தனிப்பெருங்கருணை நாள்:
இராமலிங்க அடிகளாரென அழைக்கப்படும் வள்ளலாரின் வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் 5-ஐ தனிப்பெருங்கருணை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளதால் ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இவர் கடலூர் மாவட்டத்தின் வடலூரில் சத்திய ஞான சபை நிறுவினார்.
."அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823–இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கைநெறியாகக் கொண்டு வாழ்ந்தார். அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார்.
இராமலிங்க அடிகளார் எழுதிய “மனுமுறை கண்ட வாசகத்தில்” இடம் பெற மன்னனின் பெயர் எல்லாளன் ஆகும். இவரின் மறுப்பெயர் மனுநீதி சோழன் ஆகும் . மனுமுறைகண்ட வாசகம் என்பது வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகள் அருளிய இயற்றமிழ் நூலாகும்.மனுநீதிச் சோழன் நீதி கேட்டு வந்த பசுவிற்காக தன் புதல்வனான வீதிவிடங்கனை தேர்க்காலில் ஏற்றி அக்கன்று போல் மாய்த்துக் கொல்ல ஆணைபிறப்பித்தலும் சிவனருளால் சோழன் மகன் வீதிவிடங்கன் உயிர்ப்பிக்கப்பட்டதையும் கதையாகக் கூறும் நூலாகும்.வள்ளலாரின் 200 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் “தனிப்பெருங்கருணை நாள்” அனுசரிக்கப்படுகிறது.
2023 அக்டோபர் 05-ல் வள்ளலாரின் 200வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது