வளையாபதி -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0

பகுதி – (ஆ) – இலக்கியம்

ஐம்பெருங் காப்பியங்கள்:

வளையாபதி

தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல்.வலையர் சமூகத்தை சேர்ந்த மீனவன் காதல் கொள்ளும் கதைகுறிப்பு ஆகும் . இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது.

கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது.

 ஆசிரியர் = தெரியவில்லை

* காலம் = கி.பி.9ஆம் நூற்றாண்டு

* பாவகை = விருத்தப்பா

* பாடல்கள் = 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன

* சமயம் = சமணம்

KEY POINTS TNPSC EXAMS - VALAYAPATHI

  1. நூல் முழுவதும் கிடைக்கவில்லை
  2. 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
  3. ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினித்தார் என்று தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் கூறுகிறார்.
  4. இலக்கண இலக்கிய உரையாசிரியர்களால் மிகவும் போற்றப்பட்ட நூல்.
  5. நவகோடி நாராயணன் என்பவரை பற்றிய கதை.
  6. வளையாபதியின் கதையை வைசிய புராணம் கூறுகிறது

மேற்கோள்:

  • கள்ளன்மின் களவு ஆயின யாவையும்
  • கொள்ளன்மின் கோளை கூடிவரும் அறம்
  • பொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை,
  • மேவத் துறையிலா வசன வாவி, துகிலிலாக் கோலத் தூய்மை

ஐம்பெருங்காப்பியங்கள்-டி.என்.பி.எஸ்.சி தமிழ் இலக்கியக் குறிப்புகள் 
  1. சிலப்பதிகாரம்- CILAPPATIKARAM--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
  2. மணிமேகலை-  MANIMEGALAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
  3. சீவக சிந்தாமணி -SEEVAKA CHINTAMANI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
  4. வளையாபதி- VALAYAPATHI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
  5. குண்டலகேசி - KUNDALAKESI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)