TODAY CURRENT AFFAIRS IN TAMIL 16.09.2023:
- அக்டோபர் 24 முதல் 1 வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை தெலுங்கானா அரசு செயல்படுத்த உள்ளது.
- 17.09.2023-ல் விஸ்வகர்மா தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடியால் நாட்டிலுள்ள கைவினைகலைஞர்களின் திறனை மேம்படுத்தும் பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்தினை துவங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக pmvishwakarma.gov.in என்ற இணையதளமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
- அமலாக்கத் துறையின் இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ரா ஓய்வினை முன்னிட்டு அமலாக்கத் துறையின் புதிய பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஒட்டுமொத்த எரிசக்தியை 50% புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ரூ.49,000 கோடி மதீப்பிட்டில் மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்டத்தின் பினா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு (Petrochemical refinery) ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த கேப்டன் துஷார் மகான் பெயரானது ஜம்மு காஷ்மீர் உதம்பூர் ரயில் நிலையத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்கா மார்னிங் கன்சல்ட் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள உலக மக்களால் அதிகமாக விரும்பப்படும் தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிரதமர் நரேந்திர மோடியும் இரண்டாம் இடத்தை சுவிட்சர்லாந்து அதிபரான அலெய்ன் பெர்செட் பிடித்துள்ளன.
- மத்திய அமைச்சரவையானது நாடு முழுவதும் 31 ஜி.எஸ்.டி. முறையீட்டு தீர்ப்பாய அமர்வுகள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. ஜி.எஸ்.டி சார்ந்த மேல் முறையீடுகளை விரைந்து விசாரிக்கும் வகையில் இத்தீர்ப்பாய அமர்வுகள் அமைக்கப்பட உள்ளன
- டைம் இதழ் & ஸ்டேடிஸ்டா தரவு சேகரிப்பு நிறுவனமானது சுற்றுச்சூழல், சமூக, பொருளாதார தாக்கத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 100 நிறுவனங்கள் பட்டியலில் (List of top 100 companies in the world) இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 64 வது இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் முதலிடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமும், இரண்டாவது இடத்தை – ஆப்பிள் நிறுவனமும், மூன்றாம் இடத்தை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் பிடித்துள்ளது.
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 16
மலேசியா தினம் :மலேசியா தினம் செப்டம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது, மேலும் இது 'ஹரி மலேசியா' என்றும் அழைக்கப்படுகிறது. 16 செப்டம்பர் 1963 இல், சிங்கப்பூரின் முன்னாள் பிரிட்டிஷ் காலனி மற்றும் கிழக்கு மலேசிய மாநிலங்களான சபா மற்றும் சரவாக் ஆகியவை மலேசிய கூட்டமைப்பை உருவாக்க மலாயா கூட்டமைப்பில் இணைந்தன.
சர்வதேச சிவப்பு பாண்டா தினம் (International Red Panda Day) :ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமை சர்வதேச சிவப்பு பாண்டா தினம் அனுசரிக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் சிவப்பு பாண்டாக்கள் வாழ போராடி வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சிவப்பு பாண்டா தினம் இந்த அழகான இனங்கள் பற்றி அறியவும், அவற்றின் வாழ்விடத்தின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
உலக ஓசோன் தினம் :உலக ஓசோன் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1987 இல் இந்த நாளில், மாண்ட்ரீல் நெறிமுறை கையெழுத்தானது. 1994 முதல், உலக ஓசோன் தினம் கொண்டாடப்படுகிறது, இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது. இந்த நாள் ஓசோன் படலத்தின் சிதைவு மற்றும் அதை பாதுகாப்பதற்கான தீர்வுகளை மக்களுக்கு நினைவூட்டுகிறது.கருப்பொருள்: “Montreal Protocol: Fixing the Ozone layer and reducing Climate chage”