TODAY CURRENT AFFAIRS IN TAMIL 07.09.2023
- தமிழ்நாட்டின் GST பங்கீட்டிற்கான தீர்வு முறையை ஆராய அரவிந்த் சுப்ரமணியன் தலைமையில் 5 பேர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.-தமிழ்நாட்டின் FDI (அந்நிய நேரடி முதலீடு) 2022-23
- நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் மூன்று மதங்கள் சங்கமிக்கும் நெய்தல் பூங்காவானது அமைக்கப்பட உள்ளது.
- 4,000 மெகா வாட் திறனில் பேட்டரி மின் சேமிப்பகம் அமைக்க தேவைப்படும் மூலதனச் செலவில் 40% சாத்த்திய கூறுகளின் ஆய்வு நிதிக்கு ரூ.3,760 கோடியானது ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் மின் உற்பத்தியானது சூரிய மின் சக்தி மூலம் 71 ஜிகா வாட் மின்சாரமும், காற்றாலை மின் உற்பத்தி மூலம் 40 ஜிகா வாட் மின்சாரமும், நீர் மின் உற்பத்தி மூலம் 25% மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
- உலக சுகாதர நிறுவனத்தின் (WHO) பாரம்பரிய மருத்துவத்தினை (Global Traditional Medicine) குஜராத் பிரகடனம் சார்ந்ததாகும். குஜராத் மாவட்டம், ஜாம்நகரில் பாரம்பரிய மருத்துவம் மையமானது அமைக்கப்பட்டுள்ளது
- அஸ்லாமின் பிரம்மபுத்திரா நதியை சுற்றியுள்ள பகுதியில் காணப்படும் சோக்குவா அரிசி எனப்படும் மந்திர அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல் 2023
- மகேந்திரசிங் தோனி ஸ்வராஜ் டிராக்டரிகளுக்கான (Swaraj Tractors) தூதராக (Ambassador) நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- இந்தியாவின் முதல் ட்ரோன் எதிர்ப்பு தொழில் நுட்பமான (Anti Drone System) ஹைதரபாத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத் தொழில் நுட்பமானது AI மூலம் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மத்திய கல்வி அமைச்சகமானது ஆசிரியர்களுக்கான பயிற்சி அளிக்கும் திட்டமான மிஷன் மாளவியா (Mission Malaviya) திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
- நாஸ்காம் (Nasscom) அமைப்பின் தலைவராக ராஜேஷ் நம்பியார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- அஜர்பைஜான், பாகுவில் நடைபெற்ற ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. சீனா முதலிடமும், உக்ரைன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
- தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. தென்கொரியா
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 7
பிரேசிலின் சுதந்திர தினம் :பிரேசிலின் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7 அன்று தேசத்தின் பிறப்பை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 7, 1822 இல், பிரேசில் போர்த்துகீசியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது.1889 இல் பிரேசில் முடியாட்சி முறையுடன் முடிவடைந்து குடியரசாக மாறியது, ஆனால் செப்டம்பர் 7 ஐ அதன் சுதந்திர தினமாக வைத்திருந்தது.
நீல வானத்திற்கான சர்வதேச சுத்தமான காற்று தினம் (International Day of Clean Air for Blue Skies): செப். 7ல் ஐ.நா., சார்பில் நீல வானத்துக்கான சுத்தமான காற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது.2019ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA), அதன் நிலையான வளர்ச்சி குறித்த தனது எழுபத்து நான்காவது அமர்வின் 52 வது நிறைவு கூட்டத்தில், ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் செப்டம்பர் 7ம் தேதி நீல வானத்திற்கான சர்வதேச சுத்தமான காற்று தினம் அனுசரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. "அனைவருக்கும் சுத்தமான காற்று" என்ற கருப்பொருளுடன் 2020 ஆம் ஆண்டின் முதல் சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது.கருப்பொருள்: Together Clean Air
சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம் (The International Day of Police Corperation) : என்பது ஆண்டுதோறும் செப்டம்பர் 7 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரிப்பு ஆகும். இது இன்டர்போல் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையிலும், அமைதி, பாதுகாப்பு மற்றும் நீதியை பராமரிப்பதில் உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்கத்தின் பங்கை முன்னிலைப்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 7 டிசம்பரில் அதன் 77 வது அமர்வின் போது செப்டம்பர் 2022 ஐ சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினமாக அறிவித்தது. செப்டம்பர் 7, 2023 அன்று, இன்டர்போலின் 100 வது நிறுவன ஆண்டு நிறைவை ஒட்டி தொடக்க விழா நடைபெற்றது. காவல்துறையில் பெண்களின் முக்கிய பங்கு குறித்து இது கவனம் செலுத்தியது.உலகளாவிய பாதுகாப்பில் உலகின் சட்ட அமலாக்க சமூகம் வகிக்கும் முக்கிய பங்கையும், குற்றச் செயல்களைத் தடுப்பதிலும் எதிர்த்துப் போராடுவதிலும் காவல்துறை மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு இடையிலான சர்வதேச ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதே சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினத்தின் முக்கிய குறிக்கோளாகும்.– கருப்பொருள்: Women in Policing.