TODAY CURRENT AFFAIRS IN TAMIL 26.09.2023

TNPSC PAYILAGAM
By -
0



  TODAY CURRENT AFFAIRS IN TAMIL 26.09.2023:

  1. ஆவடியின் கொள்ளுமேட்டில் தமிழ் நாட்டின் முதல் வட்டார அளவிலான காசநோய் பரிசோதனை சிகிச்சை மையம் ((Tuberculosis Testing Center) அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 86,000 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  2. தாதா சாகேப் பால்கே விருது :1955 ஆம் ஆண்டு ’ரோஜுலு மராயி’ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வஹீதா ரஹ்மான். அதன்பின், ஹிந்தியில் ‘பைசா’, ‘கைடு’, ‘ககாஸ்ஹே போல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகச்சிறந்த கவனத்தைப் பெற்றார். குறிப்பாக, 1956-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இவருக்கு மத்திய அரசு, 1972-ல் பத்ம ஸ்ரீ விருதையும் 2011-ல் பத்ம பூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது. இந்நிலையில், இன்று வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது வஹீதா ரஹ்மானுக்கு(85) அறிவிக்கப்பட்டுள்ளது.- TNPSC CURRENT AFFAIRS AWARDS HONOURS 2023
  3. பாரதிய ஜன சங்கத்தை (பாரதி ஜனதாக கட்சியின் முன்னோடி கட்சி) துவக்கியவர்களுள் ஒருவரான தீனதயாள் உபாத்யாய பிறந்த தினமான செப்டம்பர் 25 தில்லியில் 72 அடி உயர தீனதயாள் உபாத்யாய சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். அந்த்யோதயா திவாஸ் தினத்தினை அந்த்யோதயா திவாஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  4. வதோதரா விமானப்படை நிலையத்திலுள்ள 11வது படைப்பிரிவில் சி295 விமானம்  இணைக்கப்பட்டுள்ளது. இந்த சி295 விமானம் ஏர்பஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
  5. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் கொள்கை விளக்க குறிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அந்த குறிப்பில், சென்னை புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமெரிக்காவில் உள்ள டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்று சர்வதேச அளவிலான தீம் பார்க் அமைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தனியார் பங்களிப்புடன் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  6. அக்டோபர் 05-ல் இந்தியாவிற்கு வெளியே அமைக்கப்பட்ட 2வது பெரிய இந்து கோவிலான சுவாமி நாராயண் அக்ஷர்நாம் கோவிலானது அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் திறக்கப்பட உள்ளது.  இந்தியாவிற்கு வெளியே அமைக்கப்பட்ட முதலாவது பெரிய இந்து கோவில் கம்போடியாவின் அங்கோர்வாட் நகரத்தில் அமைந்துள்ளது.
  7. எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளது என 1998-இல் அளிக்கப்பட்ட தீா்ப்பை மறுஆய்வு செய்ய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.25) அமைத்தது. அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ், பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பாா்திவாலா, சஞ்சய் குமாா், மனோஜ் மிஸ்ரா ஆகியோா் இந்த வழக்கை அக்டோபா் 4-ஆம் தேதி விசாரிப்பாா்கள் என்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  8. 6வது லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக அணி ஐரோப்பிய அணியை வென்று  2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
  9. ஆண்டுதோறும் ஜனவரி 15-ல் தில்லியல் நடைபெறும் ராணுவ தின அணிவகுப்பானது 2024-ஆம் ஆண்டில் மத்திய படைப்பிரிவு சார்பில் உத்திரபிரதேசத்தின் லக்னோவில் நடைபெற உள்ளது. தெற்கு படைப்பிரிவு சார்பில் 2023-ஆம் ஆண்டுக்கான ராணுவ தின அணிவகுப்பானது பெங்களூவில் நடைபெற்றது.
  10. ஊராட்சிக்கு வரி செலுத்துவதற்காக புதிய இணையதளம்: முதல்வர் தொடக்கி வைத்தார்:தமிழ்நாட்டில் கிராமங்களில் பொதுமக்கள் தாங்களாகவே இணைய வழியில் வரிகளை செலுத்திக்கொள்ள வசதியாக (https://vptax.tnrd.tn.gov.in) புதிய இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் இந்த இணையதளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த புதிய இணையதளத்தின் வாயிலாக ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்து அவர்களுக்கான வரிகளை நெட் பேங்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மற்றும் யுபிஐ மூலம் செலுத்த முடியும். மேலும் பொதுமக்கள் ஊராட்சி செயலரிடம் உள்ள பிஓஎஸ்(POS) எந்திரம் மூலமும் தங்கள் வரிகளை செலுத்திக்கொள்ளலாம்.
  11. தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலராக அா்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளாா்.
  12. 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல்: உலக சாதனையுடன் சாம்பியன்: ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் ருத்ராங்ஷ் பாட்டீல், திவ்யான்ஷ் சிங் பன்வா், ஐஸ்வரி பிரதாப் சிங் கூட்டணி 1,893.7 புள்ளிகள் பெற்று உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. தென் கொரிய அணி 2-ஆம் இடமும், சீன அணி 3-ஆம் இடமும் பிடித்தன.

IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 26 

ஐரோப்பிய மொழிகள் தினம் : மொழி கற்றலின் முக்கியத்துவம் மற்றும் மொழியின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 26ஆம் தேதி ஐரோப்பிய மொழிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

காது கேளாதோர் நாள் : காது கேளாதோர் தினம் அல்லது சர்வதேச காது கேளாதோர் வாரம் செப்டம்பர் கடைசி வாரத்தில் தொடங்கி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது. இது உலக காது கேளாதோர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. காது கேளாதோர் சமூகம் எதிர்கொள்ளும் சாதனைகள் மற்றும் சவால்களை நோக்கி பாதிக்கப்பட்ட நபருக்கு மட்டுமல்ல, பொது மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் மேம்பாட்டு அதிகாரிகளின் கவனத்தை இந்த நாள் ஈர்க்கிறது.

உலக கருத்தடை நாள் : உலக கருத்தடை தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான உலகளாவிய பிரச்சாரம் மற்றும் இளைஞர்கள் தங்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.கருப்பொருள்: “The Power of Options“

உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் : சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்கான சர்வதேச கூட்டமைப்பால் இந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நதிகள் தினம் : உலக நதிகள் தினம் செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. 2022 இல், இது செப்டம்பர் 26 அன்று விழுகிறது. இந்த நாள் ஆறுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் விழிப்புணர்வை உருவாக்குகிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள நதிகளை மேம்படுத்தவும், சேமிக்கவும் மக்களை ஊக்குவிக்கிறது. நமது நீர் ஆதாரங்களை பராமரிப்பது அவசியம்.

அணு ஆயுதங்களை மொத்தமாக ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Total Elimination of Nuclear Weapons) :அணு ஆயுதங்களை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதற்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் மனிதகுலத்தின் மிகவும் கடினமான சவால்களில் ஒன்றான அமைதியை எதிர்கொள்வதாகும். 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற அணு ஆயுதக் குறைப்பு தொடர்பான ஐநா பொதுச் சபையின் உயர்மட்ட மாநாட்டின் தொடர்ச்சியாக இந்த நாள் நிறுவப்பட்டது.

(சி.எஸ்.ஐ.ஆர்) CSIR Day (Council of Scientific and Industrial Research) :அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) 26 செப்டம்பர் 1942 அன்று நிறுவப்பட்டது. இந்த ஆண்டு, இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான இது அதன் 81 ஐக் கொண்டாடுகிறதுst நிறுவன தினம். நாடு முழுவதும் உள்ள 37 ஆய்வகங்கள், இந்த சிறப்பு நாளை தங்கள் சொந்த இடத்தில் கொண்டாடுகின்றன.


Post a Comment

0Comments

Post a Comment (0)