சமுத்திர குப்தர் 335 முதல் 375 CE வரை) குறிப்பு:
- முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திரகுப்தரைத் தனது வாரிசாக நியமித்தார். அசோகர் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்ட இவர் குறித்த நீண்ட புகழுரை அவர் மௌரிய பரம்பரையில் வந்ததாகச் சொல்கிறது. இந்தக் கல்வெட்டு சமுத்திரகுப்தர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றபோது அவருக்கு அடிபணிந்த அரசர்கள், ஆட்சிப் பகுதிகள் ஆகியன குறித்த மிகப் பெரும் பட்டியலைத் தருகிறது. முக்கியமாக தில்லி மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் நான்கு அரசர்களையும் அவர் வென்றுள்ளார். தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி அரசர்கள் அடிபணிந்து கப்பம் செலுத்தக் கல்வெட்டில் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- இந்தியா மற்றும் தக்காணத்தின் பழங்குடியினத் தலைவர்கள்), அஸ்ஸாம், வங்கம் போன்ற குறிக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்க்கும்போது, சமுத்திரகுப்தரின் படையெடுப்பு கிழக்குக் கடற்கரையோரம் காஞ்சிபுரம் வரை நீண்டதாகத் தெரிகிறது. கங்கைச் சமவெளியின் மேற்குப் பகுதியில் ஒன்பது அரசர்களைப் படை பலத்தால் வென்றார். காட்டு ராஜாக்களும் (மத்திய கிழக்குப் பகுதிகளின் அரசர்களும், நேபாளம், பஞ்சாப் போன்ற பகுதிகளின் சிற்றரசர்களும் கப்பம் கட்டக் கட்டாயப்படுத்தப்பட்டனர். மாளவர்கள், யுதேயர்கள் உள்ளிட்ட இராஜஸ்தான் பகுதியின் ஒன்பது குடியரசுகள் குப்தர்களின் ஏகாதிபத்தியத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டன. இதோடு, தெய்வபுத்திர சகானுசாகி (ஒரு குஷாண பட்டம்), சாகர் அரசு, இலங்கை அரசு போன்ற வெளிநாட்டு அரசுகளும் கப்பம் கட்டியதாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
- குஷாணர்களுடனான உறவு குறித்து உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இலங்கையைப் பொருத்தவரை, இலங்கை அரசர் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி, கயாவில் ஒரு பௌத்த மடம் கட்ட அனுமதி கோரியுள்ளார். சமுத்திரகுப்தரின் ஆட்சிக்காலம் நாற்பதாண்டுகள் நீடித்ததால். இது போன்ற படையெடுப்புகளைத் திட்டமிட்டு நடத்த அவருக்குப் போதுமான கால அவகாசம் இருந்தது. தனது ராணுவ வெற்றிகளைப் பிரகடனம் செய்ய அவர் அசுவமேத யாகம் நடத்தினார்.
- சமுத்திரகுப்தர் அறிஞர்களையும், ஹரிசேனர் போன்ற கவிஞர்களையும் ஆதரித்தார். இதன் மூலம் சமஸ்கிருத இலக்கியத்தை வளர்ப்பதில் பங்காற்றினார். வைணவத்தை அவர் தீவிரமாகப் பின்பற்றினார். என்றாலும் வசுபந்து என்ற மாபெரும் பெளத்த அறிஞரையும் ஆதரித்தார். கவிதை, இசைப் பிரியரான இவருக்குக் கவிராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது. குப்தர் நாணயங்களில் அவர் வீணை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
சமுத்திர குப்தர் 335 முதல் 375 CE வரை)
- குப்த வம்சத்தில் மிகச் சிறந்த அரசர் சமுத்திர குப்தர்
- முதலாம் சந்திரகுப்தரின் மகன் சமுத்திர குப்தர்
