TODAY CURRENT AFFAIRS IN TAMIL 13.10.2023

TNPSC PAYILAGAM
By -
0



 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 13.10.2023

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 1,666 புதிய பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் :

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 1,666 புதிய பேருந்துகளை வாங்க ஹிந்துஜா குழுமத்தின் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இது அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து பெறப்பட்ட மிகப்பெரிய பிஎஸ்-6 ஆர்டராகும். அதே வேளையில் அசோக் லேலண்ட் நிறுவனமானது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் மிகவும் விரும்பப்படும் பிராண்டாக 18,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.371.16 கோடி மதிப்பீட்டில் 1666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதா:

மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதன் மூலம் ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த புதிய திட்டங்களுக்கும் இப்பகுதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. விவசாயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020ன் கீழ், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மேலும் புதுக்கோட்டை மற்றும் கடலூரின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவித்தது

அமெரிக்காவில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களின் பணிக்காலம் இனி 5 ஆண்டுகள்:

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையான கிரீன் கார்டு பெற பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர். இதில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு முன்னதாக, வேலைவாய்ப்பு அங்கீகாரம் வழங்கப்படும். அதிகபட்ச காலமான இரண்டு ஆண்டுகளுக்கு இதற்கு விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டு காலம் முடிந்தபின்னர் மீண்டும் நீட்டிப்பு கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில், இந்த வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களுக்கான(Employment Authorization Documents) செல்லுபடி காலத்தை தற்போது 5 ஆண்டுகளாக உயர்த்தி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் ஹெச்-1பி, ஹெச்-1சி, ஹெச்-2ஏ, ஹெச் -2பி, ஹெச்-3 விசா வைத்திருப்பவர்களின் கணவன்/மனைவிகளுக்கும் விருப்ப நடைமுறை பயிற்சி (OPT) திட்டத்தின் கீழ் உள்ள சர்வதேச மாணவர்களுக்கும் இந்த நீட்டிப்பு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ல் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் தரவு:

2022ல் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.68 லட்சத்தைத் தாண்டியுள்ளன. நாளொன்றுக்கு சுமார் 462 பேர் என ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒருவர் சாலை விபத்தில் இறப்பதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. 

கடந்த 2021-ஆண்டோடு ஒப்பிடும்போது 2022-ல் இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 9 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-ல் தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டில் சுமார் 11.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

2022-ம் ஆண்டில் விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 4.43 லட்சமாகப் பதிவாகியுள்ளது. இது 2021-ல் 3.84 லட்சமாகப் பதிவானது. கிட்டத்தட்ட 15 சதவீதம் அதிகரித்துள்ளது.-சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தகவல்.

கோல்டுடிக்கர் ட்ரோஜன் செயலி:

தற்போது கோல்டுடிக்கர் (GoldDigger) என்ற வைரஸ் செயலியால் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைய மோசடிகள் நடந்துள்ளது வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளது. குரூப் - ஐபி எனப்படும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சிக் குழு, இத்தகைய மோசடி நடப்பதைக் கண்டறிந்துள்ளது. இது இந்திய பயனர்களிடமும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த வைரஸ் மூலம் இணைய மோசடி அல்லது பயனர் வங்கிக்கணக்கில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. செல்போனில் உள்ள வங்கிக்கணக்கு செயலிகளிலிருந்து தரவுகளை எடுப்பதன்மூலம் இது நடத்தப்படுகிறது. 

கோல்டுடிக்கர் ட்ரோஜன் செயலி 2023 ஜூன் முதல் கோல்டுடிக்கர் செயல்பாட்டில் உள்ளதாக இணைய பாதுகாப்புக் குழு தெரிவிக்கிறது. இது செல்போனில் உள்ள சாதாரண ஆன்ட்ராய்டு செயலிகளைப் போலவே இருக்கும். இதன் முதன்மை நோக்கம் பயனர்களின் வங்கிக்கணக்கு தரவுகளை எடுப்பதும், அதன்மூலம் பணத்தை கொள்ளையடிப்பதுதான் என இணைய பாதுகாப்புக் குழு எச்சரிக்கிறது.

தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு:

மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தமிழகம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கர்நாடகா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அதிகாரிகளிடம் ஆணையத்தின் தலைவர் கேட்டறிந்தார். 

இதனை தொடர்ந்து, வருகிற 16-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு இந்த உத்தரவினை பிறப்பித்து உள்ளது.

உத்தரப்பிரதேச அரசு கங்கை டால்பினை மாநில நீர்வாழ் விலங்காக அறிவித்து:

உத்தரப்பிரதேச அரசு கங்கை டால்பினை மாநில நீர்வாழ் விலங்காக அறிவித்து.வனவிலங்கு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மற்றும் குளங்களின் தூய்மையைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டை நிரூபிப்பதற்காக ‘மேரே கங்கை மேரே டால்பின் 2023’ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.கங்கைடால்பின் தேசிய நீர்வாழ் விலங்காக 2009 ஆம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது .

பன்னாட்டு கணினி தமிழ் மாநாடு :

2024 ஆம் ஆண்டு பன்னாட்டு கணினி தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது .2024 பிப்ரவரி மாதத்தில் சென்னையில் உள்ள பன்னாட்டு கணினி தமிழ் மாநாட்டை தமிழக அரசு நடத்தவுள்ளது.நவீன கணினியின் செயலாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் தமிழைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

அக்சரா லக்சம் திட்டம் :

யுனெஸ்கோவின் விதிமுறைகளின்படி கேரளா முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக 1991 ஏப்ரல் 18 அன்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 18 லட்சம் பேர் கல்வியறிவில்லாதவர்களாக இருந்தனர்.எழுத்தறிவு 100 சதவிதமாக்க “அக்சரா லக்சம் ” என்னும் திட்டத்தை கேரளா மாநிலம் கொண்டுவந்தது .இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாளில் கொண்டுவந்தது .பழங்குடியினர், மீனவ மக்கள் மற்றும் குடிசைவாசிகள் போன்ற மக்களிடையே எழுத்தறிவின்மையை ஒழிக்க வேண்டும் மற்றும் எழுத்தறிவில் 100 சதவிதம் பெற்று நாட்டினிலே ஏழுத்தறிவு இல்லாத மாநிலமாக உருவெடுப்பெடுப்பதை நோக்கம் ஆகும் .

2022 சரஸ்வதி சம்மன் விருது:

தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு “சூர்ய வம்சம்” என்ற நினைவுப் புத்தகத்திற்காக 2022 சரஸ்வதி சம்மன் விருது வழங்கப்பட்டது. சரஸ்வதி சம்மான் விருது 15 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகை,பாராட்டுப் பத்திரம் மற்றும் தகடு கொண்டுள்ளது . கே.கே.பிர்லா அறக்கட்டளையால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. சிவசங்கிரி 36 நாவல்கள், 48 குறு நாவல்கள், 150 சிறுகதைகள், 5 பயணக் கட்டுரைகள், 7 கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் 3 சுயசரிதைகள் எழுதியுள்ளார். சூர்ய வம்சம் என்பது அவரது சுயசரிதை புத்தகம் அகும் .

இந்திர தனுஷ் திட்டம் 5.0 :

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று இந்திர தனுஷ் திட்டம் தொடங்கப்பட்டது. நோய்த்தடுப்புப் பயிற்சியில் இருந்து விலகிய அனைத்து குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக, குறைந்த நோய்த்தடுப்பு பாதுகாப்பு உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் இது ஒரு பிரச்சாரமாகும். இந்திர தனுஷ் திட்டம் 5.0 தேசிய நோய்த்தடுப்பு அட்டவணையின் (NIS) படி அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டத்தின் (UIP) கீழ் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் நோய்த்தடுப்பு பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்குள் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி செலுத்துவதை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்களின் உச்சிமாநாடு :

டெல்லியில் உள்ள யஷோபூமியில் ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்களின் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப, 9 வது பி 20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்” என்பதாகும். இந்த நிகழ்வில் ஜி20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்த பி20 உச்சிமாநாட்டின் கருப்பொருள் அமர்வுகள், பொது டிஜிட்டல் தளங்கள் மூலம் மக்களின் வாழ்க்கையில் மாற்றம்; பெண்கள் தலைமையிலான வளர்ச்சி; நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துதல்; நிலையான எரிசக்தி மாற்றம் ஆகிய நான்கு தலைப்புகளில் கவனம் செலுத்தும்.

