TNPSC GK குறிப்புகள் தமிழில்-செப்டம்பர் 2023

TNPSC PAYILAGAM
By -
0



TNPSC GK குறிப்புகள் தமிழில்-செப்டம்பர் 2023


ஆதித்யா-எல்1 விண்கலம்:

தென்காசி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த நிகர் ஷாஜி ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் 2023 செப்டம்பர் 02-ல் ஆதித்யா எல்-1 விண்கலமானது BSLVC 57 ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது சூரியனை ஆய்வு செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனை அடுத்து நான்காவது நாடாக இந்தியா இணைந்துள்ளது
இந்திய ரயில்வே வாரிய தலைவர்-முதல் பெண்:

ரயில்வே வாரியத் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண்: இந்திய ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராக ஜெய வர்மா சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ஒரே நாளில் 19,906 மெட்ரிக் டன் எஃகு இரும்புத் தகடுகளை இறக்குமதி செய்து புதிய சாதனை :

வெளிநாடுகளிலிருந்து எஃகு இரும்புத் தகடுகளை ஏற்றிக்கொண்டு ‘எம்.வி. ஐ.வி.எஸ். ஸ்பாரோவ்ஹாக்’ என்ற கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வியாழக்கிழமை (ஆக.31) வந்தடைந்தது. துறைமுகத்தின் மேற்கு கப்பல்தளம் 3-இல் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பலிலிருந்து எஃகு இரும்புத் தகடுகளை இறக்கும் பணி நடைபெற்றது. அப்போது, ஒரே நாளில் 19,906 மெட்ரிக் டன் எஃகு இரும்புத் தகடுகளை இறக்குமதி செய்து புதிய சாதனை எட்டப்பட்டது. இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் ‘எம்.வி. லக்கி’ என்ற கப்பலிலிருந்து 14,993 மெட்ரிக் டன் எஃகு இரும்புத் தகடுகள் இறக்குமதி செய்யப்பட்டதே சென்னை துறைமுகத்தின் அதிகபட்ச சாதனையாக இருந்தது.

உலக சிறந்த வங்கித் தலைவர்கள் பட்டியலில் :

குளோபல் ஃபைனான்ஸ் நிதி விவாகரங்கள் இதழால் வெளியிடப்பட்டுள்ள உலக சிறந்த வங்கித் தலைவர்கள் பட்டியலில் ஆர்பிஐ (RBI) ஆளுநர் சக்திகாந்த் தாஸ் முதலிடம் பிடித்துள்ளார்

சிங்கப்பூர் 9வது அதிபராக தர்மன் சண்முக சுந்தரம் தேர்வாகியுள்ளார்:

சிங்கப்பூர் 9வது அதிபராக தர்மன் சண்முக சுந்தரம் தேர்வாகியுள்ளார். இவர் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சிங்கப்பூரின் 8வது அதிபராகவும், முதல் பெண் அதிபராகவும் ஹமீலா யாகூபின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி தர்மன் சண்முக சுந்தரம் அதிபராக தேர்வாகியுள்ளார்.

சிங்கப்பூர் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் 14.09.23 பொறுப்பேற்கிறார். சிங்கப்பூரின் 8-ஆவது அதிபரும், முதல் பெண் அதிபருமான ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடா்ந்து, அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த மாதம் 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 லட்சம் வாக்குகளில் 17.46 லட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, சிங்கப்பூரின் 9-ஆவது அதிபராக தா்மன் சண்முகரத்னம் தேர்வாகியுள்ளார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) உலகத் தரவரிசை பட்டியல் :

இந்திய செஸ் வீரரான டி.குகேஷ் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)  வெளியிட்டுள்ள உலகத் தரவரிசை பட்டியலின் இந்தியர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

முதல் பல்நோக்கு கடற்பாசி பூங்கா :

இராமநாதபுரம் மாவட்டத்தின் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வளமாவூரில் நாட்டில் முதல் பல்நோக்கு கடற்பாசி பூங்காவிற்கு மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்தியாவின் முதல் முறையாக சூரிய தகடு கூரை இருசக்கர வாகன பாதை:

ஹைதராபாத் நகரில் இந்தியாவின் முதல் முறையாக சூரிய தகடு கூரை இருசக்கர வாகன பாதை அமைக்கப்பட உள்ளது.

