PARIPAADAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0

                                                                 பகுதி – (ஆ) – இலக்கியம்

    ETTUTHOGAI NOOLGAL-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES - எட்டுத்தொகை:

பரிபாடல்

PARIPAADAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES

பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப்பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது.

பரிபாடலின் உருவம்:

  • திணை = அகமும் புறமும்
  • பாவகை = பரிபாட்டு
  • பாடல்கள் = 70( கிடைத்தவை 22 )
  • புலவர் = 13
  • அடி எல்லை = 25-400

பெயர்க்காரணம்: 

  • பரிந்து வரும் இசையால் ஆன பாடல்கள்.
  • வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பலவகையான் அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாட்டு ஆகும்.
  • தொல்காப்பியர் காலம் வரை கலிப்பாவும், பரிபட்டும் வழக்கில் இருந்தது.

நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும்

    பாடல் சான்ற புலன்நெறி வழக்கம்

    கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்

    உரிய தாகும் என்மனார் புலவர்.

வேறுபெயர்கள்:

  • பரிபாட்டு
  • ஓங்கு பரிபாடல்
  • இசைப்பாட்டு
  • பொருட்கலவை நூல்
  • தமிழின் முதல் இசைபாடல் நூல்

தொகுப்பு:

இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

உரை, பதிப்பு:

பரிமேலழகர் உரை உள்ளது.

நூலை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா

பாடல் பகிர்வு முறை:

திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்

தொருபாட்டு காடுகாட்கு ஒன்று; – மருவினிய

வையை இரு பத்தாறு; மாமதுரை நான்கென்ப

செய்ய பரிபாடல் திறம்

பரிபாடல் நூல் தொகுப்பு:

பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்கள், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல்கள், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல்கள், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.)

ஆனால் இன்று, திருமாலுக்கு 6 பாடல்கள், முருகனுக்கு 8 பாடல்கள், வையைக்கு 8 பாடல்கள் என 22 பாடல்களே உள்ளன.

பதிப்பு வரலாறு:

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்

மு.வ கூற்று:

சங்க காலத்திற்குப் பிறகு பரிபாடல் என்ற செய்யுள் வடிவம் போற்றப்படாமல் போயிற்று.

விருதப்பாட்டு வளர்ந்த பிறகு கலிப்பாவும், பரிபாட்டும் போற்றப்படவில்லை

முக்கிய அடிகள்:

  • மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
  • பூவொடு புரையுந் சீறார் பூவின்
  • இதழகத்து அனைய தெருவம், இதழகத்து
  • அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்
  • தீயினுள் தெறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
  • கல்லினுள் மணியும் நீ! சொல்லினுள் வாய்மை நீ!

50 KEY POINTS TNPSC EXAMS -பரிபாடல்
    1. தொல்காப்பிய விதிப்பை பரிபாட்டு வகையில் அமைந்த ஒரே தொகை நூல் பரிபாடல் மட்டுமே.
    2. தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகை நூல் இதுவே.
    3. பாண்டிய நாட்டை மட்டுமே கூறுகிறது.
    4. பாண்டிய நாட்டை மட்டும் கூறும் நூல்கள் = பரிபாடல், கலித்தொகை
    5. இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினையும் கூறுகிறது.
    6. “கின்று” என்னும் காலம் காட்டும் இடைநிலை முதலில் பரிபாடலில் தான் வருகிறது.
    7. இந்நூல் உலகின் தோற்றம் குறித்து கூறுகிறது.
    8. இந்நூல் இசையோடு பாடப்பட்டது.
    9. இதன் வேறுபெயர் ‘பரிபாட்டு’ ‘ஓங்கு பரிபாடல்’ எனச் சிறப்பிக்கப் பரிபாடல் படும்
    10. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களும் அடங்கியது.
    11. பலவகை அடிகளுக்கும் பரிந்து இடங்கொடுத்து பரிந்து செல்லும் ஓசையையுடைய பரி பாட்டுக்களின் தொகுப்பாக விளங்குவதால் இது ‘பரிபாடல்’ என்று அழைக்கப்படுகிறது.
    12. இந்நூல் 25 பேரெல்லையும் அடி சிற்றெல்லையும் 400 அடி கொண்டதாகும்.
    13. இப்பாடல்களை இயற்றிய புலவர் பெருமக்கள் 13 பேர் ஆவர்.
    14. இதன் பாக்களுக்கு நல்லச்சுதனார், நாகனார் போன்ற பத்து ஆசிரியர்கள் இசை வகுத்துள்ளனர்.
    15. பரிமேலழகர் தன் உரைச்சிறப்பினால் இப்பாடல்களின் பெருமையை உயர்த்தியுள்ளார்.
    16. அறம், பொருள், இன்பம், வீடு என்று நால்வகை உறுதிப் பொருட்களைக் கொண்டது.
    17. இன்பத்தையே பொருளாகக் கொண்டு மலைவிளையாட்டு, புனல் விளையாட்டு முதலியன பற்றிய பாடல்கள் இடம் பெறும் என்று பேராசிரியர் கூறுகின்றார்.
    18. மலையும் ஆறும், ஊரும் பரிபாடலில் வருணிக்கப்படும் என்று இளம்பூரணர் கூறுகின்றார்.
    19. தெய்வவாழ்த்து உட்படக் காமப் பொருள் குறித்து உலகியலைப் பற்றி வரும் என்று நச்சினார்க்கினியர் கூறுவர்.
    20. இச்செய்யுள் வகை பெரும்பாலும் காமம் பற்றி வருவதனால் இதனை இசைப்பாட்டு என்று கூறுவர்.
    21. ஒவ்வொரு செய்யுளின் ஈற்றிலும், அப்பாடலுக்கு இசை வகுத்தவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
    22. பரிபாடல் 70 ஒரு தொகுப்பாக அமைவதே பரிபாடல் நூலாகும். இதனை திருமாலுக்கு 2 ×4 =8,செவ்வேளாகிய முருகனுக்கு – 31, காடு கிழாளாகிய காளிக்கு- 1,யைக்கு – 26,மதுரைக்கு 4, ஆக 70 பரிபாடல்கள் அமைவது மரபு.இன்று நமக்குத் திருமாலுக்குரியதாக -6ம்,முருகனுக்குரியதாக -8ம்,வையையாற்றுக்குரியதாக 8ம், என 22 பாடல்களே கிடைத்துள்ளன.
    23. இந்நூலைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும் யார்யார் என்பது தெரியவில்லை.
    24. இதனை முதன் முதலில் உரையுடன் பதிப்பித்தவர் டாக்டர் உவே.சா. ஆவர்.
    25. பின்னர் பெருமழைப் புலவர் பொ.வேசோமசுந்தரனாகும் உரை எழுதியுள்ளார்.
    26. எட்டுத்தொகையுள் அகப்பொருளையும், புறப்பொருளையும் சேர்த்துக் கூறும் ஒரே நூல் இதுவே.
    27. பாட்டு வகையால் பெயர்பெற்ற நூல்களில் ஒன்று.
    28. அகமும் புறமும் கலந்துள்ளமையால் இந்நூலைப் பொருட் கலவை நூல் என்பர்
    29. இந்நூல் இறையனார் அகப்பொருளுரையில் “எழுபது பரிபாடல்“ எனக் குறிக்கப்பெறுகிறது.
    30. பரிபாடலின் கடவுள் வாழ்த்துப்பாடினார் பெயர் தெரியவில்லை.
    31. “சங்க காலத்திற்குப் பிறகு பரிபாடல் என்ற செய்யுள் வடிவம் போற்றப்படாமல் போயிற்று.
    32. விருத்தப்பாட்டு வளர்ந்த பிறகு கலிப்பாவும் போற்றப் படவில்லை” என்பார் மு.வ.
    33. இந்நூலில் மதுரை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை ஆகிய நகர் வருணனை கூறப்பட்டுள்ளன.
    34. வையை ஆறு போன்ற இயற்கை வருணனைகளும் இடம் பெற்றுள்ளன.
    35. அக்கால மக்களின் பழக்க வழக்கங்கள், ஆடை அணிகள், உணவுமுறை, வழிபாட்டு வகைகள், விழாக்கள் ஆகிய பல்வேறு வாழ்க்கை முறைகளும் அறியப்படுகின்றன.
    36. இதன் பாடல்கள் யாவும் சொற்சுவை, பொருட் சுவைகளில் சிறந்து விளங்குகின்றன.
    37. பொருள்களின் இயற்கை எழில்களையும் நன்கு தெளிவாக்குகின்றன.
    38. இதுவும் தேவாரம் போலவே பண்முறையால் தொகுக்கப்பட்டுள்ளமை தெரிகின்றது.
    39. ஓங்கு பரிபாடல் என்று சிறப்பித்துரைக்கப்பட்டுள்ளது.
    40. துணுக்குப் பாடல் ஒன்று மதுரை மாநகரைத் தாமரைப் பூவிற்கு ஒப்பிட்டுக் கூறும் அழகு இன்றைய நகர அமைப் போடு ஒப்பிட்டுப் பார்த்துச் சுவைத்து இன்புறுதற்குரியது.
    41. இதிலுள்ள வையை பற்றிய பாடல்களை அகமென்றும், ஏனைய வாழ்த்துக்களைப் புறமென்றும் கூறுவர்.
    42. கடவுள் கூடல் மாநகர வருணனை கூறும் இந்நூல் அகம், புறம் என்னும் இரு பொருள்களின் கூடலாகத் திகழக் காணலாம்.
    43. தமிழிசையின் பழமைக்குப் பரிபாடலே முதற்சான்று.
    44. பாண்டியனைப் பற்றி விரிவான செய்திகள் இதில் உள்ளன.
    45. முருகன், திருமால் பற்றிய புராணக் கதைகள் நிறைந்துள்ளன.
    46. புதுப்புனல் விழாவும். மார்கழி நீராட்டு விழாவும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.
    47. இயற்கைக் காட்சிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன.
    Tags:

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)