TODAY CURRENT AFFAIRS IN TAMIL 03.09.2023

TNPSC PAYILAGAM
By -
0

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 03.09.2023:

  1. ஹாக்கி ஃபைவ்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஏஎச்எஃப் சாா்பில் ஓமனின் சலாலா நகரில் ஹாக்கி ஃபைவ்ஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வந்தது.
  2. இராமநாதபுரம் மாவட்டத்தின் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வளமாவூரில் நாட்டில் முதல் பல்நோக்கு கடற்பாசி பூங்காவிற்கு மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா அடிக்கல் நாட்டியுள்ளார்.
  3. மும்பையிலுள்ள உள்ள மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் புராஜக்ட் 17 ஆல்ஃபா (பி17A) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்திய கடற்படைக்காக 7வது மற்றும் கடைசி போரக்கப்பலான மகேந்திரகிரி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  4. ஹைதராபாத் நகரில் இந்தியாவின் முதல் முறையாக சூரிய தகடு கூரை இருசக்கர வாகன பாதை அமைக்கப்பட உள்ளது.
  5. 1919-ல் தொடங்கப்பட்ட PIB என்ற Press Information Bureau-இன் முதன்மை இயக்குநர் ஜெனரலாக மணீஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்
  6. AIR (All India Radio) மற்றும் NSD (News Service Division)யின் முதன்மை இயக்குநராக வசுதா குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  7. U-WIN என்னும் தடுப்பூசி தளமானது டிஜிட்டல் முறையில் தடுப்பூசி விவரம் நிர்வகிக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
  8. அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாகாணமானது அக்டோபர் மாதத்தினை இந்து பாரம்பரிய மாதம் (Hindu Heritage Month) என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
  9. இந்தியா தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்துள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)