இந்தியா தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்துள்ளது

உறக்க நிலைக்குச் சென்ற லேண்டர் :

இஸ்ரோ வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், விக்ரம் லேண்டர் 04.09.2023 8:00 மணி அளவில் உறக்க நிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதற்கு முன், ChaSTE, RAMBHA-LP மற்றும் ILSA ஆகிய கருவிகளும் செயல்பாட்டை நிறுத்தின. அவற்றில் சேகரிக்கப்பட்ட தரவுகள் பூமிக்குக் கிடைத்துவிட்டன. அனைத்து கருவிகளும் அணைக்கப்பட்டுள்ள நிலையில், லேண்டர் ரிசீவர்கள் மட்டும் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரக்யான் உறங்கிவரும் இடத்தினருகே விக்ரம் லேண்டரும் உறக்கநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி நிலவில் சூரிய ஒளி வந்ததும் மீண்டும் செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிஸ்டர் யுனிவர்செல் இந்தியா-2023 (Mrs Universe India):

திருமணமான பெண்களுக்காக நடத்தப்படும் அழகி போட்டியில் மிஸ்டர் யுனிவர்செல் இந்தியா-2023 (Mrs Universe India) பட்டத்தை மாதுரி பாட்லே வென்றுள்ளார். மிஸ் எர்த் இந்தியா-2023 (Miss Earth India) பட்டத்தை பிரியா செயின்னும், மிஸ் இந்தியா-2023 (Miss India) பட்டத்தை நந்தினி குப்தாவும் வென்றுள்ளனர்

தமிகத்தின் முதல் தேனீ பூங்கா:

தமிகத்தின் முதல் தேனீ பூங்காவானது 14.8ஹெக்டர் பரப்பில் அத்திப்பட்டு கிராமத்தில் அமைய இருக்கிறது.

உலகில் முதல் டிஜிட்டல் பாஸ்போர்ட்:

பின்லாந்து நாட்டில் உலகில் முதல் டிஜிட்டல் பாஸ்போர்ட்டானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 850 கோல்கள் அடித்த முதல் வீரர்:

கால்பந்து வரலாற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ  850 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற உலகச் சாதனையை படைத்துள்ளார்

இந்தியாவின் முதல் ட்ரோன் எதிர்ப்பு தொழில் நுட்பமான (Anti Drone System):

இந்தியாவின் முதல் ட்ரோன் எதிர்ப்பு தொழில் நுட்பமான (Anti Drone System) ஹைதரபாத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத் தொழில் நுட்பமானது AI மூலம் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பசுமை நிலைய சான்றிதழ்:

ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடா ரயில் நிலையமானது இந்தியன் கீரின் பில்டிங் கவுன்சிலின் (Indian Green Building Council) பசுமை நிலைய சான்றிதழை பெற்றுள்ளது.

மூன் ஸ்நைப்பர் (Moon Sniper) :

ஜப்பானின் ஜக்ஸா விண்வெளி ஆய்வு நிறுவனமானது நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ள எக்ஸ்-ரே (X-Ray) என்னும் தொலைநோக்கியும், SLIM (Smart Lander for Investigating Moon) என்ற லேண்டரும் கூடிய விண்கலத்தை ஹெச்ஐஐ-ஏ (HII-A) ராக்கெட் உதவியால்  விண்ணில் ஏவியுள்ளது.

படுகர் இனத்தின் முதல் பெண் விமானி:

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த படுகர் இனப்பெண்ணான ஜெயஸ்ரீ இந்திய அளவிலான பைலட் தேர்வில் வெற்றி பெற்று படுகர் இனத்தின் முதல் பெண் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார்.
20-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு 2023:

இந்தோனிசியா ஜகர்தாவில் 20-வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாட்டில் இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவினை மேம்படுத்த பிரதமர் மோடி 12 அம்ச திட்டங்களை வெளியிட்டுள்ளார்
ஜி20 மாநாடு 2023 :

தில்லியில் நடைபெற்றுவரும் ஜி20 மாநாட்டில் ஒருமனதுடன் கூட்டறிக்கை வெளியிட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.சர்வதேச நிதி அமைப்புகளை சீரமைக்க ஜி20 கூட்டமைப்பின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜி20 உச்சி மாநாட்டில், ஆப்ரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக சேர்க்கும் நடைமுறை நிறைவு பெற்று, ஜி20 அமைப்பில் 21வது நாடாக ஆப்ரிக்க யூனியன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பப்ஜியின் இந்திய வடிவமான பிஜிஎம்ஐ (BGMI) ஆன்லைன் கேமின் பிராண்டு தூதுவராக :

பப்ஜியின் இந்திய வடிவமான பிஜிஎம்ஐ (BGMI) ஆன்லைன் கேமின் பிராண்டு தூதுவராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை அறிவித்திருக்கிறது கிராஃப்டான் நிறுவனம். மேலும், ரன்வீர் சிங்கைக் கொண்டே பிளே ப்யூர் என்ற தங்களின் புதிய பிரச்சாரக் காணொளி ஒன்றையும் யூடியூபில் பகிர்ந்திருக்கிறது பிஜிஎம்ஐ

இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம்:

கேரளாவில் திறப்பு:ரூ.3கோடி செலவில் 120அடி நீளத்தில் 5அடுக்கு கண்ணாடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,600அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
19 வயதிலேயே முதல் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றார்:

19 வயதிலேயே முதல் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றார் அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காஃப்,  டிரேசி ஆஸ்டின் மற்றும் செரீனா வில்லியம்ஸூக்கு அடுத்தபடியாக, யுஎஸ் ஓபன் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வெல்லும் இளம்பெண்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்திருக்கிறார் கோகோ காஃப்.

திரவ ஹைட்ரஜனால் இயங்கக்கூடிய உலகின் முதல் மின்சார விமானம்:

திரவ ஹைட்ரஜனால் இயங்கக்கூடிய உலகின் முதல் மின்சார விமானத்தை ஸ்வோனியா உருவாக்கியுள்ளது.

எண்டோபாட் என்ற ரோபோ:

சென்னை ஐஐடி மாணவர்களால் கழிவு நீர் குழாய்கள் மற்றும் குடிநீர் குழாய்களில் ஏற்படும் விரிசல்கள், உடைப்புகளை சரிசெய்ய AI தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய எண்டோபாட் என்ற ரோபோவை உருவாக்கப்பட்டள்ளது.

புவிசார் குறியீடு :

அரிசியின் இளவரசனாக கருதப்படும் கால ஜீரா அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது ஒடிசாவின் கோபுரட் மாவட்டத்தின் கால ஜீரா அரிசி பழங்குடியின மக்களால் பயிரிடப்படுகிறது.
பிரிட்டிஷ் விஞ்ஞானியான இயன் வில்முட் காலமானார்:

குளோனிங் முறையில் டோலி என்ற செம்மறி ஆட்டினை உருவாக்கிய பிரிட்டிஷ் விஞ்ஞானியான இயன் வில்முட் காலமானார்.குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் உயிரினமான டோலி 1996-ல் பிரிட்டனின் எடின்பார்க் பல்கலைக்கழத்தில் உருவாக்கப்பட்டது.

முதல் உலகாளவிய கருத்தரங்கம் (First Global Symposium on Farmers’ Rights):

தில்லியில் விவசாயிகளின் உரிமைகள் தொடர்பான முதல் உலகாளவிய கருத்தரங்கத்தை (First Global Symposium on Farmers’ Rights) குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு துவங்கி வைத்துள்ளார். 2001-ல் கொண்டு வரப்பட்ட பயிர் வகைகளின் பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமைகள் சட்டமானது ஒட்டு மொத்த உலகம் முழுவதும் பின்பற்ற தக்க வகையில் முன்னுதாரணமாக திகழ்வதாக குடியரசுத்தலைவர் தெரிவித்துள்ளார். இச்சட்டத்தின் மூலம் விவசாயிகள் விதைகளை பயன்படுத்தவும், பாதுகாக்கவும், பகிர்ந்த கொள்ளவும், விற்கவும் இயலும். மேலும் விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான விதைகளைப் பதிவு செய்து கொள்ளவும் முடியும்.

வளர்ந்து வரும் தலைவர்கள் (Emerging Leaders List)  பட்டியல் :

டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ள வளர்ந்து வரும் தலைவர்கள் (Emerging Leaders List)  பட்டியலில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தலைவர் ஹனுமன் பீரித் கவுர், பத்திரிக்கையாளரான நந்திதா வெங்கடேசன், கட்டக்கலையில் சிறந்து விளங்கும் வினு டேனியல் ஆகியோர் இடம் பிடித்துள்ளன.

