TODAY CURRENT AFFAIRS IN TAMIL 07.10.2023

TNPSC PAYILAGAM
By -
0


  

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 07.10.2023

ரூ.3.43 லட்சம் கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ்:

வங்கிகள் மூலம் ரூ.3.43 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் (96 சதவீதம்) திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீதம் ரூ.12,000 கோடி மதிப்பிலான நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை எனவும் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்  தெரிவித்தாா். 

புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கடந்த மே மாதத்தில் அறிவித்தது. மக்கள், தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ள கடந்த 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் சனிக்கிழமை (அக். 7) வரை நீட்டிக்கப்பட்டது.

ககன்யான் திட்ட மாதிரி (Gaganyaan Project Model):

சென்னையின் கேசிபி நிறுவனமானது மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான தொழில்நுட்ப உபகரண கட்டமைப்பினை தயாரித்து இஸ்ரோவிடம் வழங்கியுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் :

மகப்பேறு அவசர சிகிச்சைகள், பேறுகால இறப்புகளை தடுக்கும் பயிற்சிகள் மேற்கொள்ளும் விதமாகவும் பேறுகால இறப்புகளை தடுக்க பேறுகால இறப்பு தடுககும் விதமாகவும் தமிழக பொது சுகாதரத்துறை சிங்கப்பூருடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறையானது தமிழகத்தில் ஓராண்டில் 479 பேறுகால மரணங்கள் நடந்துள்ளதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று புதிய மாவட்டங்கள்:

ராஜஸ்தான் மாநிலத்தில் மல்புரா, சுஜான்கா், கச்மன் நகரம் ஆகிய மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் தெரிவித்துள்ளாா். 

நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது மல்புரா, சுஜன்கா், கச்மன் நகரம் ஆகிய மூன்று மாவட்டங்களை உருவாக்கியதன்மூலம் மாநிலத்தில் மொத்தம் 53 மாவட்டங்கள் உள்ளன.

மார்பக புற்றுநோய் அறிக்கை :

கடந்த 10 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பானது ஆண்டுக்கு 6 முதல் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், 2021-22 தரவுகளின் படி இந்தியாவில் 13,92,179 பேருக்கும், தமிழ் நாட்டில் 81,814 பேருக்கு  புற்றுநோய் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களை விட பெண்களே அதிக அளவில் புற்றுநோய்க்கு ஆளாகின்றன.

பெண்களில் லட்சத்தில் 52 பேருக்கு மார்பகப் புற்று நோயும், 18 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோயும், 6 பேருக்கு கருப்பை புற்றுநோய்க்கும் ஆளாகின்றன.

ஆசிய – பசிஃபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இந்தியா:

2018 – 2021, 2021 – 2023 ஆகிய ஆண்டுகளில் ஆசிய – பசிஃபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இந்தியா ஏற்கனவே இரண்டு முறை பணியாற்றிய நிலையில் தற்போது இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் ஆதரவின் கீழ் 1977-ஆம் ஆண்டில்அமைக்கப்பட்ட  ஆசிய – பசிஃபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனம் தனித்துவமான பிராந்திய அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகும்.சர்வதேச ஒலிபரப்பு நிறுவனத்தில் மதிப்புமிக்க இப்பதவியை வகிப்பது, இந்தியா மற்றும் பிரசார் பாரதி மீது சர்வதேச ஊடகங்களின் வலுவான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. ஒலிபரப்புத் துறையில் மேலும் பல மைல்கற்களை அடைய இந்தியாவுக்கு  அடித்தளம் அமைக்கிறது.

கூடுதல் தூதரக அதிகாரிகளை இந்தியாவிலிருந்து திரும்பப் பெற்ற கனடா:

தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையில் சமநிலையைக் கடைப்பிடிக்குமாறு கனடாவுக்கு இந்தியா சாா்பில் தொடா் வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியாவில் பணியமா்த்தப்பட்டிருந்த கூடுதல் தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கனடாவிலிருந்து வெளியாகும் சிடிவி செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘கூடுதல் தூதுரக அதிகாரிகளை வரும் 10-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா சாா்பில் கடந்த வாரம் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தூதரக அதிகாரிகளை இந்தியாவிலிருந்து கனடா திரும்பப் பெற்றுள்ளது. அவா்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு மலேசிய தலைநகா் கோலாலம்பூா் அல்லது சிங்கப்பூரில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக பிரிட்டனைச் சோ்ந்த ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில், ‘இந்தியாவில் கனடா சாா்பில் 62 தூதரக அதிகாரிகள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அவா்களில் 41 பேரை திரும்பப் பெற வேண்டும்’ என்று இந்தியா அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

முதல் STEM பூங்கா:

கோவை மாநகராட்சி 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான STEM பூங்காவிற்கு டெண்டர் எடுத்துள்ளது.கோயம்புத்தூர் நகர மாநகராட்சி (CCMC) STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பூங்காவை அமைப்பதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.இந்தியாவின் முதல் STEM பூங்கா தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில்  அமைக்கப்பட்டது.

ஒரிசா பாலு காலமானார்:

கடலில் மணலில் ஆமைகள் முட்டையிட வருவதன் வழித்தடத்தை பின்பற்றி, தமிழ் கடலோடிகள் உலகம் முழுவதும் பயணித்து தொடர்பான ஆய்வகளையும் மேற்கொண்ட கடலியல் – தமிழ்வரலாற்று ஆய்வாளரான ஒரிசா பாலு காலமானார்.

திருச்சியின் உறையூரைச் பூர்வீகமாக கொண்ட ஒரிசா பாலுவின் இயற்பெயர் சிவ பாலசுப்பிரமணி ஆகும்

கடல் சார் தொன்மை, அதன் வழியே தமிழர் மரபுகள் குறித்து ஒரிசா பாலு மேற்கொண்டுள்ளார். மேலும் அழிந்து போனதாகக் கருதப்படும் குமரிக்கண்டம், லெமூரிய கண்டம் பற்றிய தொடர்பு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்.

இந்திய சினிமாவில் முதன்முறை: ஜவான் வரலாற்று சாதனை:

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது.

உலகம் முழுவதும் 30வது நாளில் ரூ.1103.27 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஹிந்தி திரைப்படம் இவ்வளவு வசூலித்துள்ளதாக படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ரெப்போ ரேட் – ஆர்பிஐ:

ஆர்பிஐ-யிடம் இருந்து மற்ற வங்கிகள் வாங்கும் கடனுக்கு கணக்கிடப்படும் வட்டியான ரெப்போ ரேட்டில் மாற்றமில்லை (6.50%) என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்ட 2023-24-ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5%மாகவும், பணவீக்கம் 5.4% தொடர உள்ளது.

உலகிலேயே மிக நீளமான பாம்பு இனம் :

உலகிலேயே மிக நீளமான பாம்பு இனம் என அறியப்படும் வரிக்கோடுகளுடைய மலைப்பாம்பு இனம் சென்னை ஐஐடி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. வரிக்கோடுகளுடைய மலைம்பாம்பு இனத்தைச் சேர்ந்த பாம்பை கிண்டி தேசிய பூங்கா அதிகாரிகள் பிடித்துச் சென்றுனர். அது 7 முதல் 8 அடி நீளம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. உலகிலேயே மிக நீளமான மற்றும் அதிக எடை கொண்ட பாம்புகளின் இனத்தில் வரிக்கோடுகள் கொண்ட மலைம்பாம்பு இனம்தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை நிகோபார் தீவுகளில் மட்டுமே காணப்பட்டுவந்தது. இனப்பெருக்கம் செய்யும் அளவுக்கு இந்த இனப் பாம்புகள் இல்லாமல், சென்னை-ஐஐடி வளாகத்தில் ஒரு மலைப்பாம்பு எப்படி வந்தது என்பது புதிராக உள்ளது.

முதல் உயர் தொழில்நுட்ப விளையாட்டுப் பயிற்சி மையம்:

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் மாற்றுத்திறனாளிக்கான  நாட்டின் முதல் உயர் தொழில்நுட்ப விளையாட்டுப் பயிற்சி மையத்தை பிரதமர்  திறந்து வைத்தார் இந்த முன்முயற்சியானது விளையாட்டில் சம வாய்ப்புகளை வழங்குதல், திறமைகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் பங்கேற்பதை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதுமைப்பித்தமன் நினைவு விருது – 2022 :

2022-ஆம் ஆண்டுக்கான புதுமைப்பித்தமன் நினைவு விருதானது ஆய்வறிஞர் பொ.வேல்சாமி, எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் விளக்கு இலக்கிய அமைப்பானது இவ்விருதினை வழங்குகிறது.

இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை :

ஆசிய விளையாட்டு ஹாக்கி:

இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜப்பான் அணியை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய அணியானது 4வது முறையாக தங்கம் வென்றுள்ளது.

2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதியாகியுள்ளது.

ஜப்பான் 2வது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட்:

8.2 ஓவரில் ஆப்கானிஸ்தான் 112/5 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. பின்னர் மழை நிற்காத காரணத்தினால் போட்டி ரத்தானது. புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த இந்திய அணி தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டிகளின் வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிய போட்டிகளில் பங்கு பெற்று அனைத்திலும் தங்கம் வென்ற வீராங்கனை:

19 வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தான் பங்கு பெற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் தங்க பதக்கங்களை  வென்ற வீராங்கனை ஜோதி சுரேகா ஆவார் . வில்வித்தை வீராங்கனை ஆன இவர் 19 வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தனிநபர்,கலப்பு இரட்டையர் ,பெண்கள் குழு  என மூன்று பிரிவுகளிலும் பங்கு பெற்று மூன்றிலும் தங்க பதக்கங்களை வென்றார் .இதன் மூலம் ஆசிய போட்டிகளில் பங்கு பெற்று அனைத்திலும் தங்கம் வென்ற வீராங்கனை என சாதனை படைத்துள்ளார் ..

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 7

7th October உலக பருத்தி தினம் : உலக பருத்தி தினம், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7 அன்று அனுசரிக்கப்படுகிறது , குறிப்பாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலைகளை உருவாக்குவதிலும் பொருளாதாரங்களை ஆதரிப்பதிலும் பருத்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது..உலக பருத்தி தினத்தின் முன்முயற்சி 2019 இல் பிறந்தது, துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள நான்கு பருத்தி உற்பத்தியாளர்கள் – பருத்தி நான்கு என்று அழைக்கப்படும் பெனின், புர்கினா பாசோ, சாட் மற்றும் மாலி – உலக வர்த்தக அமைப்பிற்கு அக்டோபர் 7 அன்று உலக பருத்தி தினக் கொண்டாட்டத்தை முன்மொழிந்தனர்.கருப்பொருள், ‘பண்ணை முதல் ஃபேஷன் வரை அனைவருக்கும் பருத்தியை நியாயமானதாகவும் நிலையானதாகவும் மாற்றுதல்’( “Making Cotton fair and sustainable for all; from farm to fashion”  )

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :


SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023

Post a Comment

0Comments

Post a Comment (0)