பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்தஆசிரியப்பாவாலானது.இது போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூலாகும்.
நூல் | பொருநராற்றுப்படை |
---|---|
ஆசிரியர் | முடத்தாமக்கண்ணியார் |
பாட்டுடைத்தலைவன் | கரிகால் பெருவளத்தான் |
திணை | பாடாண் |
துறை | ஆற்றுப்படை |
பாவகை | ஆசிரியப்பா |
அடிகள் | 248 |
பொருநராற்றுப்படை அமைப்பு:
- பொருநன் போகும் வழி (1 முதல் 13 வரை),
- பாடினி மகிழப் பாடும் பாணன் (16 முதல் 30 வரை),
- நாயின் நாக்கு போன்ற காலடி (31 முதல் 45 வரை),
- கல்லில் நடக்காதே கால் புண்ணாகும் (46 முதல் 59 வரை),
- அடியா வாயில் அடைக நீயும் (60 முதல் 75 வரை),
- என் வருத்தம் தீர வாரி வழங்கினான்(76 முதல் 90 வரை),
- இரவு பகல் தெரியாது இருந்தேன் நான் (95 முதல் 105 வரை),
- ஏர் உழுவது போல சோறுழுத எங்கள் பற்கள் (106 முதல் 120 வரை),
- பரிசு மழையில் நனைந்தோம் (121 முதல் 135 வரை),
- வெண்ணிப் பறந்தலை வென்றவன் (136 முதல் 150 வரை),
- தாயினும் மிகுந்த அன்போடு (151 முதல் 165 வரை),
- தேர் ஏற்றி அனுப்ப தெருவரைக்கும் வருவான் (166 முதல் 177 வரை),
- மயிலாடும் மருத நிலம் (178 முதல் 194 வரை),
- வண்டு பாட மயிலாடும் (195 முதல் 213 வரை),
- செங்கோல் வழுவாச் செல்வன் கரிகாலன் (214 முதல் 231 வரை),
- பூவிரிக்கும் காவிரி வளம் (232 முதல் 24
உரை எழுதியோர்:
- வா.மகாதேவ முதலியார் உரை(1907)
- கா.ஶ்ரீ.கோபாலாச்சாரியார் உரை
- மொ.அ.துரையரங்கனார் திறனாய்வு உரை
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரை(2004).
- திருச்சிராப்பள்ளி ப.மாதேவன் (2021)
KEY POINTS TNPSC EXAMS-PORUNARATRUPADAI:
- ஒருவரைப் போல வேடமிட்டுப் பாடுபவரை பொருநர் என்பர். பொருநராற்றுப்படை போர்க்களம் பாடும் பொருநரை கூறுகிறது.
- பெயர்க்காரணம்:பொருநரைப் புரவலனிடம் பரிசில் பெற்ற பொருநன் ஆற்றுப்படுத்துவதாக அமைந்ததால் பொருநராற்றுப்படை எனப்பட்டது.
- அடி எல்லை = 248(ஆற்றுப்படை நூல்களுள் சிறியது)
- கரிகாற் சோழன், பொருநரை அனுப்பும் போது ஏழு அடி காலால் நடந்து சென்று வழியனுப்புவான்.
- கரிகாலனின் வெண்ணிப்பறந்தலை வெற்றி கூறப்பட்டுள்ளது.
- பொருநர் இசைவிழா, விரலி வருணனை, கரிகாற் சோழனின் விருந்து உபசரிப்பு போன்றவை கூறப்பட்டுள்ளது.
- கரிகாலனின் வலிமையை “வெண்ணித்தாங்கிய வொருவரு நோன்றாள்” எனச் சிறப்பிக்கப்படுகிறது.
- வறுமைக் கோலத்தோடு விளங்கிய ஆடையை நீக்கிப் பாம்பின் தோல் ஒத்த மெல்லிய ஆடையை கரிகாலன் வழங்குவான் எனப் கூறப்படுகிறது.
முக்கிய அடிகள்:
கொள்ளை உழுகொழு ஏய்ப்ப, பல்லே
எல்லையும் இரவும் ஊன்றுகிறது மழுங்கி
ஆறுதலைக் கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை
சாறுகழி வழிநாள் சோறுநசை வறாது
வேறுபுலம் முன்னிய விறகறிபொருந