சையது வம்சம் (1414-1451):
பஞ்சாப் போர் அணிவகுப்புகளில் தன் நலன்களை மேற்பார்வை பார்ப்பதற்கு கிசர் கானைத் தனது துணையாக நியமித்தார் தைமூர். கிசர் கான் (1414-1421) தானே சென்று தில்லியைக் கைப்பற்றி சையது வம்ச ஆட்சியை நிறுவினார். கிசர் கான் நிறுவிய சையது வம்சத்தில், 1451 வரையிலும் நான்கு சுல்தான்கள் ஆண்டனர். முற்பட்ட சையது சுல்தான்கள், தைமூரின் மகனுக்குத் திறை செலுத்தி ஆட்சி புரிந்தனர். அவர்களின் ஆட்சியை, யாஹியாபின்-அஹ்மத் சிரிந்தி இயற்றிய தாரிக்-இ-முபாரக்-சாஹி குறிப்பிடுகிறது. அவர்களது ஆட்சியின் இறுதியில், பேரரசு தில்லி நகரத்துக்குள் சுருங்கி விட்டது.
தைமூர் இந்தியாவை விட்டுச் செல்லுமுன்பு, கிசிர்கான் என்பவரை முல்தானின் ஆளுநராக நியமித்திருந்தார்.
1414ல் கிசிர்கான் டெல்லியைக் கைப்பற்றி சையது மரபைத் தோற்றுவித்தார். டெல்லி சுல்தானியத்தை மீண்டும் நிலைப்படுத்த அவர் முயன்றார். ஆனால் முடியவில்லை.
1421ல் அவர் மறைந்தபின் அவரது புதல்வன் முபாரக் ஷா ஆட்சிக்கு வந்தார்.
அடுத்து ஆட்சிக்கு வந்த முகமது ஷா தமக்கெதிரான சதிகளை முறியடிப்பதிலேயே காலம் கழித்தார்.
அமைச்சர் பஹலுல் லோடி ஆட்சியைப் பிடித்தார்.
ஆட்சியாளர்களின் பட்டியல் :
கிஸிர்கான் (கி.பி. 1414-1421)
துக்ளக் மரபின் வீழ்ச்சிக்குப் பின்னர் சையது மரபினர் டெல்லியை ஆளத் தொடங்கினார்கள். தைமூர் படையெடுப்பால் டெல்லி பகுதியில் நிகழ்ந்த அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி கொண்ட முல்தானின் ஆளுநர் கிஸிர்கான் (கி.பி. 1414-1421) டெல்லியின் ஆட்சியை கைப்பற்றி கி.பி. 1414 இல் சையது மரபினை தொடங்கினார். இவர் அரச பதவிக்குரிய பட்டப் பெயர்களை சூட்டிக் கொள்ளவில்லை.
பஞ்சாப், சூரத்தில் ஒரு பகுதி ஆகியவற்றை இவர் வென்றாலும் ஜான்பூர், மாளவம், குஜராத், காண்டேஷ், வங்காளம், தக்காணம் ஆகிய பகுதிகளை இழந்தார். கி.பி. 1421 இல் கிஸிர்கான் இறந்துவிடுகிறார்.
முபாரக் ஷா (கி.பி. 1421–1434)
கிஸிர்கான் இறப்பிற்குப் பின்னர் அவரது மகன் முபாரக் ஷா மன்னரானார். இவர் கோவில்களையும் மற்றும் தோ ஆப் பகுதியின் உள்ளூர் தலைவர்கள் செய்த கலக்கத்தையும் அடக்கினார். இவர் டெல்லி நீதிமன்றத்தில் இந்துமத உயர்குடியினரை நியமித்தது குறிப்பிடத்தக்கது. யமுனை நதிக்கரையில் 'முபாரக் பாத்' என்னும் நகரை நிர்மாணித்தார். இந்நிலையில் கி.பி. 1434 இல் முபாரக் கொல்லப்பட்டார்.
முகமது ஷா (கி.பி. 1434–1445)
முபாரக் மரணத்தை அடுத்து அவரது சகோதரனின் மகனான முகமது ஷா மன்னர் ஆனார். லாகூர் ஆளுநர் பஹ்லுல் லோடி உதவியுடன் மாளவத்தின் மீது படையெடுத்து அதனை வென்றார். இவற்றிற்குக் காரணமான பஹ்லுல் லோடிக்கு 'கானி கானா' என்ற பட்டத்தைச் சூட்டினர். கி.பி. 1445 ல் முகமது ஷா இயற்கையெய்தினார்.
அலாவுதீன் ஷா (கி.பி. 1445–1457)
முகமது ஷாவை அடுத்து மன்னரானார். இவர் திறமையற்றுச் செயல்பட்டதால், லாகூர் இன் ஆளுநர் பஹ்லுல் லோடி கி.பி. 1457 ஆம் ஆண்டு டெல்லியின் ஆட்சியைக் கைப்பற்றினார். அதோடு அலாவுதீன் ஷா வுக்கு கட்டாய ஓய்வு அளித்தார். அலாவுதீன் ஷா கி.பி. 1478 இல் மரணமடைந்தார். கி.பி. 1457 இல் சையது வம்சம் முடிவுக்கு வந்தது.
உங்களுக்குத் தெரியுமா?
தில்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையைத் தாமாகவே துறந்து, தில்லிக்கு வெளியே ஒரு சிறிய நகருக்குச் சென்று, முழுமையாக முப்பது ஆண்டுகள் மனநிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான் சய்யித் வம்சத்தில் வந்த ஆலம் 6241 – Abraham Eraly, The Age of Wrath.