குறுவைத் தொகுப்பு திட்டம் :
- காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக குறுவைத் தொகுப்பை அறிவித்து வருகிறது. இந்த தொகுப்பைப் பயன்படுத்தி விவசாயிகள் செலவைக் குறைத்து அதிக மகசூல் ஈட்டி வருகின்றனர்.
- இந்நிலையில், கடந்த ஜூன் 12-ம் தேதி 2023 , சேலத்தில் மேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தாண்டு ரூ.75.95 கோடியில் குறுவைத் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்
- இத்திட்டம், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளும் மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவற்றின் அனைத்து வட்டாரங்களிலும், கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களின் டெல்டா வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும்.
- திட்டத்தின்படி, 2.50 லட்சம் ஏக்கருக்கு 30 ஆயிரம் டன் உரங்கள் ரூ.61.65 கோடி மதிப்பில் 100 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும்.
- நெல் விதைகளை பொறுத்தவரை, விதை கிராமத் திட்டத்தில் 2,000 டன்னும், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் 478 டன்னும் என 2,478 டன் விதைகள் 50 சதவீத மானியத்தில் 1.29 லட்சம் ஏக்கருக்கு வழங்கப்படும்.
- மாற்றுப்பயிர் சாகுபடி பரப்புக்குத் தேவையான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துகளுக்கான விதைகள் மாநில நிதி மூலம் 50 சதவீத மானியத்தில் 2.88 கோடியில் வழங்கப்படும். ரூ.50லட்சம் மதிப்பில் 6,250 ஏக்கர் பரப்புக்கான பசுந்தாள் உர விதைகள் வழங்கப்படும். 747 வேளான் இயந்திரங்கள் ரூ.6.44 கோடி மதிப்பில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
- இந்த குறுவை சாகுபடி திட்டத்தின் மூலம் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்திருந்தார். இதை பரிசீலித்த தமிழக அரசு, இந்த ஆண்டின் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை ரூ.75.95 கோடி மதிப்பில் செயல்படுத்த நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிடுகிறது. மேலும், 2.50 லட்சம் ஏக்கர் இலக்கில், 47,500 ஏக்கர் அதாவது 19 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகள், 2,500 ஏக்கர் பழங்குடியின விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுத் திட்டங்கள்: