TODAY CURRENT AFFAIRS IN TAMIL 30.09.2023

TNPSC PAYILAGAM
By -
0


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 30.09.2023:

  1. 2021-2022ஆம் ஆண்டிற்கான தேசிய சேவைத் திட்ட விருதுகளைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய சேவைத் திட்ட விருதுகளை என்எஸ்எஸ் தன்னார்வலர்கள், திட்ட அலுவலர்கள், பல்கலைக்கழகங்கள்/+2 கவுன்சில்களுக்கு அவர்களின் தன்னார்வ சேவையை அங்கீகரித்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு, டாக்டர் ராம்வீர் சிங் சௌகான், டாக்டர் மிதாலி கத்கடியா, டாக்டர் ரஞ்சனா ஷர்மா, டாக்டர் மல்கியத் சிங், டாக்டர் ராகவேந்திர ஆர், டாக்டர் எஸ் லெக்ஷ்மி, டாக்டர் இந்திரா பர்மன், டாக்டர் பவன் ரமேஷ் நாயக், டாக்டர் ரேணு பிஷ்ட், டாக்டர் ஜோசப் வன்லால்ஹ்ருயா சைலோ, பபிதா பிரசாத் உள்ளிட்டோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.
  2. இந்தியாவில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை 146 புலிகள் இறந்துள்ளதாகவும், கடந்த 11 ஆண்டுகளில் இதுவே அதிக எண்ணிக்கையிலான புலிகள் இறப்பு என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. புலிகள் இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை.
  3. தில்லி தலைமைச் செயலகத்தில் மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக சுற்றுச்சூழல் துறையின் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள 15 அம்ச குளிா்கால செயல்திட்ட அறிக்கையை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் 29.09.23 அறிமுகப்படுத்தினாா்
  4. குளோபல் இந்தியா செயற்கை நுண்ணறிவு 2023’-ன் முதல் பகுதியை இந்தியா அக்டோபர் மாதத்தில் நடத்துகிறது: மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் குளோபல் இந்தியா செயற்கை நுண்ணறிவு 2023 ஐ நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்பார்கள்.
  5. ஆசிய விளையாட்டில் தடகள போட்டியில் முதல் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. குண்டு எறிதல் மகளிர் பிரிவில் இந்தியாவின் கிரண் பலியான் 17.36 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார். இதில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை சீனா வென்றது. இத்துடன், இந்தியாவுக்கு 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 33 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
  6. மீனவர்களின் நலனுக்காக ரூ.1 கோடியில் சுழல் நிதி உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் எந்த வருமானமும் இன்றி வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்லும் நிலையில் உள்ளதால், மீனவர் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு, அம்மீனவர்களின் துயர் துடைக்க சுழல் நிதியினை உருவாக்கியுள்ளது.
  7. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 கலைஞர்களுக்கு இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட ரூ.50 லட்சம் நிதியுதவி - நலிந்த நிலையில் வாழும் 1000 மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 30 

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் : சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் மொழி வல்லுனர்களின் பணிக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. நாடுகளை ஒன்றிணைப்பதிலும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)