TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17.09.2023:
- வேலூர் மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட வீடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். வேலூரில் ரூ. 11 கோடியில் 220 குடியிருப்புகளை பயனாளிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் இருந்து காணொலி காட்சி மூலம் 17.08.23 திறந்து வைத்தார்.தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக தமிழக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 நவம்பர் மாதம் வேலூர் அருகே மேல்மொணவூர் முகாமில் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில், தற்போது 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
- நோயாளிகள் பாதுகாப்பு சேவை: தமிழகத்துக்கு ‘சஃகுஷால்’ விருது 2023:நோயாளிகள் பாதுகாப்பு சேவையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. சா்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் ஆண்டு தோறும் செப். 17-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் 4 அடி நீளத் தலைமுடியைக் கொண்ட சிறுவன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் சிடக்தீப் சிங் சாஹல்(15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட கூந்தல் இருந்தது.சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ அதாவது 4 அடி 9.45 அங்குலம். இந்த நிலையில், நீண்ட கூந்தலைக் கொண்ட சாஹல் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
- 'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பான முதல் கூட்டம் வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து கடந்த செப். 1 அன்று மத்திய அரசு உத்தரவிட்டது.ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், சட்டத் துறைச் செயலா் நிதின் சந்திரா, சட்டம் இயற்றுதல் துறைச் செயலா் ரீட்டா வசிஷ்டா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
- நிபா வைரஸ் கரோனா விட ஆபத்தானது, கரோனாவை விட நிபா வைரஸால் பாதிப்பு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) எச்சரித்துள்ளது. கடந்த 2018, 2021 ஆம் ஆண்டுகளில் கேரளம் மாநிலம், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவத் தொடங்கியது. இதுவரை நிபா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 17 பேர் இறந்துள்ளனர்.நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் கரோனா நோய்த்தொற்றுடன் ஒப்பிடும்போது மிக அதிகம். கரோனா தொற்று பாதிப்பு இறப்பு விகிதம் இரண்டு முதல் மூன்று சதவிகிதம் வரையில்தான் இருந்தது. ஆனால், நிபாவால் பாதிப்பு இறப்பு விகிதம் 40 முதல் 70 சதவிகிதம் வரை உள்ளது
- நிபா வைரஸ் பாதிப்பினால் கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வருகிற செப்டம்பர் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒருவரும் செப். 11 ஒருவரும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததையடுத்து சந்தேகத்தின்பேரில் அவர்களது மாதிரிகள் புணே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டு, பின்னர் அது நிபா தொற்றுதான் என உறுதி செய்யப்பட்டது.NIPAH-நிபா வைரஸ் 2023-TNPSC MAIN EXAM NOTES GR1 GR2
- லிபியாவில் புயல் காரணமாக அணைகள் உடைந்து வெள்ள நீா் ஊருக்குள் பாய்ந்ததில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11,300-ஆக அதிகரித்துள்ளதாக சா்வதேச செம்பிறைச் சங்கம் அறிவித்தது.
- தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்றாா் இஸ்ரோ முன்னாள் தலைவா் சிவன்.குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தேவையான 2,400 ஏக்கா் நிலத்தில் 2,000 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 400 ஏக்கா் நிலம் வரும் நவம்பருக்குள் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதைத் தொடா்ந்து, ஏவுதளம் அமைவிடத்துக்கு சுற்றுச்சுவா், கட்டடம் கட்டும் பணி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டுக்குள் இப்பணிகள் நிறைவுபெற்று, ராக்கெட் ஏவும்பணி தொடங்கும். கட்டுமான பணிகளுக்கான திட்ட மதிப்பீடு சுமாா் ரூ. 700 கோடி இருக்கும்.
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 17
உலக நோயாளி பாதுகாப்பு தினம் : இந்த நாள் செப்டம்பர் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. 'நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த உலகளாவிய நடவடிக்கை' என்ற WHA72.6 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, மே 2019 இல் 72வது உலக சுகாதார சபையால் இது நிறுவப்பட்டது.கருப்பொருள்: “Engaging patient for patient safety”
ஹைதரபாத் சமஸ்தானம் இணைந்த தினம்: ஹைதரபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த நாளான செப்டபர் 17-ஆனது ஹைதரபாத் சமஸ்தானம் இணைந்த தினமாக கொண்டாடி வருகின்றன.நிஜாம் ஆட்சியிலிருந்த ஹைதராபாத் சமஸ்தானம், கடந்த 1948, செப்டம்பா் 17-ஆம் தேதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த தினத்தை, தெலங்கானா விடுதலை தினமாக பாஜக கொண்டாடுகிறது.பிஆா்எஸ் தலைமையிலான மாநில அரசு சாா்பில் ‘தேசிய ஒருங்கிணைப்பு தினமாக’ கொண்டாடப்படவுள்ளது.இந்தியாவுடன் ஹைதராபாத் இணைந்த தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் ‘தெலங்கானா ஆயுதப் போராட்டம்’ என்ற பெயரில் ஒரு வார கால கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன