TODAY CURRENT AFFAIRS IN TAMIL 06.10.2023

TNPSC PAYILAGAM
By -
0

 



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 06.10.2023


பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு:

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடானது கிடைத்துள்ளது.புவிசார் குறியீடு பட்டியலில் முதலிடத்தினை தமிழ்நாடும், இரண்டாவது இடத்தை உத்திரபிரதேசமும், மூன்றாவது இடத்தை கர்நாடகாமும் பிடித்துள்ளன.

புளிக்கவைக்கப்பட்ட பால்- யக் சுர்பி-புவிசார் குறியீடு:

அருணாச்சலப் பிரதேசத்தில் இயற்கையாகவே புளிக்கவைக்கப்பட்ட பால் தயாரிப்பான ‘யக் சுர்பி’க்கு மதிப்புமிக்க புவிசார் குறியீடு (GI) அந்தஸ்து கிடைத்துள்ளது.யாக் (Yak) என்பது  இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம் ஆகும் .

இந்திய அணி தங்கப்பதக்கம்:

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. 2018ஆம் அண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஜப்பான் அணியை வீழ்த்தியதன்மூலம், ஆசிய விளையாட்டில் 4வது முறையாக இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இதன்மூலம் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதியடைந்துள்ளது.

வள்ளலார் சர்வதேச மைய ஆணை ஒப்படைப்பு:

வடலூரில் அமைய உள்ள வள்ளலார் சர்வதேச மையத்திற்கான (Vallalar International Centre) அராசனையானது முப்பெரும் விழாக்குழு தலைவரான பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார்.

வள்ளலார் சர்வதேச மையமானது ரூ.100 கோடி மதீப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளது.கடலூரில் 17 ஏக்கர் பரப்பில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு வள்ளலார் பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

அமைதிக்கான நோபல் பரிசு :

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முகம்மதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்க நார்வே நோபல் அமைப்பு முடிவு செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு பெற்ற நர்கிஸ் முகம்மதியின் துணிச்சலான போராட்டம் அவரது சொந்த வாழ்வில் மிகப்பெரிய துயரங்களுடன்தான் நிகழ்ந்திருக்கிறது. ஈரானிய ஆட்சியாளர்கள் அவரை 13 முறை கைது செய்துள்ளனர். ஐந்து முறை அவர் குற்றவாளி என்று தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 31 ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையுடன் 154 கசையடிகளையும் பெற்றுள்ளார். துயரம் என்னவென்றால், நர்கிஸ் முகம்மதி இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.

உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையம்:

சென்னையில் (போரூர்) நிறுவப்பட்ட உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையத்தை (Global Technology and Innovation Center) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

3லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இம்மையமானது ஜப்பானின் ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனம் சார்பில் நிறுவப்பட்டது.

இந்த மையம் 40 நாடுகளில் ஆண்டுக்கு 1,000க்கும் மேற்பட்ட செயல்  திட்டங்களை நிறைவேற்றும் வகையில் உள்ளது. திட்ட மேலாண்மை, டெண்டரிங், , வாடிக்கையாளர் சேவைகள், சந்தைப்படுத்தல், இணைய பாதுகாப்பு, , கணினி ஆய்வுகள் மற்றும் தொலைநிலை சேவைகள் ஆகிய செயல் திட்டங்களை நிறைவேற்ற உள்ளது.

தெலங்கானா பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் தொடக்கம்:

தமிழகத்தைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் இன்று முதல் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது காலை உணவுத் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 15,75,900 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்த திட்டம் தமிழக மக்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தை பின்பன்றி தெலங்கானாவிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பேறுகால இறப்பு (Perinatal mortality):

மக்கள் நல்வாழ்வுத் துறையானது தமிழகத்தில் ஓராண்டில் 479 பேறுகால மரணங்கள் நடந்துள்ளதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறுவை சாகுபடி: ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு:

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, மேட்டூா் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-இல் தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால், கா்நாடக மாநிலத்தில் இருந்து போதிய அளவு காவிரி நீா் பெறப்படாத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40,000 ஏக்கா் பரப்பில் நெற்பயிா்கள் வாடிய நிலையில் உள்ளன. பயிா் பாதிப்பு விவரங்கள் முறையாகக் கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாடு:

கானாவின் தலைநகரான அக்ராவில், காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாடு (Commonwealth Parliamentary Association Conference) நடைபெற்றுள்ளது.

காமன்வெல்த் கூட்டமைப்பில்லுள்ள மாநில, தேசிய சபாநாயர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில் தமிழ்நாடு சார்பில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

உலகின் சராசரி வெப்பநிலை-புதிய உச்சம்

கடந்த செப்டம்பா் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பா் மாதத்தில் உலக வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 16.38 டிகிரி செல்சியசாக (61.5 டிகிரி ஃபாரன்ஹீட்) பதிவாகியுள்ளது. இந்த வெப்பம், இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர சராசரி வெப்பநிலையாகும். இதற்கு முன்னா் கடந்த 2020-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டதுதான் அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக இருந்தது. தற்போது செப்டம்பரில் பதிவாகியுள்ள புதிய உச்சம், முந்தைய உச்சத்தைவிட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

சிக்கிம் லோனாக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு அதீத மழை :

சிக்கிம் லோனாக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு அதீத மழை பெய்தது. தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மங்கன், கேங்டாக் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய ராணுவத்தினர் 23 பேர், பொதுமக்கள் உட்பட 102 பேர் காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது ஒரு பனிப்பாறை- மொரைன்(Moraines)அணைக்கட்டப்பட்ட ஏரியாகும். இது சிக்கிமின் வடமேற்கு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 5200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தால் (Glacial Lake Outburst Flood (GLOFs)) பாதிக்கப்படக்கூடிய அபாயகரமான 14 ஏரிகளில் இதுவும் ஒன்றாகும்.இது லோனாக் பனிப்பாறை உருகியதால் உருவானது. தெற்கு லோனாக் ஏரி திடீரென நிரம்பியதால் டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மகளிர் உரிமைத்தொகை: 7 லட்சம் மறு விண்ணப்பங்கள்:

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தற்போது வரை 7 லட்சம் பேர் மறுவிண்ணப்பம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்காக தமிழ்நாடு முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், விடுபட்டவர்களுக்கு செப்டம்பர் 18 முதல் அவகாசம் வழங்கபட்டது. மறுவிண்ணப்பம் செய்ய 30 நாட்கள் அவகாசம் தரப்பட்ட நிலையில் தற்போது வரை 7 லட்சம் பேர் விண்ணபித்துள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 6

6th October உலக புன்னகை தினம் (World Smile Day) :ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளியன்று அனுசரிக்கப்படுகிறது.கருப்பொருள்: “Radiate Joy”("ஒரு கருணை செயலைச் செய்யுங்கள் - ஒருவருக்கு சிரிக்க உதவுங்கள்")

6th October உலக பெருமூளை பைசி தினம் (World Cerebral Paisy Day) : உலக பெருமூளை வாதம் தினம் அக்டோபர் 6 அன்று அனுசரிக்கப்படுகிறது. பெருமூளை வாதம் என்பது வாழ்நாள் முழுதும் குணப்படுத்த முடியாத ஒரு நோய். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பெருமூளை வாதத்தால் பாதிப்பு அடைந்தவர்களின் குடும்பங்கள், ஆதரவாளர்கள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைத்து இந்த நாள் அனுசரிக்கிறது . கருப்பொருள்: “Together Stronger”(“ஒன்றாக வலிமையாக இருப்போம் ) 


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :


SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023

Post a Comment

0Comments

Post a Comment (0)