பெரியபுராணம்-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0


பகுதி – (ஆ) – இலக்கியம்

பெரியபுராணம்

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலை சேக்கிழார் விவரிக்கிறார்.

திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது.

இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராசர் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது

நூற்குறிப்பு :

தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக ஏழுபத்திருவர் சிவனடியார் ஆவர். அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரியபுராணம் எனும் பெயர் பெற்றது.

இந்நூலுக்கு சேக்கிழார் இடம் பெயர் திருத்தொண்டர் புராணம் என்பது. தில்லை நடராசப் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்டதெனவும் கூறுவர்.

இவரது பாடல்கள் அனைத்தும் தெய்வமணம் கமழும் தன்மையுடையன. எனவே தான், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார், பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என சேக்கிழார்  பெருமானை புகழந்துரைத்துள்ளார்.

உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான் பெரியபுராணம் என்பார் திரு.வி.கல்யாண சுந்தரனார்.

காப்பியப் பகுப்பு:

பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.

காப்பிய கதையானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.

முதற் காண்டத்தில்,

  • திருமலைச் சருக்கம்,
  • தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,
  • இலை மலிந்த சருக்கம்,
  • மும்மையால் உலகாண்ட சருக்கம்,
  • திருநின்ற சருக்கம்
என்ற ஐந்து சருக்கங்களும்,

இரண்டாம் காண்டத்தில்,

  • வம்பறா வரிவண்டுச் சருக்கம்,
  • வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,
  • பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,
  • கறைக்கண்டன் சருக்கம்,
  • கடல்சூழ்ந்த சருக்கம்,
  • பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
  • மன்னிய சீர்ச் சருக்கம்,
  • வெள்ளானைச் சருக்கம்

என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.

சேக்கிழார் :

  • பெரிய புராணத்தை அருளியவர் சேக்கிழார்.
  • இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர்.
  • இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
  • அநபாயச் சோழனிடம் தலைமை அமைச்சராய் திகழ்ந்தவர்
  • உத்தமசோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
  • இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் போற்றுவர்.
  • இவரது காலம் கி.பி. 12-ம் நூற்றாண்டு
  • சொற்கோயில் எழுப்பிய இவர், கற்கோயிலும் எழுப்பினார்

அப்பூதியடிகள் புராணம் :

அப்பூதியடிகள் திங்களூரில் பிறந்தவர்

திருநாவுக்கரசரிடம் பேரன்பு கொண்ட இவர் தம் பிள்ளைகளுக்கும் தண்ணீர் பந்தல், பசு, அளவை, நிறைகோல் போன்றவற்றுக்கும் திருநாவுக்கரசு என்றே பெயரிட்டு அழைத்தவர்.

தன் இல்லம் வந்த திருநாவுக்கரசுக்கு அமுது படைக்கும் பொருட்ட தன் மகன் முத்து திருநாவுக்கரசை வாழை இலை அரியச் சொல்ல, அரவம் தீண்டி மகன் இறக்க, செய்தி அறிந்த திருநாவுக்கரசர் “ஒன்று கொலாம்” எனும் திருப்பதிகம்பாடி இறந்துபட்ட பிள்ளையை உயிருடன் எழுப்பினார்.

பெரிய புராணம் தொடர்புடைய செய்திகள்

63 நாயன்மார்களில் பெணிகள் மூவர். குாரைக்கால் அம்மையார், இசைஞானியார் மற்றும் பங்கையர்க்கரசியார் ஆகியோர்.

தொரையடியார்கள் ஒன்பதின்மர் (9 போ). 1) தில்லைவாழ் அந்தணனார் 2)பொய் அடிமை இல்லாத புனிதவர் 3) பத்தராய் பணிவார் 4) பரமனையே பாடுவார் 5) சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர் 6) திருவாரூர் பிறந்தார் 7) முப்போதும் திருமேனி மீண்டுவார் 8) முழுமீறு பூசிய முனிவர் 31அப்பாலும் அடிசேர்ந்தார் ஆகியோர். திருமேனி தீண்டுவார் 8) முழுநீறு பூசிய முனிவர் 91.அப்பாலும் அடிசேர்ந்தார் ஆகியோர்.

முதுமை வேண்டிப் பெற்று பாடியே கைலாயம் சென்றவர் காரைக்கால் அம்மையார். கூன்பாண்டியனை சைவத்திற்கு மாற்றியவர் மங்கையர்க்கரசியார். மனத்தில் கோயில் கட்டியவர் பூசலார்.

திருநாவுக்கரசரை வழிபட்டவர் அப்பூதியடிகள் திருஞானசம்பந்தரை வழிபட்டவர் கணநாத நாயளார். நீரால் விளக்கெரித்தவர் கணம்புல்லவர். இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர் கலியனார்.

தம் கண்களை சிலனுக்கு அளித்தவர் கண்ணப்பர்.

