TODAY CURRENT AFFAIRS IN TAMIL 05.09.2023

TNPSC PAYILAGAM
By -
0



  TODAY CURRENT AFFAIRS IN TAMIL 05.09.2023:

  1. கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2023 :செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை க. ராமசாமிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிக் கௌரவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.9.2023) தலைமைச் செயலகத்தில், 2023-ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் க. ராமசாமிக்கு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவச்சிலையும் வழங்கிக் கௌரவித்தார்.-தமிழக அரசு விருதுகள்: 2023
  2. 1.87 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.181 கோடி நிவாரணம் : கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைவாக மழை பெய்த காரணத்தால், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகா், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக, 3.52 லட்சம் ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்ட வேளாண் பயிா்கள் 33 சதவீதத்துக்கு மேல் பாதிப்புக்கு உள்ளானது. வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 275 விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி அளவுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
  3. உறக்க நிலைக்குச் சென்ற லேண்டர் : இஸ்ரோ வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், விக்ரம் லேண்டர் 04.09.2023 8:00 மணி அளவில் உறக்க நிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதற்கு முன், ChaSTE, RAMBHA-LP மற்றும் ILSA ஆகிய கருவிகளும் செயல்பாட்டை நிறுத்தின. அவற்றில் சேகரிக்கப்பட்ட தரவுகள் பூமிக்குக் கிடைத்துவிட்டன. அனைத்து கருவிகளும் அணைக்கப்பட்டுள்ள நிலையில், லேண்டர் ரிசீவர்கள் மட்டும் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரக்யான் உறங்கிவரும் இடத்தினருகே விக்ரம் லேண்டரும் உறக்கநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி நிலவில் சூரிய ஒளி வந்ததும் மீண்டும் செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.-இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் 2023
  4. ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) இன்னோவேசன் போர்ம் கூட்டத்தில் சாந்தா தெளதமிற்கு உலக கண்டுபிடிப்பு விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  5. திருமணமான பெண்களுக்காக நடத்தப்படும் அழகி போட்டியில் மிஸ்டர் யுனிவர்செல் இந்தியா-2023 (Mrs Universe India) பட்டத்தை மாதுரி பாட்லே வென்றுள்ளார். மிஸ் எர்த் இந்தியா-2023 (Miss Earth India) பட்டத்தை பிரியா செயின்னும், மிஸ் இந்தியா-2023 (Miss India) பட்டத்தை நந்தினி குப்தாவும் வென்றுள்ளனர்
  6. பெண்களுக்குகான ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  7. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் “எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2022-23 முதல் 2025-26 வரை இத்திட்டத்திற்கு ரூ.4800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.- எழுச்சிமிகு கிராமங்கள் திட்டம் 
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 5 

சர்வதேச தொண்டு நாள் : நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய அனைத்து வடிவங்களிலும் பரிமாணங்களிலும் வறுமையை ஒழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி சர்வதேச தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஆசிரியர் தினம் (இந்தியா) :இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. பொறுப்புள்ள நபர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் முயற்சிகளை இந்த நாளில் நாங்கள் பாராட்டுகிறோம் மற்றும் அங்கீகரிக்கிறோம்.

வ.உ.சி.யின் 152-வது பிறந்த நாள்: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை - பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 05.09.1872-ல் மகனாகப் பிறந்த வ.உ.சி, தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர்.  ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை. அடியோடு ஒழித்திட சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார்.நம் தேசத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தும் அயராது பாடுபட்டும். தாய் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து, மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)