ஸ்ரீகுப்தர் -GUPTA EMPIRE -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

முதலாம் சந்திர குப்தர்- GUPTA EMPIRE -TNPSC HISTORY

குப்தப் பேரரசு - TNPSC HISTORY NOTES IN TAMIL


முற்கால குப்தர்கள்

ஸ்ரீகுப்தர் (Śri Gupta) (ஆட்சிக் காலம்:கி பி 240- 280)


  • வட இந்தியாவில் குப்த  வம்சத்தை நிறுவியர் ஆவார். வடக்கு அல்லது நடு வங்காளமே குப்தர்களின் தாயகமாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
  • குப்த வம்சத்தின் முதல் அரசர் ஸ்ரீகுப்தர் (பொ.ஆ. 240-280). இவரைத் தொடர்ந்து இவரது புதல்வர் கடோத்கஜர் (பொ.ஆ. 280-319) ஆட்சிக்கு வந்தார்.
  • கல்வெட்டுகளில் ஸ்ரீகுப்தர், கடோத்கஜர் ஆகிய இருவரும் மகாராஜா என்று குறிக்கப்படுகிறார்கள். கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.ஆ.319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார். 
  • இவர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார். சந்திரகுப்தர் மகாராஜா அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார். மற்றவர்களின் ஆவணங்களிலிருந்து இவரது பேரரசர் நிலை நமக்குப் புலப்படுகிறது. 
  • இவரது ஆட்சிக் காலத்தின் கல்வெட்டோ.நாணயமோநமக்குக்கிடைக்கவில்லை.
  • இரண்டாம் சந்திரகுப்தரின் மகள் பிரபாவதி குப்தரின் கல்வெட்டுக் குறிப்புகளின் படி, மன்னர் ஸ்ரீகுப்தர், குப்த வம்சத்தை நிறுவியதாக அறியப்படுகிறது.
  • நாளாந்தா பல்கலைக் கழகத்தில் பௌத்த சமயக் கல்வி கற்க, சீனாவிலிருந்து வரும் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான, ஸ்ரீகுப்தர் நாளந்தாவிற்கு அருகில் மிருகசிகாவனம் (Mṛgaśikhāvana) எனும் பௌத்த விகாரை ஒன்று கட்டிக் கொடுத்து, அருகில் உள்ள 40 வருவாய் கிராமங்களையும் இவ்விகாரைக்கு தானமாக வழங்கினார் என, கி பி 690-இல் நாளாந்தாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த அறிஞர் யிஜிங் (Yijing) தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்
  • ஸ்ரீகுப்தர் வைணவ சமயத்தைச் சார்ந்தவராக இருப்பினும், தமது இராச்சியத்தில் சமணம் மற்றும் பௌத்த சமயங்களின் நடவடிக்கைகளை ஆதரித்தார்


Post a Comment

0Comments

Post a Comment (0)