TODAY CURRENT AFFAIRS IN TAMIL 09.10.2023
ஐந்து மாநில தேர்தல் தேதி
ஐந்து மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது.
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி, ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதி, தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி என ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தல் நடைமுறை டிசம்பர் 5ஆம் தேதி நிறைவுபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
தேசிய நுரையீரல் நோய்கள் மாநாடு:
தில்லியில் தேசிய நுரையீரல் நோய்கள் மாநாடு 4 நாள்கள் நடைபெற்றது. காற்று மாசுபாடு, அதனால் ஏற்படும் நோய்கள், நுரையீரல் சிகிச்சை துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு நடைபெற்றது.
மருத்துவா்கள் தரப்பில் பரிந்துரை:அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டுக்கு எதிராக நமது அரசுகள் போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. காற்று மாசுபாட்டை குறைக்க ஒரு குடும்பம் எத்தனை வாகனங்கள் வைத்திருக்க வேண்டும், ஒரே நேரத்தில் சாலைகளில் எத்தனை வாகனங்கள் செல்ல வேண்டும் என்ற கொள்கையை அரசுகள் வகுக்க வேண்டும். ஒவ்வொருவரும் சொந்த காரில் செல்வதைவிடுத்து, ஒரே காரில் பலா் செல்லும் வகையில் காா் பயணங்கள் பகிா்ந்துகொள்ளப்படுவதை ஊக்குவிக்க வேண்டும் என மருத்துவா்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி வரையாடு திட்டம் (Nilgiri Draft Project):
அக்டோபர் 12-ல் நீலகிரி வரையாடு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
அக்டோபர் 7 நீலகிரி வரையாடு தினம்: தமிழகத்தில் முதல் நீலகிரி வரையாடு தினம் அக்டோபர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.ERC டேவிடரின் நினைவாக அக்டோபர் 7 ஆம் தேதி ‘நீலகிரி வரையாடு தினமாக’ கொண்டாடப்படும். 1975 இல் நீலகிரி வரையாடு பற்றிய ஆய்வுகளில்முன்னோடியாக இருந்தவர். நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.இது நீலகிரி மலைகள் மற்றும் கேரள மாநிலங்களில் இருக்கும் மேற்கு மற்றும் கிழக்கு பள்ளத்தாக்கின் தென் பகுதியில் வாழ்கிறது .இவ்விலங்கை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் “அருகியநிலை” உயிரினமாக வகைப்படுத்தியுள்ளது.
இத்தினமானது தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு பற்றிய ஆய்வினை 1975-ல் முன்னெடுத்த ஆய்வாளரான டாக்டர் ஈ.ஆர்.சி. டேவிதாரின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 7-ல் அனுசரிக்கப்படுகிறது.
28.12.2022-ல் ரூ.25.14 கோடி செலவில் நீலகிரி வரையாட்டினை பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் “நீலகிரி வரையாடு திட்டம்” ஏற்படுத்தப்பட்டு 2027-வரை செயல்படுத்தப்படுகிறது.
தமிழக பேரவைக் கூட்டத்தை பார்வையிடும் ஆஸி. நாடாளுமன்றக் குழு:
நிகழாண்டின் 2-ஆம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் காலை 10 மணிக்கு கூடியுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தலைவர் மில்டன் டிக் தலைமையில் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூதரக அதிகாரிகள் உள்பட 11 பேர் தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகின்றனர்.
காவிரி நீர் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்:
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிற்கு மத்திய அரசு உத்தரவிடக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் முதல் சூரியசக்தி நகரமாகும் அயோத்தி:
சூரிய ஆற்றல் கொள்கையின்படி, புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மூலம் 10 சதவீத மின் தேவையைப் பூா்த்தி செய்யும் நகரம், சூரிய சக்தி நகரமாக கருதப்படும். உத்தர பிரதேசத்தின் லட்சியத் திட்டமான ‘சூரிய சக்தி ஆற்றல் கொள்கை 2022’-யில் நொய்டா மற்றும் 16 நகராட்சிகளை சூரிய சக்தி நகரங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, உலகப் புகழ்பெற்ற ராமா் கோயில் அமைந்துள்ள அயோத்தியை மாநிலத்தின் முதல் சூரிய சக்தி நகரமாக மாற்றுவதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
சூரிய சக்தி நகரத் திட்டத்தில் முக்கிய வசதியாக ‘என்டிபிசி க்ரீன்’ நிறுவனத்தால் சரயூ நதிக்கரையில் நிறுவப்பட உள்ள 40 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இந்தியாவின் முதல் சூரியசக்தி நகரம் : மத்தியப் பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னமான சாஞ்சி இந்தியாவின் முதல் சூரிய நகரமாக மாறியுள்ளது.