உலகின் சிறந்த 100 நிறுவனங்கள் பட்டியல் (List of top 100 companies in the world) :

டைம் இதழ் & ஸ்டேடிஸ்டா தரவு சேகரிப்பு நிறுவனமானது சுற்றுச்சூழல்,  சமூக, பொருளாதார தாக்கத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 100 நிறுவனங்கள் பட்டியலில் (List of top 100 companies in the world) இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 64 வது இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் முதலிடத்தை  மைக்ரோசாப்ட் நிறுவனமும், இரண்டாவது இடத்தை – ஆப்பிள் நிறுவனமும், மூன்றாம் இடத்தை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் பிடித்துள்ளது.

கின்னஸ் உலக சாதனை :

உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் 4 அடி நீளத் தலைமுடியைக் கொண்ட சிறுவன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் சிடக்தீப் சிங் சாஹல்(15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட கூந்தல் இருந்தது.சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ அதாவது 4 அடி 9.45 அங்குலம். இந்த நிலையில், நீண்ட கூந்தலைக் கொண்ட சாஹல் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

நிபா வைரஸ்:

நிபா வைரஸ் கரோனா விட ஆபத்தானது, கரோனாவை விட நிபா வைரஸால் பாதிப்பு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) எச்சரித்துள்ளது. கடந்த 2018, 2021 ஆம் ஆண்டுகளில் கேரளம் மாநிலம், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவத் தொடங்கியது. இதுவரை நிபா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 17 பேர் இறந்துள்ளனர்.நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் கரோனா நோய்த்தொற்றுடன் ஒப்பிடும்போது மிக அதிகம். கரோனா தொற்று பாதிப்பு இறப்பு விகிதம் இரண்டு முதல் மூன்று சதவிகிதம் வரையில்தான் இருந்தது. ஆனால், நிபாவால் பாதிப்பு இறப்பு விகிதம் 40 முதல் 70 சதவிகிதம் வரை உள்ளது
யஷாேபூமி (Yasho Bhoomi):

டெல்லியின் துவாரகாவில் ரூ.5,400 கோடி மதிப்பீட்டில் 73,000 ச.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள யஷாேபூமி (Yasho Bhoomi) என்னும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்தது சாந்திநிகேதன்

மேற்கு வங்காளத்தின் பீர்பும் மாவட்டத்தில் சாந்திநிகேதன் அமைந்துள்ளது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் கடந்த 1901-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது சாந்திநிகேதன்.சாந்திநிகேதன் யுனஸ்கோ (UNESCO) உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இணைந்ததன் மூலம் இந்தியாவின்  பாரம்பரிய சின்னங்கள் எண்ணிக்கையானது 41-ஆக அதிகரிகத்துள்ளது
இந்தியா யுனஸ்கோ பராம்பரிய தலப்பட்டியல் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது:

யுனஸ்கோ பாரம்பரிய தல பட்டியலில் கர்நாடகத்தின் ஹொய்சாளர்களின் புனித குழுமத்தின மூன்று கோவில்கள் இடம் பிடித்ததுள்ளன. இதன் மூலம் இந்தியா யுனஸ்கோ பராம்பரிய தலப்பட்டியல் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.1. சென்னகேசவ கோயில்-வேலூர்,2. கேசவா கோயில்-சோமநாப்பூர்,3. ஹெய்சலேஷ்வரா கோயில்-ஹலேபிடு

சம்விதான் சதன் :

பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு ‘சம்விதான் சதன்’ எனப் பெயரிடப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.‘சம்விதான் சதன்’ என்பது ‘அரசியலமைப்பு அவை’ என்று தமிழில் பொருள். 

அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றம்:

ஆந்திர மாநில நிர்வாகம், அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படுவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்

ஆக்மென்டடு ரியாலிட்டி மைக்ரோஸ்கோப் (Augmented Reality Microscope):

மருத்துவத் துறையில் புற்றுநோயைக் கண்டறியக் கூடிய வகையில் செய்யறிவு தொழில்நுட்பத்துடன்(AI) கூடிய ஆக்மென்டடு ரியாலிட்டி மைக்ரோஸ்கோப் (Augmented Reality Microscope) உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை இணைந்து இயந்திரக் கற்றல்(Machine Learning), ஆக்மென்டடு ரியாலிட்டி(Augmented Reality) தொழில்நுட்பத்த்தை இணைத்து இதனை உருவாக்கியுள்ளது. புற்றுநோயில் மருத்துவர்கள் கண்டறிய முடியாத அசாதாரண விஷயங்களைக்கூட இது கண்டறியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் புற்றுநோயை மருத்துவர்கள் உறுதி செய்தாலும் இரண்டாவது கருத்தை அதாவது நோயின் துல்லியத்தன்மையை அளிக்கும். இது மருத்துவ நோயியல் நிபுணர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

டிஜிட்டல் வாழ்க்கை தரக்குறியீடு (Digital quality of Life Index 2023) :

சர்சாக் நிறுவனம் (Surfshark Limited) வெளியிட்டுள்ள டிஜிட்டல் வாழ்க்கை தரக்குறியீடு-2023 தரவரிசையில் முதலிடத்தை பிரான்சும், இரண்டாம் இடத்தை பின்லாந்தும், மூன்றாம் இடத்தை டென்மார்க்கும் பிடித்துள்ளன. இத்தரவரிசையில் இந்தியா 52வது இடத்தைப் பிடித்துள்ளது.

எஸ்பிஐ ரிசா்ச் அமைப்பின் ஆய்வறிக்கை : 

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியக் குடும்பங்களின் நிகர சேகரிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 5.1 சதவீதமாக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது சுமாா் 55 சதவீத வீழ்ச்சியாகும். அதே நேரம், முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இந்தியக் குடும்பங்களின் கடன் சுமை கடந்த நிதியாண்டில் இரு மடங்காக அதிகரித்து ரூ.15.6 லட்சம் கோடியாக உள்ளது. குடும்பங்களின் சேமிப்பைப் பொருத்தவரை கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் காப்பீடு, சேம நிதி ஆகியவற்றில் கூடுதலாக ரூ.4.1 லட்சம் முதலீடு செய்யப்பட்டது. கடனைப் பொருத்தவரை கடந்த நிதியாண்டில் இந்தியக் குடும்பங்களின் கடன் சுமை ரூ. 8.2 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் :

(செப். 23) 23.09.23  அதிகாரபூா்வமாகத் தொடங்குகின்றன. அட்டவணைப்படி கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய இந்தப் போட்டிகள், கரோனா தொற்று பரவல் காரணமாக ஓராண்டு தாமதமாக நடைபெறுகிறது. கரோனா காலகட்டத்துக்குப் பிறகு நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகளாக இது அமைகிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் (2021) மொத்தமாக 11,000 போட்டியாளா்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 12,000-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா். போட்டியானது சனிக்கிழமை முதல் அக்டோபா் 8-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரினைச் சேர்ந்த பில்கிஸ் மிர் ஆசிய விளையாட்டு போட்டிகளின் கயாகிங், கேனாேயிங் வகையான துடுப்புப் படகுப் போட்டிகளுக்கான பெண் நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் பெண் நடுவராக பணியாற்ற உள்ளார்.
உலகின் சிறந்த நாடுகள் பட்டியல்:

அமெரிக்காவின் செய்தி மற்றும் உலக அறிக்கை அமைப்பானது வெளியிட்டுள்ள உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்கள் முறையே சுவிட்சர்லாந்து, கனடா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. இப்பட்டியலில் இந்தியா 30வது இடத்தை பிடித்துள்ளது.

டிஜிட்டல் வாழ்க்கை தரக் குறியீடு 2023:

டிஜிட்டல் வாழ்க்கை தரக் குறியீட்டில் முதலிடத்தை பிரான்சும், இரண்டாவது இடத்தை பின்லாந்தும், மூன்றாவது இடத்தை டென்மார்க்கும் வகிக்கின்றன. இக்குறியீட்டை சர்ப்ஷார்க் இணையப் பாதுகாப்பு நிறுவனமானது வெளியிட்டுள்ளது. இக்குறியீட்டில் இந்தியா உலகளவில் 52வது இடத்தை பிடித்துள்ளது. ஆசிய அளவில் முதலிடத்தை மலேசியாவும், 13வது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளது.

உணவுப் பொருள்கள் கெட்டுப்போவதை தடுக்க புதியதொரு பக்பஸ்டர்:

மத்திய உணவு தொழில் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானியான கே.ராஜகோபாலன் உணவுப் பொருள்கள் கெட்டுப்போவதை தடுக்க புதியதொரு பக்பஸ்டர் எனும் புரத பதனப் பொருளை மைசூரு மத்திய உணவு தொழில் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

சீனாவில் நடைபெறும் 23வது ஆசிய கோப்பை விளையாட்டு போட்டி:

சீனாவில் நடைபெறும் 23வது ஆசிய கோப்பை விளையாட்டு போட்டியின் இலச்சினையாக(MASCOT) சென்சென் (Chenchen), காங்காங் (Congcong) லியான்லியான் (Lianlain) என்னும் மூன்று AI ரோபோட் தேர்வு செய்யப்ட்டுள்ளன.

ஊராட்சிக்கு வரி செலுத்துவதற்காக புதிய இணையதளம்: முதல்வர் தொடக்கி வைத்தார்:

தமிழ்நாட்டில் கிராமங்களில் பொதுமக்கள் தாங்களாகவே இணைய வழியில் வரிகளை செலுத்திக்கொள்ள வசதியாக (https://vptax.tnrd.tn.gov.in) புதிய இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் இந்த இணையதளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த புதிய இணையதளத்தின் வாயிலாக ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்து அவர்களுக்கான வரிகளை நெட் பேங்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மற்றும் யுபிஐ மூலம் செலுத்த முடியும். மேலும் பொதுமக்கள் ஊராட்சி செயலரிடம் உள்ள பிஓஎஸ்(POS) எந்திரம் மூலமும் தங்கள் வரிகளை செலுத்திக்கொள்ளலாம்.

19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல்: உலக சாதனையுடன் சாம்பியன்: 

ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் ருத்ராங்ஷ் பாட்டீல், திவ்யான்ஷ் சிங் பன்வா், ஐஸ்வரி பிரதாப் சிங் கூட்டணி 1,893.7 புள்ளிகள் பெற்று உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. 

2023-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் (Best Tourist Village) :

2023-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக (Best Tourist Village) நீலகிரி மாவட்டத்தின் கேத்தி பள்ளத்தாக்கிலுள்ளள உல்லாடா கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்கருக்கு தேர்வானது டோவினோ தாமஸின் -2018 திரைப்படம் :

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது. இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்.இந்நிலையில், இப்படத்தை அதிகாரப்பூர்வமாக இந்தியா சார்பில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப தேர்வு செய்துள்ளனர்.

நேபாளம் அணி 314 அடித்து உலகச் சாதனை:

2019-ல் ஆப்கானிஸ்தான் அணி 278 (T20_CRICKET) அடித்ததே உலகச்சாதனையாக இருந்து வந்துள்ள நிலையில் தற்போது அச்சாதனையை நேபாளம் அணி 314 அடித்து உலகச் சாதனை அடித்து முறியடித்துள்ளது. மங்கோலிய அணியை 41 ரன்களில் சுருட்டி 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும், ஒரு இன்னிங்சில் அதிக சிக்கரும் (26) அடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது நேபாள அணி வீரர் குஷால் மல்லா 34 பந்துதுகளின் சதம் அடித்து 35 பந்துகளில் சதம் அடித்த ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். நேபாள அணியின் மற்றொரு வீரரான தீபேந்திர சிங் அய்ரி 9 பந்துதுகளின் அரைசதம் அடித்த யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையை முறியடித்துள்ளார்.

குளோபல் இன்னோவேஷன் இன்டெக்ஸ் குறியீடு-2023:

உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனமானது 132 நாடுகள் அடங்கியுள்ள உலகளாவிய புத்தாக்கப் பட்டியலில் (Global Innovation Index) முதல் முதலிடத்தை சுவிட்சர்லாந்து பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை ஸ்வீடனும், மூன்றாம் இடத்தை அமெரிக்காவும் பிடித்துள்ளன. இக்குறியீட்டில் இந்தியா 40வது இடத்தை தக்கவைத்துள்ளது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)