TODAY CURRENT AFFAIRS IN TAMIL 05.10.2023

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 05.10.2023:

வள்ளாலார் பிறந்த தினம்:

இராமலிங்க அடிகளாரென அழைக்கப்படும் வள்ளலாரின் வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் 5-ஐ தனிப்பெருங்கருணை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளதால் ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இவர் கடலூர் மாவட்டத்தின் வடலூரில் சத்திய ஞான சபை நிறுவினார்.

2023 அக்டோபர் 05-ல் வள்ளலாரின் 200வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு:

இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த யோன் ஃபோஸ்ஸ-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் அவரின் புதுமையான நாடகங்களுக்காகவும் உரைநடைகளுக்காவும் இந்த விருது வழங்கப்பட உள்ளது. 

இந்த ஆண்டு இலக்கியப் பரிசு பெற்ற யோன் போஸ்ஸ 'ஃபோஸ்ஸ மினிமலிசம்' என்று அழைக்கப்படும் ஒரு மிகச் சிறந்த பாணியில் குறுகிய நாவல்களை எழுதியுள்ளார். நார்வே எழுத்தாளர் யோன் ஃபோஸ்ஸ எழுதிய புதிய நாடகம் மற்றும் உரைநடைக்காக, நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலக்கியத்துக்கான நோபல் பரிசானது ஒரு மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.8.32 கோடி), சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கமாகும்.

இரட்டை இருக்கை தேஜஸ் இலகுரக போர் விமானம்:

இரட்டை இருக்கை தேஜஸ் இலகுரக போர் விமானம் இந்திய விமானப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்விமானமானது ஹிந்துஸ்தான் விமானவியல் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி:

உலக வங்கியின் கணிப்பின்படி, இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும்.

இந்திய அணி சாதனை:

ஆசிய விளையாட்டு 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய நால்வர் அணி புதிய சாதனை படைத்துள்ளது.

ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், அஜ்மல் முஹமது, ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய நால்வர் அணி பங்கேற்றது. இதில், 3:01.58 நிமிடங்களில் இலக்கை அடைந்து இந்திய அணி சாதனை படைத்தது.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான 128வது அரசியலமைப்புத் திருத்த மசோதா":

மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான 128வது அரசியலமைப்புத் திருத்த மசோதா இந்தியக் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 106வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக மாறியது.

சம்ப்ரிதி 2023:

மேகாலயா மாநிலம் உம்ரோயில் இந்தியா- வங்கதேசம்  இடையே 11-ம் ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சியான சம்ப்ரிதி 2023 அக்டோபர் 03-ம் தேதி தொடங்கியது. சுழற்சி அடிப்படையில் இரண்டு நாடுகளும் ஏற்பாடு செய்யும் இந்தப் பயிற்சி அடிப்படையில் வலுவான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை குறிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் அசாமின் ஜோர்ஹாட்டில் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி 2022 –ம் ஆண்டு வரை பத்து வெற்றிகரமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஸ்வதேஷ் தர்ஷன்:

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கிருஷ்ணா சுற்றுவட்டத்தின் ஒரு பகுதியாக, ராஜஸ்தானின் நாத்துவாராவில் சுற்றுலா வசதிகளை பிரதமர் திறந்து வைத்தார்.

உலகிலேயே மஞ்சள் உற்பத்தி-இந்தியா முதலிடம்:

உலகிலேயே மஞ்சள் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவில் 3.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு, 11.61 லட்சம் டன் (உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 75% க்கும் அதிகமானது) உற்பத்தி செய்யப்பட்டது. 

இந்தியாவில் 30 க்கும் மேற்பட்ட வகையான மஞ்சள் பயிரிடப்படுகிறது, மேலும் இது நாட்டின் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மஞ்சளை அதிகம் உற்பத்தி செய்கின்றன. தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 5

5th October கங்கை நதி டால்பின் தினம்

5th October உலக ஆசிரியர் தினம்: செப்டம்பர் 5 டாக்டர் சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கருப்பொருள்:“The Teachers we need for the education we want; The global imperative to reverse the teacher Shorage”( நாம் விரும்பும் கல்விக்கு ஆசிரியர்கள் தேவை: ஆசிரியர் பற்றாக்குறையை மாற்றுவதற்கான உலகளாவிய கட்டாயம்” )


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :


SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023

Post a Comment

0Comments

Post a Comment (0)