TODAY CURRENT AFFAIRS IN TAMIL 21.09.2023

TNPSC PAYILAGAM
By -
0

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 21.09.2023:

  1. மருத்துவத் துறையில் புற்றுநோயைக் கண்டறியக் கூடிய வகையில் செய்யறிவு தொழில்நுட்பத்துடன்(AI) கூடிய ஆக்மென்டடு ரியாலிட்டி மைக்ரோஸ்கோப் (Augmented Reality Microscope) உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை இணைந்து இயந்திரக் கற்றல்(Machine Learning), ஆக்மென்டடு ரியாலிட்டி(Augmented Reality) தொழில்நுட்பத்த்தை இணைத்து இதனை உருவாக்கியுள்ளது. புற்றுநோயில் மருத்துவர்கள் கண்டறிய முடியாத அசாதாரண விஷயங்களைக்கூட இது கண்டறியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் புற்றுநோயை மருத்துவர்கள் உறுதி செய்தாலும் இரண்டாவது கருத்தை அதாவது நோயின் துல்லியத்தன்மையை அளிக்கும். இது மருத்துவ நோயியல் நிபுணர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
  2. செப்டம்பர் 24-ல் தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் இரயில் சேவையானது நெல்லை மற்றும் சென்னை இடையே துவங்கப்பட உள்ளது. தமிழகத்திற்குள் முதல் சேவையானது சென்னை-கோவை  இடையே தொடங்கப்பட்டுள்ளது, தமிழகத்திற்குள் இரண்டாவது சேவையானது நெல்லை-சென்னை வழித்தடங்களில் துவங்கப்பட உள்ளது.
  3. தமிழக முதல்வரால் புத்தொழில் நிறுவனங்களின் உருவாக்கத்தை அதிகரிக்கவும், விரிவாக்கவும், உறுதுணையாக இருக்கவும் புத்தொழில் – புத்தாக்க கொள்கையானது 7 அம்சங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இக்கொள்ளைகயின் படி ரூ.100 கோடியில் பெருநிதியமும் உருவாக்கப்பட உள்ளது. மேலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக சமூக நீதி தொழில் வளர் மையமும், புத்தொழில் ஈடுபடும் பெண்களுக்காக தொழில் வளர் மையமும் தொடங்கப்பட உள்ளது.
  4. மக்களைவையில் அறிமுகம் செய்யப்பட்ட 128வது திருத்த மசோதாவான மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இம்மசோதாவினை ஆதரித்து 454 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்துள்ளனர். மகளரிர் இடஒதுக்கீடு மசோதாவானது 2029-க்கு பிறகே நடைமுறைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. டிஜிட்டல் வாழ்க்கை தரக்குறியீடு (Digital quality of Life Index 2023) :சர்சாக் நிறுவனம் (Surfshark Limited) வெளியிட்டுள்ள டிஜிட்டல் வாழ்க்கை தரக்குறியீடு-2023 தரவரிசையில் முதலிடத்தை பிரான்சும், இரண்டாம் இடத்தை பின்லாந்தும், மூன்றாம் இடத்தை டென்மார்க்கும் பிடித்துள்ளன. இத்தரவரிசையில் இந்தியா 52வது இடத்தைப் பிடித்துள்ளது.

IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 21 

சர்வதேச அமைதி தினம் (UN): சர்வதேச அமைதி தினம் (UN) உலகம் முழுவதும் செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. முதல் முறையாக இது செப்டம்பர் 1982 இல் அனுசரிக்கப்பட்டது மற்றும் 2001 இல், பொதுச் சபை 55/282 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது, இது செப்டம்பர் 21 அன்று அகிம்சை மற்றும் போர்நிறுத்தத்தின் சர்வதேச அமைதி தினமாக நிறுவப்பட்டது.கருப்பொருள்: “Actions for Peace”

உலக அல்சைமர் தினம் : டிமென்ஷியாவால் நோயாளி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் 21ஆம் தேதி உலக அல்சைமர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2012 இல், உலக அல்சைமர் மாதம் தொடங்கப்பட்டது.கருப்பொருள்: “Never too Early, Never too Late”

Post a Comment

0Comments

Post a Comment (0)