TODAY CURRENT AFFAIRS IN TAMIL 23.09.2023

TNPSC PAYILAGAM
By -
0

  


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 23.09.2023:

  1. அனைத்து வடிவிலான போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியா :இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. 115 புள்ளிகளுடன் பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும், 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் இருக்கும் நிலையில், தற்போது ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையிலும் இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம், டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இந்தியா முதலிடம் பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.
  2. ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கும் இழப்பீடுத் தொகை 10 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ரயில்வே சட்டம், 1989 பிரிவு 124, 124ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரிவு 124 இன் கீழ், ரயில் விபத்துக்களில்(Train accident) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும் லேசான காயங்களுக்கு ரூ.50,000-மும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பிரிவு 124ஏ -ன் கீழ் எதிர்பாராத சம்பவங்களில்(untoward incidents) இறந்தவர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ. 1.5 லட்சமாகவும் படு காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயங்களுக்கு ரூ.5 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது.
  3. மலையாள நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான சுரேஷ் கோபி கொல்கத்தாவில் உள்ள சத்யஜித்ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
  4. சீனாவின் ஹாங்ஸு நகரில் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (செப். 23) அதிகாரபூா்வமாகத் தொடங்குகின்றன. அட்டவணைப்படி கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய இந்தப் போட்டிகள், கரோனா தொற்று பரவல் காரணமாக ஓராண்டு தாமதமாக நடைபெறுகிறது. கரோனா காலகட்டத்துக்குப் பிறகு நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகளாக இது அமைகிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் (2021) மொத்தமாக 11,000 போட்டியாளா்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 12,000-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா். போட்டியானது சனிக்கிழமை முதல் அக்டோபா் 8-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.19th-ASIAN GAMES 2022 -KEY POINTS
  5. அமெரிக்காவின் செய்தி மற்றும் உலக அறிக்கை அமைப்பானது வெளியிட்டுள்ள உலகின் சிறந்த நாடுகள் பட்டியில் முதல் மூன்று இடங்கள் முறையே சுவிட்சர்லாந்து, கனடா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. இப்பட்டியலில் இந்தியா 30வது இடத்தை பிடித்துள்ளது.
  6. நாடாளுமன்றத்தின் 17-ஆவது மக்களவையின் 13 -ஆவது (சிறப்பு) கூட்டத்தொடா் 161.5 சதவீதம் செயல் திறனை பெற்றுள்ளதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத்தின் 17-ஆவது மக்களவையின் 13 -ஆவது (சிறப்பு) கூட்டத்தொடா்-மசோதாக்கள் 2023
  7. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ள க்வாட் கூட்டமைப்பின் (QUAD Federation) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
  8. தில்லியில் 2 நாள்கள் நடைபெறும் சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைக்கிறார். நீதி வழங்கல் அமைப்பில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. நாட்டில் முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் சட்ட நடைமுறைகள், வழக்குகளில் உள்ள பல்வேறு சவால்கள் குறித்து விவாதம் நடைபெறுகிறது. பல்வேறு சட்டத் தலைப்புகளில் உரையாடல், யோசனை, அனுபவத்தை பகிர்வதை நோக்கமாக இந்த மாநாடு கொண்டுள்ளது.
  9. டிஜிட்டல் வாழ்க்கை தரக் குறியீட்டில் முதலிடத்தை பிரான்சும், இரண்டாவது இடத்தை பின்லாந்தும், மூன்றாவது இடத்தை டென்மார்க்கும் வகிக்கின்றன. இக்குறியீட்டை சர்ப்ஷார்க் இணையப் பாதுகாப்பு நிறுவனமானது வெளியிட்டுள்ளது. இக்குறியீட்டில் இந்தியா உலகளவில் 52வது இடத்தை பிடித்துள்ளது. ஆசிய அளவில் முதலிடத்தை மலேசியாவும், 13வது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளது.
  10. ஆர்மீனியா, அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நடைபெற்ற நகோர்னோ-கராபக் பிராந்திய (Nagorno-Karabak) பிரச்சனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நகோர்னோ-கராபக் பிராந்தியமானது அஜர்பைஜான் நாட்டின் அங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  11. இந்தியாவின் ஜம்மு காஷ்மீரினைச் சேர்ந்த பில்கிஸ் மிர் ஆசிய விளையாட்டு போட்டிகளின் கயாகிங், கேனாேயிங் வகையான துடுப்புப் படகுப் போட்டிகளுக்கான பெண் நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் பெண் நடுவராக பணியாற்ற உள்ளார்.

IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 23 

சர்வதேச காதுகேளார் வாரம் (International Week of the Deaf):ஆண்டுதோறும் செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முடிவடையும் முழு வாரத்தின் சர்வதேச காதுகேளார் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. கருப்பொருள்: “A World Where Deaf People Everywhere can sign anywhere”

சைகை மொழிகளின் சர்வதேச தினம்(International Day of Sign Language Day) : செப்டம்பர் 23 அன்று, ஐநா பொதுச் சபை அந்த நாளை சர்வதேச சைகை மொழிகள் தினமாக அறிவித்தது. அனைத்து காது கேளாதோர் மற்றும் பிற சைகை மொழி பயனர்களின் மொழியியல் அடையாளம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் இந்த நாள் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.கருப்பொருள்: “Sign Languages Unite us”

Post a Comment

0Comments

Post a Comment (0)