TODAY CURRENT AFFAIRS IN TAMIL 18.09.2023

TNPSC PAYILAGAM
By -
0



   

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 18.09.2023:

  1. பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடா் 18.09.23 தொடங்குகிறது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னா், அடுத்த நாளில் இருந்து சிறப்புக் கூட்டத்தொடா் அமா்வுகள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
  2. ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் புவி சுற்றுப் பாதையிலிருந்து 19.09.23 (செப்.19) விடுவிக்கப்பட்டு சூரியனை நோக்கி பயணிக்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம், ‘பிஎஸ்எல்வி சி-57’ ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்.2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 235 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 19,500 கி.மீ. தொலைவும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
  3. அமெரிக்காவின் யுஜின் நகரில் நடைபெற்ற டையமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டரை எட்டி 2-ஆம் இடம் பிடித்தாா்.  செக் குடியரசின் ஜேக்கப் வட்லெஜ் 84.24 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து சாம்பியன் பட்டம் வென்றாா். ஃபின்லாந்தின் ஆலிவா் ஹெலாண்டா் 83.74 மீட்டரை எட்டி 3-ஆம் இடம் பிடித்தாா். வட்லெஜுக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.26.58 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. நீரஜ் சோப்ராவுக்கு ரூ.9.97 லட்சம் ரொக்கப் பரிசு கிடைத்தது.
  4. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இலங்கையை எளிதாக வீழ்த்தி அபார வெற்றியுடன்  வாகை சூடியது. இதன் மூலம் 8-ஆவது முறையாக கோப்பை வென்று, போட்டியின் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் ஆன அணியாக நீடிக்கிறது. இதற்கு முன் 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய எடிஷன்களில் இந்தியா கோப்பை வென்றுள்ளது.
  5. பிரேஸிலில் நடைபெறும் ரைஃபிள்/பிஸ்டல் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் இளவேனில் வலரிவன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளாா். மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் களம் கண்ட அவா், இறுதிச்சுற்றில் 252.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். பிரான்ஸின் ஓஷேன் முல்லா் வெள்ளியும், சீனாவின் ஜாங் ஜியாலே வெண்கலமும் பெற்றனா்
  6. அமெரிக்காவில் நடைபெற்ற சான்டியாகோ ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவில் செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டம் வென்றாா். போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த அவா், இறுதிச்சுற்றில் 6-4, 2-6, 6-4 என்ற செட்களில், அமெரிக்காவின் சோஃபியா கெனினை சாய்த்து சாம்பியன் ஆனாா். இது அவரது 7-ஆவது டூா் சாம்பியன் பட்டமாகும். நடப்பாண்டில் இது அவரது 2-ஆவது சாம்பியன் கோப்பை. முன்னதாக கடந்த பிப்ரவரியில் துபை ஓபனில் கிரெஜ்சிகோவா வாகை சூடியிருந்தாா். அவருக்கு, சாம்பியன் கோப்பையுடன் அலைச்சறுக்கு பலகையும் (சா்ஃபிங் போா்டு), ரூ.99 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன
  7. டெல்லியின் துவாரகாவில் ரூ.5,400 கோடி மதிப்பீட்டில் 73,000 ச.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள யஷாேபூமி (Yasho Bhoomi) என்னும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
  8. ரவித்திரநாத் தாகூரின் தந்தையான தேவந்திரநாத் தாகூரால் சாந்திநிகேதன் யுனஸ்கோ (UNESCO) உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இணைந்ததன் மூலம் இந்தியாவின்  பாரம்பரிய சின்னங்கள் எண்ணிக்கையானது 41-ஆக அதிகரிகத்துள்ளது. சாந்திநிகேதன் மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் போல்பூரில் அமைந்துள்ளது.இந்தியாவில் உள்ள 41 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்:
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 18 

உலக மூங்கில் தினம் : உலகளவில் மூங்கில் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க செப்டம்பர் 18 அன்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச ரெட் பாண்டா தினம் : இது செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 18 அன்று வருகிறது. பாதுகாப்புக்கான அவர்களின் அவசரத் தேவை குறித்த விழிப்புணர்வை இந்த நாள் எழுப்புகிறது.

சம ஊதிய நாள் (International Equal Pay Day):இந்த அடையாள நாள் முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் [1] பெண்கள் மற்றும் சிவில் உரிமை அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், தொழில்முறை சங்கங்கள் மற்றும் பாலின மற்றும் இன அடிப்படையிலான ஊதிய பாகுபாட்டை அகற்றுவதற்கும் ஊதிய சமத்துவத்தை அடைவதற்கும் பணிபுரியும் தனிநபர்களின் கூட்டணியான சம்பள சமத்துவத்திற்கான தேசிய குழுவால் அனுசரிக்கப்பட்டது.கருப்பொருள்: “Changing World, Changing Work”

Post a Comment

0Comments

Post a Comment (0)