TNPSC TAMIL NOTES- MARUTHAKASI TAMIL PDF வாழ்க்கை குறிப்பு:
ஊர் : மேலக்குடிகாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.'
பெற்றோர் : அய்யம்பெருமாள் உடையார் - மிளகாயி அம்மாள்.
மனைவி : தனக்கோடி அம்மாள்.
ஆசிரியர் : ராசகோபால ஐயர்.காலம் :
பிறப்பு : பிப்ரவரி 13, 1920-
இறப்பு : நவம்பர் 29, 1989
சிறப்பு பெயர் : திரைக்கவித் திலகம்
TNPSC TAMIL NOTES- MARUTHAKASI TAMIL PDF ஆசிரியர் குறிப்பு: தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.
TNPSC TAMIL NOTES- MARUTHAKASI TAMIL PDF கல்வி: உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார் பின்பு, கும்பகோணத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார்.
TNPSC TAMIL NOTES- MARUTHAKASI TAMIL PDF திருமண வாழ்க்கை: 1940 ஆம் ஆண்டில் திருமணமானது.மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளார்கள்.
TNPSC TAMIL NOTES- MARUTHAKASI TAMIL PDF திரைப்பயணம்:கல்லூரி படிப்பிற்குப் பிறகு "தேவி நாடக சபையின்" நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார்.எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர்.கருணாநிதி எழுதிய மந்திரிகுமாரி என்ற நாடகத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.
TNPSC TAMIL NOTES- MARUTHAKASI TAMIL PDF முதல் பாடல்:
1949-இல் சேலம் மாடர்ன் தியேட்டரின் மாயாவதி என்ற படத்திற்கு
பெண் எனும் மாயப் பேயாம் ....
பொய் மாதரை என் மனம் நாடுமோ ....
என்று தொடங்கும் பாடலே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.
TNPSC TAMIL NOTES- MARUTHAKASI TAMIL PDF சிறப்பு : "கலைமாமணி" பட்டம் பெற்றுள்ளார்."துணைவன்" படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார்.“மருதமலை மாமணியே முருகையா” பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றது.“திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் "குடந்தை வாணி விலாச சபையினர்".ஜகம்புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே என்று 53 வரிகளில் ராமாயணத்தை சுருக்கமாக எழுதினார் .
TNPSC TAMIL NOTES- MARUTHAKASI TAMIL PDF நினைவை விட்டு அகலாத சில பாடல்கள்:
- கடவுள் என்னும் முதலாளி ( விவசாயி )
- சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா…( நீலமலைத் திருடன் )
- ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே ( பிள்ளைக்கனியமுது )
- காவியமா? நெஞ்சின் ஓவியமா? ( பாவை விளக்கு )
- முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல ( உத்தம புத்திரன் )
- கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த ( தூக்குத் தூக்கி )
- சமரசம் உலாவும் இடமே ... (ரம்பையின் காதல் 1939)
- சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு ( ராஜா ராணி )
- ஆளை ஆளைப் பார்க்கிறார் ( ரத்தக்கண்ணீர் )
- ஆனாக்க அந்த மடம்… ( ஆயிரம் ரூபாய் )
- கோடி கோடி இன்பம் பெறவே ( ஆட வந்த தெய்வம் )
- வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே ( மல்லிகா )
TNPSC TAMIL NOTES- MARUTHAKASI TAMIL PDF பாடல்கள் நாட்டுடமை:
மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும் மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.
கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும் ரூ 5 லட்சத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.
பகுதி – (இ) – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
மரபுக்கவிதை: தொடர்பான செய்திகள் அடைமொழி பெயர்கள்
- முடியரசன்- TNPSC TAMIL NOTES MUDIYARASAN
- வாணிதாசன்-TNPSC TAMIL NOTES VANIDASAN
- சுரதா-TNPSC TAMIL NOTES SURATHA
- கண்ணதாசன்-TNPSC TAMIL NOTES KANNADASAN
- உடுமலை நாராயணகவி,TNPSC TAMIL NOTES- UDUMALAI NARAYANA KAVI
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -TNPSC TAMIL NOTES-PATTUKOTTAI KALYANASUNDARAM TAMIL PDF
- மருதகாசி .-TNPSC TAMIL NOTES MARUTHAKASI TAMIL PDF