ரூ.24,850 கோடி மதிப்பிலான கைப்பேசிகள் இந்தியாவில் இருந்து ஏற்றமதி:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் 5 மாதத்தில் சுமாா் ரூ.24,850 கோடி மதிப்பிலான கைப்பேசிகள் இந்தியாவில் இருந்து ஏற்றமதி செய்யப்பட்டிருப்பதாக இந்திய செல்லுலாா் மற்றும் மின்னணுவியல் சங்கம் (ஐசிஈஏ) தெரிவித்தது. இதுகுறித்து ஐசிஈஏ தெரிவித்ததாவது: நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதத்தில், இந்தியாவில் இருந்து சுமாா் ரூ. 24,850 கோடி மதிப்பிலான கைப்பேசிகள் ஏற்றமதி செய்யப்பட்டிருக்கின்றன.ஆப்பிள் நிறுவனத்தைப் பொருத்தவரை ரூ.23,000 கோடிக்கும் மேலாக கைப்பேசி ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. ஆப்பிள் நிறுவன கைப்பேசிகளின் மொத்த ஏற்றுமதியில் இந்த எண்ணிக்கை பாதிக்கும் மேலானது.
2025-26-ஆம் நிதியாண்டுக்குள் நாட்டில் மின்னணு பொருள்களின் உற்பத்தி ரூ.25 லட்சம் கோடியை எட்டுவதற்கு அரசாங்கம் இலக்கு நிா்ணயித்துள்ளது. இதில் சுமாா் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி ஏற்றுமதியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோல், ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதிக்கு கைப்பேசி பங்களிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இஸ்ரேஸ்லுக்கும், ஹமாஸ் அமைப்பிற்கு
பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ் இஸ்ரேல் நாட்டின் மீது ஆபரேஷன் அல் – அக்ஸாஸ்டார்ம் என பெயரில் தாக்குதல்தொடுத்துள்ளது.
இதற்கு இஸ்ரேல் நாடானது அயர்ன் ஸ்வாரட்ஸ் என்ற பெயரில் எதிர் தாங்ககுதலை நடத்துகிறது.
இஸ்ரேஸ்லுக்கும், ஹமாஸ் அமைப்பிற்கு 2005-ல் இருந்து இப்பிரச்சனையானது தொடர்கிறது.
'ஹலோ யுபிஐ' :
சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப யுபிஐ பணப்பரிமாற்றத்தில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மொபைல் போன்களின் மூலமாக செய்யும் பணப்பரிமாற்றத்திற்கு ஐவிஆர் தொழில்நுட்பத்தில் 'யுபிஐ123' என்ற வசதியை வங்கி ஏற்கெனவே அறிமுகம் செய்தது. இந்நிலையில் அடுத்த கண்டுபிடிப்பாக 'ஹலோ யுபிஐ' என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக உள்ளூர் மொழிகளில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். ஸ்மார்ட்போன்களில் குரல்வழியாகவும் இதனை மேற்கொள்ள முடியும். இது மூத்த குடிமக்களுக்கும் கண்பார்வையற்றவர்களுக்கும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
49வது இந்திய போலீஸ் அறிவியல் :
உத்திரகாண்ட் மாநிலத்தின் ரேடாடூனில் நடைபெற்ற 49வது இந்திய போலீஸ் அறிவியல் மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
ஷாருக்கான் ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு :
ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான் படமும் ஆயிரம் கோடி வசூலித்தது. ஜவான், பதான் என அடுத்தடுத்து இரண்டு பெரிய வெற்றி கொடுத்த நடிகர் ஷாருக்கானுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பது குறித்து உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவருக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மகாராஷ்டிரத்தின் சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 துப்பாக்கி ஏந்திய போலீசார் அவருக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்க உள்ளனர். மேலும் ஷாருக்கானின் வீட்டிற்கும் 4 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்படுள்ளது.
