MOBILE MUTHTHAMMA SCHEME 2023 / 'மொபைல் முத்தம்மா' திட்டம்

TNPSC PAYILAGAM
By -
0



'மொபைல் முத்தம்மா' திட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 'யு.பி.ஐ. டிஜிட்டல்' பரிவர்த்தனை முறை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சென்னை அம்பத்தூர், ஆவடி புறநகர் பகுதிகளில் உள்ள 588 ரேஷன் கடைகளில் 562 ரேஷன் கடைகளில் 'யு.பி.ஐ. டிஜிட்டல்' பரிவர்த்தனை முறையில் பொருட்களை பெற்றுக்கொள்ளும் 'மொபைல் முத்தம்மா' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளில் விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 'மொபைல் முத்தம்மா' என்ற பெயரில், எப்படி பணம் இல்லாமல் செல்போன் மூலம் பொருட்களை வாங்கலாம் என ரேஷன் கடைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் முழுவதும் மொத்தமாக 1,700-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ள நிலையில், 1,500-க்கும் மேற்பட்ட கடைகளில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

க்யூ ஆர் கோடு ,மூலம் பணம் எப்படி அனுப்ப வேண்டும் என்பதை பற்றி படிப்படியாக இதில் விளக்கம் அளிக்கப்படும். சென்னையில் 1500 ரேஷன் கடைகளில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

உங்களிடம் பேடிஎம் இல்லை என்றாலும் வேறு யுபிஐ வழியாகவும் பணம் செலுத்த முடியும். இந்த பணம் நேரடியாக அரசுக்கு சென்று சேரும். 

அதனால் மக்கள் பணம் அரசுக்கு சென்று சேர்வதோடு மக்களும் எளிதாக பணத்தை செலுத்த முடியும். மேலும் இதன் மூலம் சில்லறை முறைகேடுகள் பல தடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முதல் கட்டமாக சென்னை போக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாய விலை கடைகளில் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைந்து UPI செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)