சக்ரவத்-2023:

2023 ஆம் ஆண்டுக்கான சக்ரவத்-2023 என அழைக்கப்படும் வருடாந்திர மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரணப் பயிற்சியின் (AJHE) இந்திய கடற்படையால் 09 முதல் 11 அக்டோபர் 23 வரை கோவாவில் நடத்தப்பட்டது. சக்ரவத் பயிற்சியில் இந்தியாவின் ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள், பேரிடர் மீட்பு அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்), கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பங்கு பெற்றன . இப்பயிற்சி ஆனது 2022 ஆம் ஆண்டு “சமன்வே 2022” என்ற பெயரில் இந்திய விமான படையால் ஆக்ராவில் நடத்தப்பட்டது. இது நிறுவனம் சார்ந்த பேரிடர் மேலாண்மை கட்ட்டைமப்புகளின் திறன் மற்றும் அவசர கால நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடு செய்வதை நோக்கமாகக் கொண்டது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்' புகழ் விவேக் அக்னிஹோத்ரி தனது சமீபத்திய புத்தகத்தை லக்னோவில் வெளியிட்டார்:

விவேக் அக்னிஹோத்ரி தனது புத்தகமான “ The Book of My Life my dance with buddha for success என்ற புத்தகத்தை லக்னோவில் வெளியிட்டார்.

உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பசி குறியீட்டு பட்டியல் 2023-இந்தியா நிராகரித்துள்ளது

உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பசி குறியீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 125 நாடுகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 111-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது. பாகிஸ்தான் 102வது இடத்திலும், வங்காளதேசம் 81வது இடத்திலும், நேபாளம் 69வது இடத்திலும், இலங்கை 60வது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 107வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் பட்டியலில் பெலாரஸ், போஸ்னியா-ஹெர்சகோவினா, சிலி, சீனா, குரோஷியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. சாட், நைஜர், லெசோதோ, காங்கோ, ஏமன், மடகாஸ்கர் மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகள் கடைசியில் உள்ளன. 

இந்த பசி குறியீட்டு பட்டியல், தவறான மதிப்பீடு என்று இந்தியா தெரிவித்துள்ளது. பட்டியலையும் நிராகரித்துள்ளது.

  • உலக அமைதியான நாடுகள் பட்டியல் 2023-ல் 126வது இடத்தை பிடித்துள்ளது
  • உலகளவில் மஞ்சள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
  • G20 நாடுகளில் மிகக்குறைந்த GDP தனிநபர் வருமானம் பட்டியலில் இந்தியா 20வது இடத்தை பிடித்துள்ளது.
  • 2023-ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் இந்தியா 161வது இடத்தை பெற்றுள்ளது.
  • 2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 13

13th October பேரிடர் குறைப்புக்கான தினம் : பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினம், ஆண்டுதோறும் அக்டோபர் 13 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது, இது பேரழிவுகள் மற்றும் சமத்துவமின்மையின் முக்கியமான பிரச்சினைகளுக்கு உலகளாவிய கவனத்தைக் கொண்டுவருகிறது. இந்த நாள் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும், சமூகங்களுக்கு கல்வி கற்பதற்கும், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளை எதிர்கொள்வதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது.  பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினம் 2023 ஆம் ஆண்டிற்கான ,ஐ.நா.வின் சர்வதேச தினத்தின் கருப்பொருள் “ஒரு நெகிழ்வான எதிர்காலத்திற்கான சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவது” என்பதாகும்.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :


SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023

Post a Comment

0Comments

Post a Comment (0)