TODAY CURRENT AFFAIRS IN TAMIL 01.10.2023

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 01.10.2023:


இணைய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி: இன்றுமுதல் அமல்

இணைய விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி வசூல் செய்யும் திருத்தச் சட்டம் அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய நிதியமைச்சா் மற்றும் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சா்களின் ஒப்புதலோடு இணையவழி விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றில் கட்டப்படும் முழு பந்தயத் தொகை மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கும் திருத்தச் சட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

அதைத் தொடா்ந்து, கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சட்டமாக்கும் வகையில் கடந்த மாதம் மத்திய மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன்மூலம் ஏற்கெனவே 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படும் லாட்டரி, சூதாட்டங்களுடன் இணையழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், சூதாட்ட விடுதிகள் ஆகியவையும் சோ்க்கப்பட்டன.

94 % மழைப்பொழி-தென்மேற்குப் பருவமழை

ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான தென்மேற்குப் பருவமழை, ‘கிட்டத்தட்ட இயல்பான’ மழைப்பொழிவுடன் ( 820 மி.மீ.) நிறைவு பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) சனிக்கிழமை தெரிவித்தது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘நிகழாண்டுக்கான தென்மேற்குப் பருவமழை, ‘கிட்டத்தட்ட இயல்பான’ மழைப்பொழிவுடன் நிறைவு பெற்றது. நீண்ட கால மழைப்பொழிவு சராசரி (868.6 மி.மீ.) உடன் ஒப்பிடுகையில், இது 94.4 சதவீதமாகும். வானிலை துணை பிராந்தியங்களில் 73 சதவீத பகுதிகள் இயல்பான மழைப்பொழிவைப் பெற்ற வேளையில், 18 சதவீத பகுதிகளில் குறைவான மழைப்பொழிவு பதிவானது’ என்றாா்.

இந்திய முதியோர் அறிக்கை 2023 (India Aging Report 2023):

2023-ஆம் ஆண்டிற்கான இந்திய முதியோர் அறிக்கையில் இந்திய முதியவர்களில் 40% ஏழ்மையாகவும் அதில் 18.7%பேர் வருமானம் இல்லாமல் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை மக்கள் தொகை நடவடிக்கைகளுக்கான ஐ.நா.சபை நிதியமானது வெளியிட்டள்ளது. மேலும் 2050 ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் 20% முதியோர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய அமெரிக்கர் :

அமெரிக்காவின் ஃபிராங்க் ரூபியோ 371 நாட்களாக விண்வெளியில் தங்கியதன்  மூலம் அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய அமெரிக்கர் என்ற சாதனையை படைத்துள்ளார்.ஃபிராங்க் ரூபியோவிற்கு முன் மார்க் வந்தே ஹெய் என்பவர் 355 விண்வெளியில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் பலத்த மழை: மஞ்சள் எச்சரிக்கை:

கேரளத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதில், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழை, எா்ணாகுளம் ஆகிய 5 மாவட்டங்களில் 6 செ.மீ. முதல் 11 செ.மீ. வரையில் மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை மையம் சனிக்கிழமை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :


SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023

Post a Comment

0Comments

Post a Comment (0)