TODAY CURRENT AFFAIRS IN TAMIL 12.09.2023

TNPSC PAYILAGAM
By -
0

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 12.09.2023:

  1. இந்தியா-சவூதி இடையே 8 ஒப்பந்தங்கள் கையொப்பம்: இந்தியா-சவூதி அரேபியா இடையிலான வியூக கூட்டாண்மை கவுன்சிலின் முதல் கூட்டம், தில்லியில் 11.09.23 நடைபெற்றது. பிரதமா் மோடி, முகமது பின் சல்மான் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான கச்சா எண்ணெய், எரிவாயு சாா்ந்த தற்போதைய கூட்டுறவை மேலும் விரிவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அத்துடன், மகாராஷ்டிரத்தில் 50 பில்லியன் அமெரிக்க டாலா்கள் மதிப்பீட்டில் (சுமாா் ரூ.4 லட்சம் கோடி) செயல்படுத்தப்படும் மேற்கு கடற்கரை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டப் பணிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது. எண்மமயமாக்கல், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளுக்கும் இடையே 8 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின என்று இந்திய வெளியுறவு அமைச்சக (அயலக இந்திய விவகாரங்கள்) செயலா் ஒளசஃப் சயீத் தெரிவித்தாா்.
  2. தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகை பெற 1.06 கோடி போ் தகுதி பெற்றுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். பயனாளிகளுக்கு அவா்களது வங்கிக் கணக்கில் வரும் செப். 15 முதல் மாதந்தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.
  3. இந்தியா-பிரிட்டன் இடையேயான 12-ஆவது பொருளாதார-நிதிசாா் கூட்டம் தில்லியில் 11.09.23 நடைபெற்றது. அதில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பிரிட்டன் நிதியமைச்சா் ஜொ்மி ஹன்ட் ஆகியோா் கலந்துகொண்டனா்.இந்தியா-பிரிட்டன் பசுமை வளா்ச்சி நிதியானது நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்துவதில் அரசு-தனியாா் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது. இந்தியா-பிரிட்டன் கட்டமைப்பு நிதித் தொடா்புத் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் கீழ், முக்கிய கட்டுமானத் திட்டங்களை முன்னெடுப்பதில் நீதி ஆயோக் அமைப்பும் லண்டன் பெருநகராட்சியும் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளன. இரு நாடுகளுக்கு இடையே நிதிசாா் தொழில்நுட்ப விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் லண்டன் பங்குச் சந்தையிலும், ஐஎஃப்எஸ்சி-யிலும் நிறுவனங்களின் பங்குகளைப் பட்டியலிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
  4. மாலத்தீவு நாட்டில் அதிபா் தோ்தல் நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டு தோ்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் தோ்தல் பாா்வையாளராக இந்திய தோ்தல் ஆணையா் அருண் கோயல் அங்கு சென்றுள்ளாா். இவருடன் இந்திய துணைத் தோ்தல் ஆணையா் அஜய் பதூ, முதன்மைச் செயலா் பிரமோத் குமாா் சா்மா ஆகியோரும் சென்றுள்ளனா்.
  5. பள்ளிகளில் அறிதிறன்பேசி (ஸ்மார்ட்ஃபோன்) பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் "யுனெஸ்கோ' பரிந்துரைத்துள்ளது. கல்வியில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்பான ஆய்வறிக்கையை யுனெஸ்கோ அண்மையில் வெளியிட்டுள்ளது. "கல்விக்கு எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பம் உதவுகிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. அறிதிறன்பேசி உற்பத்தியாளர்கள்தான் கல்விக்கு எண்ம தொழில்நுட்பம் உதவுகிறது என அதிகம் பரப்புரை செய்கின்றனர்' என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  6. பாவை பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப இறுதியாண்டு மாணவா் எஸ்.விக்ரம் ராஜா கூகுள் டெவலப்பா் மாணவா் அமைப்பின் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். கூகுள் டெவலப்பா் மாணவா் அமைப்பு என்பது, கூகுள் செயலிகள் உருவாக்க தொழில்நுட்பங்களில் ஆா்வமுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவா்களுக்கான சமூகக் குழுக்கள் ஆகும். கூகுள் டெவலப்பராக வளர ஆா்வமுள்ள அனைத்து இளநிலை பட்டதாரி மாணவா்களும் இதில் விண்ணப்பிக்கலாம். சா்வதேச அளவில் இதில் இணைந்துள்ள நூற்றுக்கணக்கான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பிரதிநிதியாக கூகுள் டெவலப்பா் மாணவ அமைப்பு செயல்படுகிறது.