விதைத்த நெல்வை எடுத்துச் ஈமைந்து சிவனடியார்க்கு உணவு படைத்தவர்

இளையான்குடி நாயனார். * பிள்ளைக்கறி சமைத்துப் படைத்தவர் சிறுதொண்டர். முழங்கையால் சந்தம் அரைத்தவர் மூர்த்தி நாயனார்,

திருநீறு அணிந்து வந்த பாகவனுடன் போரிடாமல் வெட்டப்பட்டவர் ஏளாதியார். திருநாளைப் போயார் எனப்படுபவர் தத்தனார். பாணியார் எனப்படுபயர் மங்கைக்கரசியார்.

மனைவியைத் தீனிடாது வாழ்ந்தவர் திருநீலகண்ட நாயனார்.

TNPSC EXAM KEY POINTS :PERIYAPURANAM :

  1. தனியடியார்கள் 63 பேர் மற்றும் தொகையடியார்கள் 9 பேர் என மொத்தம் 72 சிவனடியார்களைப்பற்றி கூறும் புராணம் பெரியபுராணம் .
  2. இது அடியார்களின் பெருமைப்பற்றி கூறுவதால் பெரிய புராணம் என்றழைக்கப்படுகிறது.
  3. தில்லை நடராசப்பெருமான் ‘ உளமெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் ’ என அடியெடுத்துக் கொடுக்கப்பட்டு பாடப்பட்டது .
  4. இப்பாடல் தெய்வமனம் கமழுவதால் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை ‘பக்திச்சுவை நனிசொட்ட சொட்டப் பாடிய கவிவளவ’ என சேக்கிழாரைச் சிறப்பித்துள்ளார் .
  5. இந்நூலுக்கு ஆசிரியர் இட்டபெயர் திருத்தொண்டர் புராணம் .
  6. இது திருத்தொண்டர் மாக்கதை எனவும் அழைக்கப்படுகிறது .
  7. உலகம் , உயிர் , கடவுள் ஆகிய மூன்றனையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம் என திரு.வி.க பாராட்டியுள்ளார் .
  8. தமிழில் தோன்றி இரண்டாவது தேசிய காப்பியம்.
  9. சேக்கிழாரின் இயற்பெயர் அருள்மொழித்தேவர் . இவர் அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார் .
  10. அம்மன்னன் இவருக்கு இட்டபெயர் உத்தமச்சோழபல்லவராயன் .சேக்கிழார் .
  11. தொண்டற்சீர்பரவுவார் என்றும் அழைக்கப்படுகிறார் .
  12. கல்வெட்டுகள் இவரை ராமத்தேவர் என்று கூறுகிறது .
  13. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.
  14. பெரியபுராணம் 2 காண்டங்களையும், 13 சருக்கங்களையும், 4286 பாடல்களையும் கொண்டது.
  15. பெரிய புராணத்தின் முதல் சருக்கம் திருமலைச் சறுக்கம், இறுதிச் சறுக்கம் வெள்ளை யானைச் சறுக்கம்.
  16. அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராக இருந்தவர் சேக்கிழார்.
  17. சேக்கிழார் உத்தம சோழபல்லவர் என்ற பட்டம் பெற்றவர். * தமிழில் தோன்றிய இரண்டாவது தேசிய காப்பியம் - பெரிய புராணம்.
  18. முதல் தேசியக் காப்பியம் என்பது சிலப்பதிகாரம்.
  19. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம். * சொற்கோயில் எழுப்பிய இவர் கற்கோயிலும் எழுப்பியுள்ளார்.
  20. சேக்கிழாரின் பாடல்கள் தெய்வமணம் கமழும் தன்மையுடையவை. தனியடியார்கள் 63, தொகையடியார்கள் 9 பேர் முதலிய 72 சிவனடியார்களின் வரலாற்றை கூறுவதனால் பெருமை பெற்ற புராணம் - பெரிய புராணம்.
  21. 63 நாயன்மார்களில் மூவர் பெண்கள் - காரைக்கால் அம்மையார், இசைஞானியார், மங்கையர்க்கரசியார்.
  22. மூலநூல் சுந்தரர் எழுதிய திருத்தொண்ட தொகை, வழி நூல் நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி.
  23. பெரியபுராணம் பிள்ளை பாதி, புராணம் பாதி எனவும் அழைக்கப்படுகிறது
  24. தில்லை நடராச பெருமான் உலகெலாம் என அடியெடுத்து கொடுக்க பாடப்பட்டது பெரியபுராணம்.
  25. நூல் முற்றுப்பெறும் போதும் உலகெலாம் என முடிகிறது.
  26. பெரியபுராணத்தின் காப்பிய தலைவன்- சுந்தரர், வில்லன் சிவன்.
  27. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் "பக்தி ஈவை நனி சொட்டச் சொட்டப் பாடிய சுவிலலவ" என சேக்கிழாரை பாராட்டியுள்ளார்.
  28. உலகம், உயிர், கடவுள் இவை மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் நாள்
  29. பெரியபுராணம் என நிரு.விசு கூறியுள்ளார். சேக்கிழார் புராணம் பாடியவர் உபதி சிவாச்சாரியார்,
  30. சேக்கிழார் பிள்னைத்தமிழ் பாடியவர் மகாவித்துவான் மீளாட்சி சுந்தரம் பிள்ளை, * திருஞானசம்பந்தரின் வரவறு மட்டும் 1256 பாடல்களாகப் பாடப்பட்டுள்ளது. எனவே
  31. பிள்ளை பாதி புராணாம் பாதி எனப்படுகிறது. சேக்கிழார் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர், இவர் அருபாய சோழனிடம் தலைமை அமைச்சராகத் திகழ்ந்தவர். உத்தம சோழ
  32. பல்லவராயனி என்று பட்டம் பெற்றவர் மேலும் மாதேவடிகள் என்ற சிறப்புப் பெயரும்
  33. இவருக்கு உண்டு. பேலும் தெய்வச் சேக்கிழார் என்றும், தொண்டர் சீர் பரவுவார் என்றும் சேக்கிழார் போத்தப்படுகிறார்.
  34. தனியடியார் அருபத்துமூவரும், தொகையடியாரி ஒன்பதின்மரும் ஆக எழுபந்திருவர் சிவனயடியார் ஆவர். அவ்வடியார்களின் பரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற
  35. புராணம் என்னும் பொருளில் பெரிய புராணம் என்னும் பெயர் பெற்றது. 
  36. இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் திருந்தொண்டர் புராணம் என்பதாகும். இதனை 'திருத்தொண்டர் பாக்கதை என்றும் கூறுவர்.
  37. தில்லை நடராசப் பெருமாள், உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பெற்றதௌவும் கூறுவர். நூல் முற்றுப் பெறுப்போது உலகெலாம் என முடிகிறது. சேக்கிழாரின் பாடங்கள் அனைத்தும் தெய்வ மணம் கமழும் தன்மையுடையன, எனலே தாளி, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார், பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவா சேக்கிழாரைப் புகழ்ந்துரைத்துள்ளார்.
  38. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், பெரியரானம் என்பார் திரு.வி.சுமியானசுந்தாளார்.
  39. பெரிபுராணமானது தொடர்றியைச் செய்யுளாய் ஒரு பழஞ்சரிதந்தைச் சொல்வதாய்
  40. ஒரு பெரிய உள்ளீடாகிய கற்பனையை எடுத்துக் காட்டுவதாக உள்ள ஒரு
  41. பெருங்காப்பியப் - சி.கே.சுப்பிரமணிய முதலியார்.
  42. பெரியபுராணம் இரண்டு காண்டங்களில், திருமலைச் சருக்கம் முதல் வெள்ளை யானைச் சுருக்கம் முடிய 13 சருக்கங்களைக் கொண்டு அமைந்துள்ளது. விருத்தப்பாக்கள் கொண்டது. 4286
  43. 4285 பாக்களில் 1252 பாடல்கள் திருஞான சம்பந்தர் பற்றியே பாடுவதால் பிள்ளை பாதி புரானாம் பாதி என்ற வழக்கும் ஏற்பட்டது.
  44. முதல் காண்டத்தில் 5 சருக்கங்களும், இரண்டாவது காண்டத்தில் 8 சருக்கங்களும் உள்ளன. * சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகை முதல் நூல் (தொகை நூல்).
  45. நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி வழிநூல் (வகை நூல்).
  46. சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் சார்பு நூல் (விரிநூல்).
  47. பன்னிரு திருமுறையில் 12-ஆம் திருமுறையாக பெரியபுராணம் வைக்கப்பட்டுள்ளது. தமிழின் இரண்டாவது தேசியக்காப்பியம் என்று பெரிய புராணத்தைக் கூறுவர். (முதல் தேசியக் காப்பியம் சிலப்பதிகாரம்).
  48. சேக்கிழார் புராணம் என்ற நுாலைப் பாடியவர் உமாபதி சிவாச்சாரியார். சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பாடியவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை,
  49. பெரியபுராணம் - ஓர் ஆய்வு என்ற நூலை இயற்றியவர் அ.ச.ஞானசம்பந்தன்.
  50. சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாற்றில் தொடங்கி, அவர் பாடியுள்ள 63 நாயன்மார்களின் வரலாற்றினையும் விளக்கி, நடுவிலும் முடிவிலும் சுந்தரமூர்த்தியின் வரலாற்றினையே சொல்லி முடித்து, காப்பியத் தலைவன் (சுந்தரர்) ஒருவன் என்று கூறும்படியாக பெரிய புராணத்தை சேக்கிழார் அமைந்துள்ளார்.
  51. இந்நூல் மற்ற சமய, மதங்களின் செல்வாக்கைப் பரவ விடாமல் தடுப்பதுடன், சைவ சமய நம்பிக்கையை சிறப்புடன் வளர்க்கும் நூலாகவும், சைவ சமயக் கருத்துக்களைப் பரப்பும் வகையிலும் எடுத்துரைக்கிறது.
  52. மன்னன் குலோத்துங்க சோழன் சமணத்தின் மீது பற்று கொண்டு, சீவக சிந்தாமணியில் மனம் செலுத்திய நிலையில், சோழனை நல்வழிப்படுத்தப் பாடப்பட்ட நூல் பெரியபுராணம் என்பர்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)