அமைதியான நாடுகள் பட்டியல்:
உலக அமைதியான நாடுகள் பட்டியில் முதலிடத்தை ஐஸ்லாந்து பிடித்துள்ளது.
அடுத்தடுத்த இடங்கள் முறையே டென்மார்க், நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
இப்பட்டியலை சர்வதேச சிந்தனை குழுவான பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனத்தால் வெளியிட்டுள்ளது.
இப்பட்டியிலில் 2022-ல் 135வது இடத்தை இந்தியா பிடித்துள்ள 2023-ல் 126வது இடத்தை பிடித்துள்ளது.
ஆதித்யா எல்-1 பயணப் பாதை வெற்றிகரமாக மாற்றியமைப்பு:
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ, அதை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பா் 2-ஆம் விண்ணில் செலுத்தியது. அதன் பின்னா் அந்த விண்கலம் புவி சுற்றுப்பாதையில் இருந்து செப்டம்பா் 19-ஆம் தேதி விடுவிக்கப்பட்டு, சூரியனை நோக்கி பயணிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டன. விண்ணில் செலுத்தப்பட்ட 28 நாள்களில் 9.2 லட்சம் கி.மீ. தொலைவு பயணித்து, முழுமையாக புவியின் ஈா்ப்பு விசை மண்டலத்தை கடந்து எல்-1 புள்ளியை நோக்கி விண்கலம் பயணித்து வருகிறது. இந்த நிலையில், ஆதித்யா விண்கலத்தின் பயணப் பாதையில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் கடந்த 37 நாள்களாக எல்-1 புள்ளியை நோக்கி சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அவற்றின் இயக்க செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. இதனிடையே திட்டமிட்ட எல்-1 புள்ளியை சரியாக சென்றடைய ஏதுவாக அக்.6-ஆம் தேதி விண்கலத்தில் உள்ள இயந்திரங்கள் 16 விநாடிகள் இயக்கப்பட்டு அதன் பயணப் பாதையில் சிறிய மாற்றங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீனாவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ்:
சீனாவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் இறுதி போட்டியில் போலந்து நாட்டின் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் ரஷ்யா வீராங்கனை லுட்மிலா சாம் சனோவோ-வை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
கொள்ளேரு திட்டம்:2.0
கொல்லேரு ஏரி ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும். 1999 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச அரசு 193 வகையான பறவைகளை கொண்டிருப்பதால், இது ஒரு பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இது பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்கிறது. ஆனால் நீர் மாசுபாட்டின் காரணமாக ஏரியின் தரம் சீர்குலைந்தது. பல சுகாதார பிரச்சினைகளை உள்ளூர் மக்கள் எதிர்கொண்டனர்.இறால் மற்றும் மீன்களும் பாதிக்கப்பட்டன. நோய்க்கிருமிகளால் பரவும் நோய்களும் அதிகரித்தன.
எனவே, ஏரியை பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சகம், ‘ கொள்ளேரு திட்டம் ‘ அமைத்தது.இந்த திட்டத்தின் நோக்கம் ஏரியை மாசு இல்லாத சூழலுக்கு மீண்டும் கொண்டு வருவதும் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதும் ஆகும். தற்போது மீண்டும் கொள்ளேரு திட்டம் 2.0 கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது .
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2023 :
நடப்பு ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் நோபல் பரிசு, அமெரிக்க பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. "தொழிலாளர் சந்தையில் (labour market) பெண்களின் பங்குகள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக" கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி – உலக சாதனை:
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரரான ஜேக் ஃப்ரேசன் மெக் கர்க் 29பந்துகளில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் 31 பந்துகளில் அதிவேக சதம் அடித்த டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 9
9th October உலக தபால் அலுவலக தினம்-கருப்பொருள்: “Together for Trust: Collaborating for a safe and connected futrue”.
9th October உலக பிராந்திய இராணுவ தினம் (World Territorial Army Day:
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: