பகுதி – (ஆ) – இலக்கியம்- ஐஞ்சிறுங்காப்பியங்கள்
நீலகேசி
நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்றாகும். சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. இந்நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது.
இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 10 சருக்கங்களை கொண்டது. இப்பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது. இப்பகுதிகளின் பெயர்களையும், அவற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம்.
- கடவுள் வாழ்த்தும் பதிகமும் - 9 பாடல்கள்
- தரும உரை - 140 பாடல்கள்
- குண்டலகேசி வாதம் - 82 பாடல்கள்
- அர்க்க சந்திர வாதம் - 35 பாடல்கள்
- மொக்கல வாதம் - 193 பாடல்கள்
- புத்த வாதம் - 192 பாடல்கள்
- ஆசீவக வாதம் - 71 பாடல்கள்
- சாங்கிய வாதம் - 53 பாடல்கள்
- வைசேடிக வாதம் - 41 பாடல்கள்
- வேத வாதம் - 30 பாடல்கள்
- பூத வாதம் - 41 பாடல்கள்
வேறுபெயர் :
- நீலகேசி திரட்டு
- நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)
பெயர் காரணம்:
நீலம் = கருமை, கேசம் = கூந்தல்
கேசி = கூந்தலை உடையவள்
நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்
TNPSC EXAM KEY POINTS -NEELAKESI
- நீலகேசி சமணர்களால் இயற்றப்பட்டது.
- இதனை நீலகேசித் திரட்டு, நீலகேசித் தெரட்டு, நீலம் என்பர்.
- இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- நீலகேசி என்பது “கேசி” என்று முடியும் பெண்பால் பெயர்களுள் ஒன்று. கேசி அழகிய கூந்தலை உடையவள். நீலகேசி – அழகிய கருங்கூந்தலை உடையவன் என்பது பொருள்.
- 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது
- ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று
- விருத்தப்பாவால் ஆனது.
- நீலகேசி என்னும் சமணப் பெண்துறவி பல சமயத்தாரோடு வாதிட்டு வெற்றி வாகை சூடுவதைப் பற்றி கூறும் நூல்.
- குண்டலகேசிக்கு எதிர்ப்பு நூல்
- தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல்.
- கடவுள் வாழ்த்து பாடல் உட்பட 894 பாடல்கள் உள்ளன.
- பத்துச் சருக்ககங்களை கொண்டது.
- தருமவுரைச் சருக்கம், குண்டலகேசி வாதச்சருக்கம், அருக்கசந்திரவாதச் சருக்கம், மொக்கலவாதச் சருக்கம், சாங்கிய வாதச் சருக்கம், பூதவாதச் சருக்கம், வைசேடிகவாதச் சருக்கம், வேதவாதச் சருக்கம் என்னம் பத்து வாதச் சருக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
- இந்நூலுக்குச் சமயதிவாகர விருத்தி என்ற உரை ஒன்று உள்ளது.
- இவ்வுரையை வகுத்தவர் திவாகர வாமண முனிவர்.
- சிவஞானசித்தியார் பரபக்கம், பிரபோத சந்திரோதயம் முதலிய நூல்களுக்கு இந்நூல் முன்னோடியாகும்.
- பழையனூர் நீலி கதை இக்காப்பியத்தில் வருகிறது.
- நீலகேசி தெருட்டு, நீலம் (யாப்பருங்கல விருத்தியுரை) இதன் அடைமொழி
- இது ஒரு சமண காப்பியம்.
- குண்டலகேசி எனும் பௌத்த மத காப்பியத்திற்கு எதிராக தோன்றிய சமய நூல் நீலகேசியாகும்.
- நீலகேசி என்றால் கருத கூந்தலை உடையவள் என்று பொருள்
- இந்நூல் குண்டலகேசி என்னும் நூலிற்கு எதிராக எழுதப்பட்டது.
- நூலுக்கு உரை எழுதியவர் = திவாகர வாமன முனிவர்.
- இவரின் உரை “சமய திவாகரம்” எனப்படுகிறது.