டெல்லி கில்ஜி வம்சம் -TNPSC HISTORY AND CULTURE OF INDIA IN TAMIL ( 6 TO 12 BOOK NOTES )

TNPSC PAYILAGAM
By -
0

 

டெல்லி கில்ஜி வம்சம் (1290-1320) :

  • ஜலால்-உத்-தின் ஃபிரோஸ் கில்ஜி 1290-1296 (கில்ஜி/கல்ஜி வம்சத்தை நிறுவியவர்
  • அலாவுதீன் கில்ஜி 1296-1316 (ஜலால்-உத்-தின் ஃபிரோஸ் கில்ஜியின் மருமகன்)
  • குத்புத்தீன் முபாரக் ஷா 1316-1320 (அலாவுதீன் கில்ஜியின் மகன்)

ஜலாலுதீன் கில்ஜி (1290-1296):

  • இந்தியாவில் முஸ்லீம் பேரரசு அதன் உச்சகட்டத்தை தொட்டது கில்ஜிகளின் ஆட்சிக் காலத்தில்தான். கில்ஜி வம்சத்தை நிறுவியவர் ஜலாலுதீன் கில்ஜி. ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு வயது எழுபது. கருணை மனம் படைத்தவர்.
  • பால்பனின் மருமகனான மாலிக் சஜ்ஜீ என்பவரை காராவின் ஆளுநராக தொடர்ந்து இருக்க அவர் அனுமதித்தார். அவரது தாரளமனதை சஜ்ஜீ தவறாகப் புரிந்து கொண்டார். சஜ்ஜீ கலகத்தில் இறங்கியபோது கலகத்தை ஒடுக்கிய ஜலாலுதீன் அவரை மன்னிக்கவும் செய்தார்.
  • தக்கர்கள் நாட்டை கொள்ளையடித்து வந்தனர். அவர்களைக் கைப்பற்றிய சுல்தான் எச்சரித்து, மன்னித்து, விடுதலை செய்தார்.
  • 1292ல் மாலிக் சஜ்ஜீ இரண்டாம் முறையாக கிளர்ச்சியிலீடுபட்டபோது அவரை நீக்கிவிட்டு, தனது மருமகன் அலாவுதீன் கில்ஜியை காராவின் ஆளுநராக நியமித்தார்.
  • 1296ல் அலாவுதீன் கில்ஜி தேவகிரிமீது படையெடுத்து ஏராளமான செல்வத்துடன் காரா திரும்பினார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் கலந்து கொண்ட மாமனாரும் சுல்தானுமான ஜலாலுதீன் கில்ஜியை சதிசெய்து கொன்றுவிட்டு அலாவுதீன் கில்ஜி டெல்லி அரியணையக் கைப்பற்றினார்.

அலாவுதீனு; கில்ஜி (1296 – 1316)

  • டெல்லிக்கு வந்த அலாவுதீன் கில்ஜி தம்மை வெறுத்த உயர்குடியினருக்கும் டெல்லி அமீர்களுக்கும் ஏராளமான செல்வத்தை வாரிக் கொடுத்து அவர்களை தம்பக்கம் சாய்த்துக் கொண்டார். எஞ்சிய எதிர்ப்பாளர்களை கடுமையாக தண்டித்தார்.
  • உயர்குடியினரின் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்துவதற்கு அவர் விதிமுறைகளை வகுத்தார்.
  • அவர்களிடமிருந்த அளவற்ற செல்வம், உயர்குடியினருக்கிடையே அளவற்ற செல்வம், உயர்குடியினருக்கிடையே காணப்படும் மண உறவுகள், திறமையற்ற ஒற்றர்முறை, மது அருந்துதல் போன்றவையே கிளர்ச்சிகளுக்கு அடிப்படைக் காரணங்கள் என்று அலாவுதீன் கில்ஜி கருதினார்.
  • எனவே அவர் நான்கு அவசர ஆணைகளை பிறப்பித்தார். உயர்குடியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒற்றர்முறையை செம்மையாக சீரமைத்தார். உயர் குடியினரின் ரகசிய நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக சுல்தானின் கவனத்திற்கு வரும்படி செய்தார். மது விற்பனையும், போதை மருந்தும் தடை செய்யப்பட்டன.
  • சுல்தானின் அனுமதியின்றி விழாக்களும் கேளிக்கைகளும் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டன. இத்தகைய கடும் நடவடிக்கைகளினால் அவரது ஆட்சிக் காலத்தில் கிளர்ச்சிகள் தவிர்க்கப்பட்டன.
  • நாற்பதின்மர் (சகல்கானி) : தகுதியிலும் வரிசையிலும் சுல்தானை அடுத்துப் பிரபுக்கள் இருந்தனர். அரசை நிர்வகிப்பதில் அவர்கள் ஒரு தீர்மானகரமான பங்கு வகித்தனர். பிரபுக்களே ஆளும் வர்க்கமாக இருந்தபோதிலும் அவர்கள், துருக்கியர், பாரசீகர், அரபியர், எகிப்தியர், இந்திய முஸ்லீம்கள் போன்ற வெவ்வேறு இனக்குழுக்களிலிருந்தும் இனங்களிலிருந்தும் வந்தனர்.இல்துமிஷ், நாற்பதின்மர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அவர்களிலிருந்து தெரிவு செய்து இராணுவத்திலும் குடிமை நிர்வாகத்திலும் நியமித்தார். இல்துமிஷ் இறந்த பிறகு, ருக்னுத்தின் ஃபெரோஸை அரசனாக்க வேண்டும் என்ற இல்துமிஷின் விருப்பத்தைப் புறந்தள்ளும் அளவுக்கு அந்த நாற்பதின்மர் குழு வலுமிக்கதாயிற்று. இரஸியா, தனது நலன்களைக் காத்துக்கொள்வதற்காக, அபிசீனிய அடிமை யாகுத் தலைமையில் துருக்கியரல்லாத பிரபுக்களையும் இந்திய முஸ்லீம் பிரபுக்களையும் கொண்ட ஒரு குழு அமைத்தார். எனினும் இதை, அவ்விருவரையும் கொலை செய்ய வைத்த துருக்கிய பிரபுக்கள் எதிர்த்தனர். இவ்வாறாக, அரசரின் மூத்த மகனே ஆட்சிக்கு வாரிசு என்ற விதி இல்லாத நிலையில் அரசுரிமை கோரிய ஏதோ ஒருவர் தரப்பில் பிரபுக்கள் சேர்ந்துகொண்டனர். இது, சுல்தானைத் தெரிந்தெடுக்க உதவியது அல்லது ஆட்சி நிலைகுலைவதற்குப் பங்களித்தது. பிரபுக்கள் பல குழுக்களாக சுல்தானுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டனர். எனவே அந்த நாற்பதின்மர் அமைப்பு சுல்தானியத்தின் நிலைத்தன்மைக்குப் பெரிய அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி, அதை பால்பன் ஒழித்தார்; இதன் மூலம் “துருக்கிய பிரபுக்கள்” ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது ஆணையை மீறுகிற பிரபுக்களின் நிலங்களைப் பறிமுதல் செய்தார். அலாவுதீன் கில்ஜி, ஒற்றர்களைப் பணியமர்த்தி, துருக்கியப் பிரபுக்களின் கள்ளத்தனமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் தம்மிடம் நேரடியாகத் தெரிவிக்குமாறு பணித்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்தார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)