முதலாம் சந்திர குப்தர் (319 முதல் 335 CE)
- ஆட்சிக்காலம் கி பி 320 - 335
- முடிசூட்டுதல் கி பி 320
- முன்னையவர் கடோற்கஜன்
- பின்னையவர் சமுத்திரகுப்தர்
- பட்டத்து இராணி குமாரதேவி
- குழந்தைகளின் பெயர்கள் சமுத்திரகுப்தர் பிரபாவதி
- தந்தை கடோற்கஜன்
- மதம் இந்து சமயம்
குப்த வம்சத்தின் முதல் அரசர் ஸ்ரீகுப்தர் (பொ.ஆ. 240-280). இவரைத் தொடர்ந்து இவரது புதல்வர் கடோத்கஜர் (பொ.ஆ. 280-319) ஆட்சிக்கு வந்தார். கல்வெட்டுகளில் ஸ்ரீகுப்தர், கடோத்கஜர் ஆகிய இருவரும் மகாராஜா என்று குறிக்கப்படுகிறார்கள்.
கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.ஆ.319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார். இவர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார். சந்திரகுப்தர் மகாராஜா அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார். மற்றவர்களின் ஆவணங்களிலிருந்து இவரது பேரரசர் நிலை நமக்குப் புலப்படுகிறது. இவரது ஆட்சிக் காலத்தின் கல்வெட்டோ நாணயமோநமக்குக்கிடைக்கவில்லை.
TNPSC EXAM KEY POINTS -முதலாம் சந்திர குப்தர் (319 முதல் 335 CE)
- குப்தா பேரரசின் முதல் முக்கிய பெரிய அரசராக கருதப்படுகிறார்
- மாஹாராஜாதி ராஜா என்ற பட்டம் சூட்டிக்கொண்டார்
- முதலாம் சந்திரகுப்தர் பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தார்
- அவரது முடிசூட்டு விழா கி.பி 320இல் நடைபெற்றது(குப்த சகாப்தத்தின் தொடக்கம்)
- அவர் வெளியிட்ட தங்க நாணயங்களில் முதலாம் சந்திர குப்தரின் உருவம் மற்றும் குமாரதேவியை குறிக்கும் வகையில் லிச்சாவிய என்றும் பொறிக்கப்பட்டள்ளது
- லிச்சாவி என்பது ஒரு மிக பழைமையான கண சங்கம் மற்றும் அதன் பிரதேசம் தற்போது உள்ள கங்கை சமவெளி மற்றும் நேபால் தேராய்க்கும் இடையில் இருந்த பகுதி மக்கள்.
- நாணயத்தில் பொறிக்கப்பட்ட முதல் பெண் அரசியின் உருவம் லிச்சாவி (குமார தேவி)
- மெஹரிரு இரும்பு தூண் இவரின் சாதனைகள் பற்றி விளக்குகிறது