TODAY CURRENT AFFAIRS IN TAMIL 13.09.2023
- சென்னை ஐஐடி மாணவர்களால் கழிவு நீர் குழாய்கள் மற்றும் குடிநீர் குழாய்களில் ஏற்படும் விரிசல்கள், உடைப்புகளை சரிசெய்ய AI தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய எண்டோபாட் என்ற ரோபோவை உருவாக்கப்பட்டள்ளது.
- தமிழக அரசு மற்றும் மேக்ஸ் விஷன் தனியார் மருத்துவமனை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியுள்ளது. இவ்வொப்பந்தத்தின்படி தமிழ் நாட்டில் ரூ.400 கோடி மதீப்பீட்டில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
- விஷ்ணுபுரம் இலக்கிய விருது: கவிஞரும், எழுத்தாளருமான யுவன் சந்திர சேகருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருதினை கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பானது வழங்கியுள்ளது. 2010 முதல் இவ்விருதானது கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. யுவன் சந்திரசேகரால் கானல் நதி, பகடை ஆட்டம், ஒளிவிலகல், ஏமாறும் கலை, ஒற்றை உலகம் முதலிய நூல்கள் படைக்கப்பட்டுள்ளது.TNPSC UNIT II: நடப்பு விவகாரங்கள் விருதுகள் கௌரவங்கள் 2023
- செப்டம்பர் 13-ல் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவால் ஆயுஷ்மான் பவ திட்டமானது துவங்கி வைக்கப்பட உள்ளது. அனைவருக்கும் ஆரோக்கிய சேவைகளை அளிக்கும் இத்திட்டமானது செப்டம்பர் 17 முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும் உடல் உறுப்பு தான இலவச தொலைபேசி எண்ணான 1800114770-யையும் குடியரசுத்தலைவர் அறிமுகம் செய்து வைக்கிறார்
- அரிசியின் இளவரசனாக கருதப்படும் கால ஜீரா அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது ஒடிசாவின் கோபுரட் மாவட்டத்தின் கால ஜீரா அரிசி பழங்குடியின மக்களால் பயிரிடப்படுகிறது.புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல் 2023
- 90 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்கள்:எல்லை சாலைகள் ஆணையத்தால் இந்தியாவின் வடக்கு, வடமேற்கு உருவாக்கப்பட்ட 90 எல்லை உட்கட்டமைப்பு திட்டங்களையும், அருணாச்சலப்பிரதேச மாநிலம் கமேங் மாவட்டத்தில் 500மீ தொலைவில் அமைக்கபட்டுள்ள மாலிபரா – சார்துவார் – நவாங் சுங்கப்பாதை சாலையையும் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்துள்ளார். 1960-ஆம் ஆண்டு எல்லை சாலைகள் ஆணையமானது உருவாக்கப்பட்டது.
- மொராக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,900 பேர் இறந்துள்ளன. 6.8 ரிக்டர் அளவுகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
- குளோனிங் முறையில் டோலி என்ற செம்மறி ஆட்டினை உருவாக்கிய பிரிட்டிஷ் விஞ்ஞானியான இயன் வில்முட் காலமானார்.குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் உயிரினமான டோலி 1996-ல் பிரிட்டனின் எடின்பார்க் பல்கலைக்கழத்தில் உருவாக்கப்பட்டது.
- 2023 ஐசிசி விருது – ஆகஸ்ட்:ICC-யின் ஆகஸ்ட் மாத விருதிற்கான சிறந்த வீராக பாகிஸ்தானின் பாபர் ஆசம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் பாபர் ஆசம் 3வது முறையாக இவ்விருதினை பெறுகிறார். சிறந்த வீராங்கனையாக அயர்லாந்து நாட்டின் அர்லினி கெல்லி தேர்வு செய்யபட்டுள்ளார்.
- சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 5 போ், நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக எ.எ.நக்கீரன், நிடுமொலு மாலா, எஸ்.செளந்தா், சுந்தா் மோகன், கபாலி குமரேஷ் பாபு ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் 5 பேரும் ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ளனா்.
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 :