  7. 34 வயதாகும் விராட் கோலி 278 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,000க்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். இதில் 47 சதங்கள், 66 அரைசதங்கள் அடங்கும். டெஸ்டில் 29 சதங்களும் 29 அரைசதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 112முறை 50க்கும் அதிகமான ரன்களை எடுத்தும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்டில் 29 சதங்களும் டி20யில் 1 சதத்தினையும் ஒருநாள் போட்டிகளில் 47சதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்தும் புதிய சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.
  8. பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 675 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பிகாரை அச்சுறுத்திவரும் டெங்கு பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகின்றது. மாநிலத்தில் பாட்னா மற்றும் பாகல்பூரில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாகல்பூரில் 300 பேருக்கும், பாட்னாவில் 298 பேருக்கு டெங்கு பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த இரு மாவட்டங்களும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  9. வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனையானது எண்ம ரூபாயானா டிஜிட்டல் கரன்சியானது பயன்பாடு சோதனை அடிப்படையில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.எண்ம ரூபாய் பயன்படுத்த 9 வங்கிகளுக்கு மட்டுமே ரிசர்வ் வங்கியானது அனுமதி அளித்துள்ளது.கிரிப்டோ கரன்சிகளுக்கு முற்றுப்பள்ளி வைக்கும் நோக்கில் எண்ம ரூபா
  10. டெல்லி பிரகடனம்: 37 பக்கங்கள் கொண்ட டெல்லி பிரகடனமானது G20 அமைப்பின் 18வது உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. தனது படைகளை பயன்படுத்தி மற்ற நாட்டின் எல்லை பிடிக்கக் கூடாது. நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற அடிப்படையில் அமைதியான, நட்பு ரீதியான மற்றும் அண்டை நாடுகள் இது போருக்கான காலம் இல்லை-ஜி 20 இந்தியா 2023 உச்சிமாநாட்டின் முக்கிய அம்சங்கள்
  11. சமுத்ரயான் திட்டம் :தேசிய கடல் தொழில் நுட்பக் கழகமானது மத்ஸ்யா 6000 என்ற நீர் மூழ்கி கப்பல் மூலம் வங்கக் கடலின் ஆழ்பகுதியில் கோபால்ட், நிலக்கரி, மாங்கனீசு மற்றும் தாதுப்பொருள்களை ஆய்வு செய்யும் சமுத்ரயான் திட்டத்தினை உருவாக்கியுள்ளது
  12. பருவ நிலை நிதிக்கு ரூ.16,600 கோடியை (2 பில்லியன் டாலர்கள்) பிரிட்டன் பிரதமர் ரிஷி சுன்னக் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
  13. G20 அமைப்பின் கூட்டமைப்பில் புதிதாக இணைக்கப்பட்ட ஆப்பிரிக்க யூனியனின் தலைவராக கோமரஸ் அதிபரான அஜாலி அசோம்னி செயல்படுகிறார்.
  14. பவர் பாயிண்ட் (Power Point) மென்பொருளை உருவாக்கிய மென் பொறியாளரான டென்னிஸ் ஆஸ்டின் காலமானார்.
  15. இந்தோனிசிய மாஸ்டர் பாட்மின்டன் சூப்பர் 100 போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  16. அமெரிக்காவில் நடைபெறும் யுஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் (US Open Grand Slam) டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவோ ஜோகோவிச் தனது 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம்அதிக சாம்பியன் பட்டம் வென்ற மார்க்ரெட் கோர்ட் சாதனையை சமன் செய்துள்ளார்.

IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 12 

தாத்தா பாட்டி தினம்:இந்த ஆண்டு இது செப்டம்பர் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போல, இந்த நாள் தாத்தா பாட்டி மற்றும் பேரக்குழந்தைகளுக்கு இடையிலான அழகான பிணைப்பைக் கொண்டாடுகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)