.
  12. பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சங்க நூல்கள் எனப் போற்றப்படுவன.
  13. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும்,நல் என்று அடைமொழி பெற்றுப் போற்றப்படுவதும் நற்றிணையே.
  14. நற்றிணை பல்வேறு காலங்களில் புலவர் பலரால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல் ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெளிவாக எடுத்தியம்பும் நூலிது.
  15. இதில் ஐவகைத் திணைகளுக்குமான பாடல்கள் உள்ளன.
  16. இதிலுள்ள பாடல்கள் ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரல்லையும் கொண்டவை.
  17. நற்றிணைப் பாடல்கள் நானூறு; பாடினோர் இருநூற்றெழுபத்தைவர்.
  18. காதலன் பிரிவால் வருந்தும் தலைவி, தலைவன் வரவைச் சுவரில் கோடிட்டு எண்ணும் வழக்கமும்,
  19. காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதும் நம்பிக்கையும்,
  20. காற்பந்து விளையாடும் வழக்கமும் மகளிர் வாழ்வில் இருந்ததை அறிய முடிகிறது.
  21. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய சிற்றிலக்கியமான ‘தூது’ எனும் இலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருகு, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பண்பையும் இந்நூலில் காணலாம்.
  22. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து பாடப்பட்ட நூல் எது? = நற்றிணை
  23. வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை கூறப்பட்டுள்ளது.
  24. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற இலக்கியத்திற்கு வழிகாட்டியாக குருகு, நாரை ஆகியவற்றை தூது விடும் பண்பு இதில் கூறப்பட்டுள்ளது.எனவே இந்நூலினை “தூதின் வழிகாட்டி” என்பர்.
  25. 234ஆம் பாடல் கிடைக்கவில்லை.
  26. “சான்றோர் வருந்திய வருத்தமும்” எனத் தொடங்கும் இறையனார் களவியல் உரை மேற்கோள் பாடல் அது என்பர்.
  27. இந்நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = பின்னந்தூர் நாராயணசாமி
  28. இந்நூலினை முதலில் பதிப்பித்தவர் = பின்னந்தூர் நாராயணசாமி
  29. அதியமான அஞ்சி, அழிசி, ஆய்அண்டிரன். உதியன், ஓரி, காரி,  குட்டுவன், சேந்தன், நன்னன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகிய வேந்தர்களும் குறுநில மன்னர்களும் நற்றினையில் குறிப்பிடப்பெற்றுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)