TODAY CURRENT AFFAIRS IN TAMIL 25.09.2023
- ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (டிஎன்ஐஇ) குழுமம் சாா்பில் புவனேசுவரத்தில் ஒடிஸா இலக்கியத் திருவிழா 2 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவில், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனருமான ராம்நாத் கோயங்கா நினைவாக ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விருது தமிழ் இலக்கியத்துக்கான பெரும் பங்களிப்புக்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த அபுனைவுக்காக எழுத்தாளர் அனிருத் கனிஷெட்டிக்கும் புனைவுக்காக தேவிகா ரெகேவுக்கும் விருது மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
- ஒருநாள் போட்டிகளில் 3000 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
- கொந்தகையில் (சிவகங்கை) நடைபெற்ற 4ஆம் கட்ட அகழாய்வு பணியின் போது 1.3செமீ நீளம், 2.3 செ.மீ. விட்டம் கொண்ட பீப்பாய் வடிவத்திலான சூது பவள மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.-தமிழ்நாட்டில் அகழாய்வுகள் கண்டுபிடிப்புகள் தொடர்புடைய செய்திகள்
- சென்னை கம்பன் விழாவில் ஆண்டுதோறும் இலக்கிய வீதி இனியவன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என சென்னை கம்பன் கழகத் துணைத் தலைவரும், அரக்கோணம் தொகுதி மக்களவை உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் தெரிவித்தாா்.சென்னை கம்பன் கழகத்தின் 50-ஆம் ஆண்டு விழா அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
- மத்திய உணவு தொழில் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானியான கே.ராஜகோபாலன் உணவுப் பொருள்கள் கெட்டுப்போவதை தடுக்க புதியதொரு பக்பஸ்டர் எனும் புரத பதனப் பொருளை மைசூரு மத்திய உணவு தொழில் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்
- சீனாவில் நடைபெறும் 23வது ஆசிய கோப்பை விளையாட்டு போட்டியின் இலச்சினையாக (MASCOT) சென்சென் (Chenchen), காங்காங் (Congcong) லியான்லியான் (Lianlain) என்னும் மூன்று AI ரோபோட் தேர்வு செய்யப்ட்டுள்ளன.
- ஆசிய விளையாட்டு போட்டிகள் மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 25
உலக மருந்தாளுநர்கள் தினம் : இது ஆண்டுதோறும் செப்டம்பர் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில், துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு (எஃப்ஐபி) காங்கிரஸ் செப்டம்பர் 25 ஆம் தேதியை ஆண்டுதோறும் உலக மருந்தாளுநர்கள் தினமாக (WPD) நியமித்தது.கருப்பொருள்: “Pharmacy Strengthening Healath“
அந்த்யோதயா திவாஸ் : 2014 ஆம் ஆண்டு, செப்டம்பர் 25 ஆம் தேதி, பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு 'அந்தியோதயா திவாஸ்' அறிவிக்கப்பட்டது.
உலக மருந்தாளுநர்கள் தினம் (World Pharmacists Day) : சர்வதேச மருந்தியல் கூட்டமைப்பு (எஃப்ஐபி) கவுன்சில் முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த உலக மருந்தியல் மற்றும் மருந்து அறிவியல் காங்கிரஸில் உலக மருந்தாளுனர் தினத்தை அறிவித்தது. 1912 இல் இந்த நாளில் FIP நிறுவப்பட்டது. உலக சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு மருந்தாளுனர்களின் பங்களிப்பை அவர்களின் தொழில் மூலம் ஊக்குவிப்பது இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 அன்று, உலக மருந்தாளுனர் தினம், சுகாதார மேம்பாட்டிற்கு மருந்தாளரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும் பரிந்துரைக்கவும் குறிக்கோளாகக் கொண்டாடப்படுகிறது.
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: