TODAY CURRENT AFFAIRS IN TAMIL 02.09.2023

TNPSC PAYILAGAM
By -
0


  TODAY CURRENT AFFAIRS IN TAMIL 02.09.2023:

  1. வெளிநாடுகளிலிருந்து எஃகு இரும்புத் தகடுகளை ஏற்றிக்கொண்டு ‘எம்.வி. ஐ.வி.எஸ். ஸ்பாரோவ்ஹாக்’ என்ற கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வியாழக்கிழமை (ஆக.31) வந்தடைந்தது. துறைமுகத்தின் மேற்கு கப்பல்தளம் 3-இல் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பலிலிருந்து எஃகு இரும்புத் தகடுகளை இறக்கும் பணி நடைபெற்றது. அப்போது, ஒரே நாளில் 19,906 மெட்ரிக் டன் எஃகு இரும்புத் தகடுகளை இறக்குமதி செய்து புதிய சாதனை எட்டப்பட்டது. இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் ‘எம்.வி. லக்கி’ என்ற கப்பலிலிருந்து 14,993 மெட்ரிக் டன் எஃகு இரும்புத் தகடுகள் இறக்குமதி செய்யப்பட்டதே சென்னை துறைமுகத்தின் அதிகபட்ச சாதனையாக இருந்தது.
  2. இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஆட்சிக்குழு தலைவராக நடிகர் மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் தலைமையகம் மகாராஷ்டிராவின் புனேவில் அமைந்துள்ளது.
  3. பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து இருந்து இன்று(சனிக்கிழமை) காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த வெண்கலத்துடன் சோலார் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் உள்ளிட்ட 7 வகையான ஆய்வுக்கருவிகள் சேர்ந்து அனுப்பப்பட்டன.-ஆதித்யா-எல்1 விண்கலம் அடிப்படை தகவல்கள்
  4. முன்னாள் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந் தலைமையில் ஓரே நாடு, ஓரே தேர்தல் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது கடந்த 1967 வரை ஒரே நேரத்தில் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துள்ளது.
  5. ஜிஎஸ்டி (GST) வசூல் நடப்பாண்டான 2023 ஆகஸ்ட் மாத சரக்கு சேவை வரி வசூலானது 1.59 கோடியாக உள்ளது. கடந்த 2022 ஆகஸ்ட் மாத சரக்கு சேவை வரி வசூலை விட 11% அதிகம் கிடைத்துள்ளது.
  6. என் ரசீது, என் உரிமை (மேரா பில், மேரா அதிகார்) என்னும் திட்டமானது ஜி.எஸ்.டி.குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு பரிசு வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டது.
  7. குளோபல் ஃபைனான்ஸ் நிதி விவாகரங்கள் இதழால் வெளியிடப்பட்டுள்ள உலக சிறந்த வங்கித் தலைவர்கள் பட்டியலில் ஆர்பிஐ (RBI) ஆளுநர் சக்திகாந்த் தாஸ் முதலிடம் பிடித்துள்ளார்
  8. உலக வங்கியானது வெளியிட்டுள்ள 2021 தரவுகளின் அடிப்படையில் பொருளாதார சக்தியில் உலகின் 5வது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது இந்தியாவில் 74% ஆரோக்கியமான உணவு கிடைக்காத மக்களின் விகிதமாக உள்ளது. இந்தியாவில் ஆரோக்கியமான உணவின் விலை 3.07 டாலராக உள்ளது
  9. சிங்கப்பூர் 9வது அதிபராக தர்மன் சண்முக சுந்தரம் தேர்வாகியுள்ளார். இவர் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சிங்கப்பூரின் 8வது அதிபராகவும், முதல் பெண் அதிபராகவும் ஹமீலா யாகூபின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி தர்மன் சண்முக சுந்தரம் அதிபராக தேர்வாகியுள்ளார்.
  10. அயர்லாந்தில் உள்ள கிரேஸ்டோன்ஸ் என்ற நகரத்தில் குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஸ்மார்ட்ஃபோன் களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. அதுவும் இன்று குழந்தைகளின் பெரும் பொழுதுபோக்கு ஸ்மார்ட்ஃபோன் தான். சில பெற்றோர்களே குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனை கொடுத்து பழக்கப்படுத்துகின்றனர். 2021 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகத்தில் 10 வயது வரையுள்ள குழந்தைகளில் 5ல் 2 பங்கினர் ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ளனர். 12 வயதுகளில் 71%, 14 வயது வரையுள்ள குழந்தைகளில் 91% பேர் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கின்றனர்.
  11. இந்திய செஸ் வீரரான டி.குகேஷ் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)  வெளியிட்டுள்ள உலகத் தரவரிசை பட்டியலின் இந்தியர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)