முதலாம் குமாரகுப்தன் -GUPTA EMPIRE -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0
முதலாம் குமாரகுப்தன் -GUPTA EMPIRE -TNPSC HISTORY

குப்தப் பேரரசு - TNPSC HISTORY NOTES IN TAMIL



முதலாம் குமாரகுப்தன் (415 – 455)

  • முதலாம் குமாரகுப்தன் என்பவன் குப்தப் பேரரசனாவான். இவனுக்கு சக்ராதித்யா என்ற பெயரும் இருந்தது.இவர் பொ.ஊ. 415-455 வரை பதவியில் இருந்தார். இவர் இவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்த இரண்டாம் சந்திரகுப்தர், துருவதேவி ஆகியோரின் மகனாவார்
  • ஒரு வல்லமையுள்ள ஆட்சியாளனாக இருந்த இப்பேரரசர், வங்காளத்திலிருந்து கத்தியவார் வரையும், இமயத்திலிருந்து நர்மதா வரையும் பரந்திருந்த பெரிய பேரரசைப் பாதுகாத்து வந்தார். இவர் ஏறத்தாழ 40 ஆண்டுகள் திறமையாக ஆட்சி செய்தார். எனினும், இவரது ஆட்சியின் இறுத்திப் பகுதி சிறப்பாக அமையவில்லை. மத்திய இந்தியாவைச் சேர்ந்த புஷ்யமித்திர சுங்கன் என்பவன் நடத்திய கலகங்களும், வெள்ளை ஹூணர்களின் ஆக்கிரமிப்புக்களும், குப்தப் பேரரசுக்கு பிரச்சினைகளை உண்டாக்கின. ஆனால், குமாரகுப்தர், இவ்விரு பகுதியினரையும் தோற்கடித்துத் தனது வெற்றியைக் கொண்டாடுமுகமாக அசுவமேத வேள்வியை நடத்தினார்.
  • இவர், தனது பெயரைக்கொண்ட குமரக் கடவுளின் உருவம் பொறித்த புதிய நாணயங்களை வெளியிட்டார். இவரைப் பற்றிய குறிப்புகள் ஜூனாகத் பாறைகளில் எழுதப்பட்டுள்ளன


நாளாந்தா பல்கலைக்கழகம்:

  • முதலாம் குமாரகுப்தர் நாளந்தாவில் பௌத்த சமயம் மற்றும் அறிவியல் போன்ற கல்விகளைப் பயில நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவினார். தற்போது நாளாந்தா பல்கலைக்கழகத்தை, யுனெஸ்கோ நிறுவனத்தால் 15 சூலை 2016-இல் உலகப்பாரம்பரியக் களக்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • மஹாவிஹாரா என்று பெயர் பெற்ற நாளந்தா இந்தியாவின் பண்டைய மகதப் பேரரசில் (இன்றைய பிகார்) இருந்த மிகப் பெரிய பௌத்த மடாலயமாகும். இது பாட்னாவிற்குத் தென்மேற்கே சுமார் 95 கிமீ தூரத்தில் பிகார் ஷெரீப் நகரத்திற்கு அருகே உள்ளது. இது பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து 1200 வரை புகழ்பெற்ற கல்விச்சாலையாக இருந்தது. 
  • இது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டும் உலகின் தொன்மைச் சின்னமாகும். கல்வியின் வேதக் மிகவும் முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இந்தியாவின் தொடக்ககாலப் பல்கலைக்கழகங்கள் என்று குறிப்பிடப்படும் தட்சசீலம், நாளந்தா, விக்ரமசீலா போன்ற பெரிய கல்வி நிறுவனங்கள் அமையத் தூண்டுகோலாக இருந்தன. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில் நாளந்தா பல்கலைக்கழகம் குப்தப் பேரரசின் ஆதரவிலும், பின்னர் கன்னோசியின் பேரரசரான ஹர்ஷரின் ஆதரவிலும் செழித்தது.
  • குப்தர் காலத்திலிருந்து தொடர்ந்த பரந்த மனப்பான்மை கொண்ட பண்பாட்டு மரபு ஒன்பதாம் நூற்றாண்டு வரை வளர்ச்சியும் செழுமையும் பெற உதவியது. அதன் பின் வந்த நூற்றாண்டுகளில் படிப்படியாகச் சரிவு ஏற்பட்டது. இக்காலத்தில் வங்கத்தின் பால வம்ச அரசர்களின் ஆதரவால் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பெளத்த மதம் புகழ்பெறத் துவங்கியது. 
  • இப்பல்கலைக்கழகம் அண்மையிலிருந்தும், வெகு தொலைவிலிருந்தும் மாணவர்களை தனது உச்சபட்ச வளர்ச்சிக் காலத்தில் ஈர்த்தது. திபேத். சீனா, கொரியா, மத்திய ஆசியா போன்ற இடங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் வந்தனர். இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் இப்பல்கலைக்கழகத்திற்கு இந்தோனேஷியாவின் சைலேந்திரா வம்சத்தோடு இவ்வம்சத்தின் அரசர் ஒருவர் இவ்வளாகத்தில் ஒரு மடாலயத்தைக் கட்டியுள்ளார். தொடர்பு இருந்தது தெரிய வருகின்றது


TNPSC EXAM KEY POINTS NOTES -குமார குப்தர்

  • இவர் சக்ராதித்தர் என்று அழைக்கப்பட்டார்
  • நாளந்த பல்கலைகழகத்தை உருவாக்கியவர்
  • ஹர்சர் காலத்தில் தான் இது புகழ்பெற்றது
  • யூவாங்க சுவான் நாளந்தா பல்கலைக்கழகத்தில் புத்த மதத்தைப் படிக்க பல ஆண்டுகள் கழித்தார்.
  • எட்டு மிக பெரிய பாடசாலைகளும் மூன்று பெரிய நூலகங்களும் வளாகத்தில் அமைந்திருந்தன
  • பக்தியார் கல்ஜியின் கீழ் மம்லூக்ஸ் (துருக்கிய முஸ்லீம்களால்) நாளந்தா பல்கலைகழகம் அழிக்கப்பட்டது.
  • இன்று, இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • நாளந்தாவில், புத்த மதம் முக்கிய பாடமாக இருந்தது. யோகா, வேத இலக்கியம் மற்றும் மருத்துவம் போன்ற பிற பாடங்களும் கற்பிக்கப்பட்டன.
  • குமாரகுப்தாவின் வாரிசான ஸ்கந்தகுப்தர் ஹீணர்களின் படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
  • குமார குப்தர் முதல் குப்த அரசர் ஹீணர்களின் படையெடுப்பை சந்தித்த அரசர் 
  • இவர் ஹீணர்களின் படையெடுப்பால் இறந்துபோனார்
  • குமார குப்தர் பிறகு ஸ்கந்த குப்தர் ஓரே முறை மட்டும் ஹீணர்களை தோற்கடித்தார்
  • மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பிறகு குப்த வம்சம் ஹீணர்களால் அழிக்கப்பட்டது
  • குப்த பரம்பரையின் கடைசி மிகச் சிறந்த பேரரசர் ஸ்கந்த குப்தர் 
  • இவர் இறந்த பிறகு 467 கி.பி குப்த பேரரசு சரிவை சந்தித்தது

Post a Comment

0Comments

Post a Comment (0)