TODAY CURRENT AFFAIRS IN TAMIL 20.09.2023:
- தஞ்சை பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவரது மார்பளவு சிலை அமைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். செப்டம்பர் 29-ல் கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாவில் தமிழ் ஒளி பெயரில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. கவிஞர் தமிழ் ஒளியின் பெயரில் ரூ.50லட்சம் வைப்புத் தொகையாக வைக்கபட உள்ளதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
- வருகிற விஜயதசமி அன்று, ஆந்திர மாநில நிர்வாகம், அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படுவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
- மகளிா் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் அறிமுகம் : அரசமைப்பு சட்டத்தின் 128வது திருத்த மசோதாவாக நாரிசக்தி வந்தன் அதினியம் (மகளிருக்கு அதிகாரமளித்தல் சட்டம்) என்ற பெயரில் மகளிருக்கு சட்டபேரவை, மாநிலங்களவை, மக்களவையில் இட ஒதுக்கீட்டினை 33%-மாக அதிகரிக்கும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். இம்மசோதாவின் மூலம் மக்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 32லிருந்து 181 அதிரிக்க உள்ளது
- புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு காலதாமதம் செய்தால், நாள் ஒன்றுக்கு ரூ.100 என்ற வீதத்தில், இனி மின்வாரியமும் அபராதம் செலுத்த வேண்டியது வரும் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய பகிர்மான விதிமுறையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரான்ஸ் நாட்டின் விருதான செவாலியர் என்னும் நைட் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் & டெஸ் லெட்டர்ஸ் (Knight of the Order of Arts & Des Letters)-ஆனது ஆடை வடிவமைப்பாளர் ராகுல் மிஸ்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.TNPSC CURRENT AFFAIRS AWARDS HONOURS 2023 / விருதுகள் 2023
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 20
இந்தியன் இரயில்வே பாதுகாப்பு படை தினம் (RPF):1985 செப்டம்பர் 20-ல் ரயில்வே பாதுகாப்பு படை ஏற்படுத்தப்பட்டதன் நினைவாக இந்தியன் இரயில்வே பாதுகாப்பு படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1872-ல் பாதுகாப்பு படையாக உருவாக்கப்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை டெல்லியை தலைமையிடமாக கொண்டு அமைந்துள்ளது. இதன் இயக்குநராக மனோஜன் யாதவா செயல்படுகிறார். RPF என்பதன் விரிவாக்கம் Railway Protection Force என்பதாகும்.
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: