பெரும்பாணாற்றுப்படை-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0



பகுதி – (ஆ) – இலக்கியம்-பத்துப்பாட்டு

பெரும்பாணாற்றுப்படை

500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை. பேரியாழ் (21 நரம்புகள்) வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனை வெல் வேல் கிள்ளி என்ற சோழ அரசனுக்கும் நாக கன்னிகை பீலிவளை என்பவளுக்கும் பிறந்த தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல். இதை ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர். இந்நூலினைச் சமுதாய பாட்டு எனத் தமிழண்ணல் அவர்கள் குறிப்பிடுவார்கள்

  • பொருள் = ஆற்றுப்படை
  • திணை = புறத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • அடி எல்லை = 500

பெயர்க்காரணம்:

பெரிய யாழ்ப்பாணர்கள் ஆற்றுப்படுத்துவதாலும்,

சிறுபாணாற்றுப் படையை (269 அடி) விட அடியளவில் பெரியதாகையால் (500 அடி) இந்நூல் பெரும்பாணாற்றுப் படை எனப் பெயர் பெற்றது.

தொண்டைமான்:

சோழன் ஒருவனுக்கும் நாகக் கன்னிக்கும் பிறந்தவன் என நச்சினார்கினியர் கூறுகிறார்.

சோழன் நெடுமுடிக்கிள்ளிக்கும் நாக நாட்டரசன் மகள் பீலவள்ளிக்கும் பிறந்தவன் தொண்டைமான் என்கிறது மணிமேகலை.

துரோணர் மகன் அசுவத்தாமனுக்கும், மதனி என்கிற அரக்கன் மகளுக்கும் பிறந்த பல்லவ மன்னனே தொடைமான் என்கிறார் இராகவையங்கார்

KEY POINTS TNPSC EXAMS-PERUMPANATRUPADAI

  1. பாடிய புலவர் = கடியலூர் உருத்திரங் கண்ணனார்
  2. பாட்டுடைத் தலைவன் = தொண்டைமான் இளந்திரையன்
  3. வேறு பெயர்கள்: பாணாறு,சமுதாயப் பாட்டு
  4. நீர்ப்பெயற்று என்னும் ஊரின் பழம் பெயர் “நீர்ப்பாயல்துறை”.
  5. இங்கு மிகப்பெரிய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது.
  6. தொண்டைமானின் தலைநகரம் திருவெகஃகா.
  7. திருவெகஃகா என்பது காஞ்சிபுரம்
  8. யாழின் வருணனை, பாலை நிலத்தில் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தாரும் கொண்டாடும் விழாக்கள் பற்றி கூறுகிறது.
  9. நெல்லரிசி கொண்டு மது தயாரித்தல் பற்றி குறிப்பிடுகிறது.
  10. கி.பி.2-ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுந்தது இந்நூல் என்பது அறிஞர்கள் கருத்து.

முக்கிய அடிகள்:

  • பொழிமலை துறந்த புகைவேய் குன்றத்து
  • பழுமரம் தேடும் பறவை போல
  • மணிவார்த் தன்ன மாயிரு மருப்பின்
  • பொன்வார்த் தன்ன புரியடங்கு நரம்பு
  • முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டி நர்க்கும்
  • வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி
  • புனலோடு மகளிர் இட்ட பொலங்குழை
  • இறைதேர் மணிச்சிரல் இரைசெத்து எரிந்து

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)