MATSYA SAMPADA YOJANA / மத்ஸய சம்பதா ஜாக்ருக்தா அபியான் 2023

TNPSC PAYILAGAM
By -
0


மத்ஸய சம்பதா ஜாக்ருக்தா அபியான்

பிரதம மந்திரி மத்ஸய சம்பதா திட்டம் (PMMSY) செயல்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் மத்ஸய சம்பதா ஜாக்ருக்தா அபியான் என்ற தனித்துவமான திட்டத்தைத் தொடங்கி வைத்தது . 

இந்தியா முழுவதும் பரவலை மேம்படுத்துவதற்கும் ‘கடைசி மைல் இணைப்பை’ உறுதி செய்வதற்கும் ஜாக்ருக்தா அபியான் செப்டம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை 6 மாதங்களுக்கு இயங்கும்.

மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்த தகவல்களையும், அறிவையும் பரப்புதல், பயனாளிகளின் வெற்றிக் கதைகளை எடுத்துரைத்தல், 2.8 கோடி மீன் விவசாயிகள் மற்றும் 3477 கடலோர கிராமங்களை சென்றடைதல் ஆகியவை மத்ஸய சம்பதா ஜாக்ருக்தா திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

பிரதம மந்திரி மத்ஸய சம்பதா யோஜனா (PMMSY) என்பது இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறையின் முதன்மை திட்டமாகும், இது 10 செப்டம்பர் 2020 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது. பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூல மீன்வளத் துறைக்கு உத்வேகம் அளிப்பதே இதன் நோக்கம்.

SOURCE :PIB

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)