TODAY CURRENT AFFAIRS IN TAMIL 14.09.2023:
- பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 2023-ன்படி வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல், ஓட்டுநர் உரிமம், கல்விநிலையங்களில் சேர என பல்வேறு நடைமுறைகளுக்கும், தனி ஆவணமாக, பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், பிறப்புச் சான்றிதழை கல்வி நிலையங்களில் அனுமதி பெறுவது, வாகன ஓட்டுநர் உரிமம் பெற, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை பெற, திருமணத்தைப் பதிவு செய்வதற்கு, அரசு வேலை பெறுவது போன்ற பணிகளுக்கு தனி ஆவணமாக அடையாளன் சான்றிதழாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், நாடாளுமன்றத்தில் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு மசோதாவை தாக்கல் செய்தார். ஆகஸ்ட் 1ஆம் தேதி மக்களவையிலும் 7ஆம் தேதி மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- காற்று மாசினால் மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என அமெரிக்காவின் மிக உயர்ந்த மருத்துவ ஆய்வு நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.காற்று மாசு அளவு பி.எம். 2.5 உள்ள இடங்களில் 10-15 ஆண்டுகளில் இருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஆபத்து அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வு நடைபெற்ற கடந்த 20 ஆண்டுகளில் 15,870 பேருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. பி.எம்.2.5-க்கு மேல் உள்ள இடங்களில் வாழ்பவர்களுக்கு குறிப்பாக ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது காற்று மாசு அதிகமுள்ள பகுதியில் மார்பகப் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8% அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. மோட்டார் வாகனங்களின் பயன்பாடு, விவசாயக் கழிவுகள், மரக்கட்டைகள் ஆகிய பொருள்களை எரித்தல், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்டவைகள் காற்று மாசுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. தேசிய புற்றுநோய் நிறுவன இதழில்(National Cancer Institute) இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு தமிழக அரசானது சாலையோர வியாபரிகளின் நலன்களை பாதுகாக்க தமிழ்நாடு சாலையோர கடைகள் மற்றும் வணிக நிறுவன வியாபாரிகள் நல வாரியத்தினை (Welfare assistance to Road side traders) அமைத்துள்ளது.
- சிங்கப்பூர் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் 14.09.23 பொறுப்பேற்கிறார். சிங்கப்பூரின் 8-ஆவது அதிபரும், முதல் பெண் அதிபருமான ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடா்ந்து, அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த மாதம் 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 லட்சம் வாக்குகளில் 17.46 லட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, சிங்கப்பூரின் 9-ஆவது அதிபராக தா்மன் சண்முகரத்னம் இன்று பொறுப்பேற்கவுள்ளார்.
- வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமாக வலம் வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் செப்டம்பர் 1-ம் தேதி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்தது.
- இந்தியாவில் 2010-ல் 88-ஆக இருந்த யானை வழித்தடங்கள் தற்போது 150 யானை வழித்தடங்களாக உயந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 26 யானை வழித்தடங்கள் அமைந்துள்ளன. உலக யானைகள் தினமானது ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ல் கொண்டாடப்பட்டு வருகிறது
- முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
- சென்னையில் 13.09.2023 (செப்.13) தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்டு வழங்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
- தில்லியில் விவசாயிகளின் உரிமைகள் தொடர்பான முதல் உலகாளவிய கருத்தரங்கத்தை (First Global Symposium on Farmers’ Rights) குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு துவங்கி வைத்துள்ளார். 2001-ல் கொண்டு வரப்பட்ட பயிர் வகைகளின் பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமைகள் சட்டமானது ஒட்டு மொத்த உலகம் முழுவதும் பின்பற்ற தக்க வகையில் முன்னுதாரணமாக திகழ்வதாக குடியரசுத்தலைவர் தெரிவித்துள்ளார். இச்சட்டத்தின் மூலம் விவசாயிகள் விதைகளை பயன்படுத்தவும், பாதுகாக்கவும், பகிர்ந்த கொள்ளவும், விற்கவும் இயலும். மேலும் விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான விதைகளைப் பதிவு செய்து கொள்ளவும் முடியும்.
- ஸ்பெயனின் ஏர்பஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள சி295 விமானம் இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.செளத்திரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இந்திய அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு ஏர்பஸ் நிறுவனத்திடம் 56 சி2965 விமானங்களை ரூ.21,935 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
- 2016 மே 1-ல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் (Pradhan Mantri Ujjwala Yojana Scheme) கீழ் 75 இலட்சம் புதிய இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கையானது 10.35 கோடியாக அதிகரித்துள்ளது. ரூ.1650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
- எளிதில் அனுப்புதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தத்துவ அடிப்படையில் தொடங்கப்பட இணைய நீதிமன்ற 3வது கட்ட திட்டத்திற்காக ரூ.7510 கோடியை ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இணைய நீதிமன்றம் என்பது காகித பயன்பாடற்ற நீதிமன்றங்களாக மாற்றம் செய்யும் திட்டமாகும்
- நாடாளுமன்றத்தின் 40% எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசோசியேஷன்ஃபார் டெமாக்ரேடிக்க ரிஃபார்ம்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. (பாஜக 139MP 36%) , (காங்கிரஸ் 43MP 53%, )(தி.மு.க 13MP 38%), (அ.தி.மு.க 1MP 20% )
- “லஞ்சம் கேட்டால் இல்லை என்று சொல்லுங்கள்; நாட்டுக்காக செயலாற்றுங்கள்” என்ற தலைப்பில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 6 வரை லஞ்ச ஒழிப்பு வாரமாக கடைபிடிக்கப்பட உள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
- ருமேனியா நாட்டின் டென்னிஸ் வீராங்கனை யானசைமோனா ஹேலப்பிற்கு நான்கு ஆண்டுகள் விளையாட தடை விதித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ITF) உத்தரவிட்டுள்ளது. இவர் ஊக்க மருந்து தடுப்பு விதியினை மீறியதற்காக இத்தடையானது விதிக்கப்பட்டுள்ளது. 03.01.1913-ல் ITF (International Tennis Federation) அமைப்பானது இங்கிலாந்தின் லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
- கடனை அடைத்த 30 நாள்களில் சொத்துப் பத்திரம் தராவிட்டால் தினமும் ரூ.5,000 தாமதக் கட்டணம் : வாடிக்கையாளா் கடனை முழுமையாக அடைத்த 30 நாள்களில் அவரது அசையும், அசையாத சொத்துப் பத்திரம், ஆவணங்களைத் திருப்பி அளித்துவிட வேண்டும்; அப்படி அளிக்காமல் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 தாமதக் கட்டணமாக வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும் என்று வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) உத்தரவிட்டுள்ளது.
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - 14 செப்டம்பர்
இந்தி திவாஸ்:இந்தி திவாஸ் செப்டம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது, இந்த நாளில் இந்திய அரசியலமைப்பு சபை 1949 ஆம் ஆண்டில் தேவநாகிரி எழுத்தில் எழுதப்பட்ட இந்தியை இந்திய குடியரசின் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது.