புராஜெக்ட் உத்பவ் என்பது பண்டைய இந்திய அரசாட்சி, போர்க்கலை, ராஜதந்திரம் மற்றும் மகத்தான மூலோபாயம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆழமான இந்தியப் பாரம்பரிய அரசு மற்றும் உத்திசார் சிந்தனைகளை மீண்டும் கண்டுபிடிக்க இந்திய ராணுவத்தால் தொடங்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும்.
இந்தத் திட்டம் இந்தியாவின் வளமான வரலாற்று விவரிப்புகளை அரசு மற்றும் உத்திசார் சிந்தனைகளின் தளங்களில் ஆராய முயற்சிக்கிறது. இது சுதேச ராணுவ முறைகள், வரலாற்று நூல்கள், பிராந்திய நூல்கள் மற்றும் ராச்சியங்கள், கருப்பொருள் ஆய்வுகள் மற்றும் சிக்கலான கௌடில்யர் ஆய்வுகள் உள்ளிட்ட பரந்த அலைவரிசையில் கவனம் செலுத்துகிறது.
இந்த முன்னோடி முயற்சி, இராஜதந்திரம் மற்றும் போர் ஆகியவற்றில் இந்தியாவின் பழங்கால அறிவை இந்திய ராணுவம் அங்கீகரித்ததற்கு சான்றாக நிற்கிறது. புராஜெக்ட் உத்பவ் அதன் மையத்தில், வரலாற்று மற்றும் சமகாலத்தை இணைக்க முயற்சிக்கிறது. உள்நாட்டு ராணுவ அமைப்புகளின் பரிணாமம், காலங்காலமாக கடந்து வந்த உத்திகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த சிந்தனை செயல்முறைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதே இதன் குறிக்கோள் ஆகும்.