TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11.09.2023:
- 2023-ஆம் ஆண்டு இந்தியா தனது ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பினை தில்லியில் நடைபெற்ற G20 18வது உச்சி மாநாட்டில் பிரேசிலிடம் ஒப்படைத்துள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிராவில் 2024-ம் ஆண்டிற்கான ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
- 19வது உலகக் கோப்பை கூடைப் பந்து போட்டியின் (Basketball World Cup) இறுதி ஆட்டத்தில் ஜெர்மெனி செர்பியாவினை வென்று முதல் முறையாக சாம்பியனாகி உள்ளது. இப்போட்டியினை ஜப்பான், பிலிப்பைனஸ், இந்தோனிசியா போன்ற நாடுகள் இணைந்து நடத்தியுள்ளன.
- பூடானில் நடைபெற்ற 8வது யு-16 தெற்காசிய கால்பந்து போட்டியில் ((U-16 South Asian Football) இந்தியா ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2வது இடத்தை வங்கதேசம் பிடித்துள்ளது.
- யுஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் (US Open Grand Slam) டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ கெளஃப் எனும் சாம்பியன் பட்டமான கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்
- மெக்சிக்கோவில் நடைபெற்ற உலக வில்வித்தை போட்டியின் (World Archery Championship) ஆடவர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் பிரதமேஷ் ஜவஹர் வெள்ளியை கைப்பற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
- ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாட்டில் அமைக்கப்பட்ட எண்ம இந்தியா கண்காட்சியில் கீதா ஜிபிடி, உமாங்க் கைபேசி செயலி, இ-சஞ்வீனி போன்ற முன்னெடுப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
- கூகுள் மென்பொறியாளரான சுகுரு சாய் வினோத்தால் உருவாக்கப்பட்ட கீதா ஜிபிடி (Gita GPT) மூலம் பகவத்கீதை பற்றிய அறிய முடியம்.
- உமாங் கைபேசி செயலி (UMANG app): வெளி நாடுகளில் உள்ள இந்திய மாணவர்கள், இந்தியர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இந்திய அரசின் சேவை கிடைக்க வடிவமைக்கப்பட்டது.
- G20 கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியால் இந்தியா-மத்திய கிழக்கு -ஐரோப்போ பொருளாதார வழித்தடமானது துவக்கி வைத்துள்ளார்.
- G20 கூட்டமைப்பு மாநாட்டில் சர்வதேச அளவில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20% அதிகரிப்பதற்கான உயரி எரிபொருள் கூட்டமைப்பானது (Global Biofuel Alliance) பிரதமர் மோடி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
- வானிலை தொடர்பான தகவல்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டமான G20 சுற்றுச்சூழல், பருவநிலை செயற்கைக்கோள் கண்காணிப்பு திட்டத்தினை பிரதமர் மோடி G20 கூட்டமைப்பு மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
- திரவ ஹைட்ரஜனால் இயங்கக்கூடிய உலகின் முதல் மின்சார விமானத்தை ஸ்வோனியா உருவாக்கியுள்ளது.
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - 11 செப்டம்பர்
மகாகவி தினம் Mahakavi Day :பாரதியாரின் நூற்றாண்டு தினத்தினை முன்னிட்டு ஆண்டு தோறும் செப்டம்பர் 11 மகாகவி தினமாக அனுசரிக்கப்படுகிறது.சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினமான செப்டம்பர் 11-ஐ மகாகவி தினமாக தமிழக அரசால் அறிவித்துள்ளது.
பாரதியார் காலம் – 11.12.1882 – 11.09.1921
9/11 நினைவு நாள்:இந்த ஆண்டு தேசிய சேவை மற்றும் நினைவு தினத்தின் 20வது ஆண்டு விழா அல்லது 9/11 நாள் அனுசரிக்கப்படுகிறது. செப்டம்பர் 11, 2001 அன்று கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மற்றவர்களுக்கு உதவ இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
தேசிய வன தியாகிகள் தினம்:செப்டம்பர் 11 ஆம் தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, இதன் காரணமாக அந்த தேதி தேசிய வன தியாகிகள் தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 1730 ஆம் ஆண்டில், இந்த நாளில், அமிர்தா தேவி தலைமையிலான பிஷ்னோய் பழங்குடியினரின் 360 க்கும் மேற்பட்ட மக்கள், மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மரங்களை காப்பாற்ற அவர்கள் நடத்திய போராட்டத்தால், ராஜஸ்தானின் கெஜர்லியில் அரசரின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டனர்.
உலக முதலுதவி தினம்:இது செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது மற்றும் இந்த ஆண்டு அது செப்டம்பர் 11 அன்று வருகிறது. நெருக்கடிகளின் போது முதலுதவி எவ்வாறு உயிர்களைக் காப்பாற்றுவது என்பது குறித்த விழிப்புணர்வை இந்த நாள் பொதுமக்களிடையே ஏற்படுத்துகிறது. சர்வதேச கூட்டமைப்பின் படி, முதலுதவி அனைத்து மக்களுக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் மற்றும் வளர்ச்சி சமூகங்களின் முக்கிய பகுதியாக இருக்க வேண்டும்.
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: