TODAY CURRENT AFFAIRS IN TAMIL 24.09.2023

TNPSC PAYILAGAM
By -
0

  


 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 24.09.2023:

  1. தமிழக முதல்வர் அறிவிப்பு:இறக்கும் முன் உறுப்பு தானம் (Organ Donation) செய்வோர்களின் இறுதிச் சடங்குகானது முழு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. 2008-க்கு பிறகு மூளைச் சாவு ஏற்பட்ட 1,705 மேற்பட்டோர் உறுப்புகள் தானம் செய்ததால் 6,267-க்கும் மேற்பட்டோர் பயன் அடைந்திருக்கின்றனர். திருப்போரூர் அருகில் ஹிதேந்திரன் இறந்த தினமான ஆகஸட்-23-ல் உறுப்பு தான தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் செப்டம்பர் 23-ல் உறுப்பு மாற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  2. தமிழகத்தில் சென்னை-மைசூரு, சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவை, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகம், பிகார், மேற்கு வங்கம், கேரளம், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் சேவையை மேம்படுத்தும் வகையில், ஒன்பது வந்தே பாரத் விரைவு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி 24.09.23 நண்பகல் 1 மணிக்கு பிரதமா் மோடி காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  3. தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலினால் நாமக்கல்லில் தமிழறிஞர் சிலம்பொலி க.செல்லப்பன் சிலையானது திறந்து வைக்கப்பட்டள்ளது.
  4. உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆராய்ச்சிக்காக ஒடிசா மாநில விஞ்ஞானியான சுவாதி நாயக்கிற்கு (Swati Nayak) 2023ஆம் ஆண்டிற்கான அமெரிக்காவின் நார்மன் இ போர்லாக் விருது வழங்கப்பட உள்ளது.
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023:



Post a Comment

0Comments

Post a Comment (0)