- அலகாபாத் தூண் கல்வெட்டு என்பது சமுத்திர குப்தரின் ஆட்சிக்கான சான்றுகளுக்கு முக்கிய ஆதாரமாகும்
- இவர் இந்திய நெப்போலியன் என்று வி.ஏ. ஸ்மித் என்பவரால் அழைக்கப்படுகிறார்
- கவி பாடும் திறனால் இவர் கவிராஜா என்றும் அழைக்கப்படுகிறார்
- மெய் கீர்த்தி(புகழ்பாடுதல்) எழுதியவர் சமுத்திர குப்தரின் அவைகல புலவர் ஹரிசேனர்
இந்த மெய்கீர்த்தி (அலாகாபாத் கல்தூணின் குறிப்புகளை) மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்
- 9 வட இந்திய மன்னர்கள் மற்றும்
- 12 தென் இந்திய மன்னர்களை வீழ்த்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது
முதல் பகுதியில்
- இரண்டு வட இந்திய மன்னர்கள் வீழ்த்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது,அச்சுதன் மற்றும் நாகபாணர் ஆகியோரை பற்றி முதல் பகுதி விளக்குகிறது
இரண்டாம் பகுதி
- தக்சிணாபாதம் படையெடுப்பு
- தென்னிந்திய படையெடுப்பு பற்றி குறிப்புகள் தக்சிணபாதம் என்று அழைக்கப்படுகிறது
- இவர் 12 தென் இந்திய அரசர்களை வீழ்த்தினார்
- இதில் ஒரு பல்லவ அரசர் விஷ்ணு கோபன்
மூன்றாம் பகுதி
- மீதியுள்ள 7 வட இந்திய மன்னர்களை வீழ்தியது பற்றிய குறிப்பு
- (இவர் வீழ்த்திய வட இந்திய அரசர்களில் பெரும்பாலானோர்கள் நாக வம்சத்தை சார்ந்தவர்கள்)
- தென் இந்தியவில் பல்லவ அரசன் விஷ்ணு கோபனை வெற்றி பெற்ற பிறகு வரி மட்டும் வசூலிக்கப்பட்டது
பிற வெற்றிகள்
- தேவபுத்திர சகானுஷாகி என்ற குஷாண வம்சத்தை சார்ந்த மன்னரை சமுத்திர குப்தர் தோற்கடித்தார்
- (குஷாணர்கள் சீனாவை சார்ந்த யூச்சி வம்சத்தை சார்ந்தவர்)
TNPSC EXAM KEY POINTS -சமுத்திர குப்தர் 335 முதல் 375 CE வரை)
- சாகர்களை(மேற்கு இந்திய பகுதி) வீழ்த்தவில்லை
- பாஞ்சாபும் இவரின் எல்லைக்கு வெளியே இருந்தது
- குப்தர் வம்ச அழிவுக்கு காரணம் ஹீணர்கள்
- சமுத்திரகுப்தரின் அதிகாரம் பழங்குடி குடியரசுகளின் அதிகாரத்தை உடைத்தது, இது ஹீணர்களின் மீண்டும் மீண்டும் படையெடுப்புகளுக்கு வழிவகுத்தது
- ஹீணர்கள் மத்திய ஆசியவிலிருந்த நாடோடி பழங்குடியினர்
- வெள்ளை ஹீணர்கள் குப்த வம்ச வீழ்ச்சிக்கு காரணம்
- குஷாணர்களுடனான உறவு குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
- ஆனால் இலங்கையைப் பொருத்துவரை இலங்கை அரசர் மேகவர்மன் பரிசுகளை சமுத்திர குப்தருக்கு அனுப்பி கயாவில் ஒரு பௌத்த மடம் கட்ட அனுமதி கோரியுள்ளார்.
- சமுத்திர குப்தரின் சம காலத்தவர் ஸ்ரீமேகவர்மன் இலங்கை அரசர்
- அவர் தனது இராணுவ வெற்றிகளை அறிவிக்க குதிரை பலி இடும்(அஸ்சுவமேத யாகம்) சடங்கை செய்தார்.
- இவர் தீவிர வைஷ்ணவத்தை பின்பற்றுபவர், ஆனால் அதை சமயம் சிறந்த புத்த அறிஞர் வசுபந்துக்கு ஆதரவளித்தார்
- இவர் விணை வாசிப்பது போல உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டார்.
- சமுத்திர குப்தர் ஒரு விஷ்ணு பக்கராவார்
- அவர் மிகச் சிறந்த படையெடுப்பாளர் மட்டுமல்ல
- கவிதைப் பிரியரும் இசைப் பிரியருமாவார். அதனால் கவிராஜா எனும் பட்டம் பெற்றார்