பகுதி – (ஆ) – இலக்கியம்-பத்துப்பாட்டு
சிறுபாணாற்றுப்படை
நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படைஎனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது.ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பொருள் = ஆற்றுப்படை
தினை = புறத்திணை
பாவகை = ஆசிரியப்பா
அடி எல்லை = 269
பாடிய புலவர் = நல்லூர் நத்தத்தனார்
பாட்டுடைத் தலைவன் = ஒய்மா நாட்டு நல்லியக்கோடன்
உரை=நச்சினார்க்கினியர் உரை , மு.வை.அரவிந்தன் உரை
சிறுபாணாற்றுப்படை அமைப்பு:
- சிறுப்பாணனின் வழியழகு (1 முதல் 12 அடிகள்),
- விறலியர் அழகு (13 முதல் 30 அடிகள்),
- பசி துரத்த வந்த பாணன் (31 முதல் 50 அடிகள்),
- சங்கம் வளர்த்த தமிழ் மதுரை (51 முதல் 67 அடிகள்),
- உறையூரும் வறிதானது (65 முதல் 83 அடிகள்),
- வள்ளலில் பெரிய வள்ளல் (84 முதல் 99 அடிகள்),
- வாரி வழங்கும் மாரி (100 முதல் 115 அடிகள்),
- பாடும் பணியே பணியாக (116 முதல் 129 அடிகள்),
- மானும் பேனும் பாணனின் மனைவி (130 முதல் 145 அடிகள்),
- நீலமணி பூக்கும் நெய்தல் (146 முதல் 163 அடிகள்),
- வேலூர் விருந்து (164 முதல் 177 அடிகள்),
- அறிவுடையார் வாழும் ஊர் ஆமூர் (178 முதல் 195 அடிகள்),
- நல்லவூர் நல்லியக் கோடன் ஊர் (196 முதல் 212 அடிகள்),
- தகுதியறிந்து தருவான் கொடை (213 முதல் 230 அடிகள்),
- ஈரம் கசியும் இதயம் உடையவன் (231 முதல் 245 அடிகள்),
- வரையாது கொடுக்கும் வான்மழை போன்றவன் (246 முதல் 261 அடிகள்), விரும்பும் பரிசு வேண்டும் மட்டும் (262 முதல் 269 அடிகள்)
கடையெழு வள்ளல்கள்:
சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன; இதுவே கடையெழு வள்ளல்கள் ஆகும்.
1.பேகன்- மயிலுக்குப் போர்வை அளித்தவன் (பொதினி -பழனி)
2.பாரி - முல்லைக்குத் தேர் தந்தவன் (பறம்பு மலை)
3.காரி - (திருக்கோவிலூர்) ஈர நன்மொழி கூறியவன் (councilman)
4.ஆய் - நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன் (பொதிகை மலை)
5.அதியமான் - நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன் (தர்மபுரி)
6.நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்
7.ஓரி -(கொல்லிமலை) தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன்.
KEY POINTS TNPSC EXAMS-SIRUPANATRUPADAI
- சிறுபாணாற்றுப்படையில் 31-50 வரிகளில் பாணன் நடந்து செல்லும் பாதை குறிப்பிடப்படிகிறது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட உவமைகளை இந்நூலின் ஆசிரியர் கையாண்டுள்ளதனால் இந்நூலினைச் " சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை" எனத் தக்கயாகப்பரணி உரையாசிரியர் குறிப்பிடுகிறார்
- தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் இந்நூலை “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை” என்கிறார்.
- திண்டிவனப் பகுதி ஒய்மா நாடு ஆகும்.
- நல்லியக்கோடனின் தலைநகரம் “கிடங்கில்”
- இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது.
- வேளாளர் வீடுகளில் நாய் வளர்த்ததைப் போல, உமணர்கள் வீட்டில் குரங்குகளை வளர்த்தனர்.
முக்கிய அடிகள்:
- பன்மீன் நடுவே பால்மதிபோல
- இன்நடை ஆயமொடு இருந்தோன்
- முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
- மடமா நோக்கின் வாணுதல் விறலியர்
- தமிழ்நிலை பெற்ற தாங்கறு மரபின்
- மகிழ்நனை மறுகின் மதுரை
- எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம்
- “மடமான் நோக்கில் வாள்நுதல் விறலியர்
- நடை மெலிந் தசைஇ நல் மென் சீறடி
- கல்லா இளையர் மெல்லத் தைவர
- பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
- இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ”