TODAY CURRENT AFFAIRS IN TAMIL 04.09.2023

TNPSC PAYILAGAM
By -
0

 


 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 04.09.2023:

  1. மத்திய அரசின் கெளரவ நிதி உதவித் திட்டம் : விவசாயிகளுக்களுக்காக மத்திய அரசின் கெளரவ நிதி உதவித் திட்டதின் கீழ் வழங்கப்பட்ட 14-ஆவது தவணைத் தொகையில் தமிழகத்தை விட கேரளா முன்னிலையில் உள்ளது. இதில் கேரளாவானது 23.40 லட்சம் பயனாளிகளையும் தமிழகமானது 20.95 லட்சம் பயனாளிகளையும் கொண்டுள்ளது.
  2. கும்பகோணத்தில் சுவாமி மலையில் உருவான நடராஜர் சிலையானது தில்லி பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்படத்தில் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையாக அமைய உள்ளது. இதன் உயரம் 28அடியாகவும், அகலம் 21 அடியாகவும், எடை 18டன்னனுடன் காணப்படுகிறது.
  3. நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களுக்கான திட்டமிடலுக்கும், அமல்படுத்துவதற்கும் பிரதமர் விரைவு சக்தி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  4. எம்சிசி(MCC)யின் 94வது முருகப்பா தங்ககோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியன் இரயில்வே அணியானது சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
  5. தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இந்திய முழுவதும் 75 பேர் தேர்வானதில் தமிழகத்திலிருந்து 4 பேர் தேர்வாகியுள்ளன.1. டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்,2. எஸ். மாலதி,3. முனைவர் எஸ்.பிருந்தா,4. எஸ். சித்திரகுமார்

Post a Comment

0Comments

Post a Comment (0)