TODAY CURRENT AFFAIRS IN TAMIL 20.10.2023

TNPSC PAYILAGAM
By -
0



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 20.10.2023

பிரீமியம் பேருந்து:

தில்லி மேல்தட்டு மக்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் வகையில் பிரீமியம் பேருந்து சேவையை அந்த மாநில அரசு தொடங்கவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் மாசு அளவைக் குறைக்கவும், தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்தில் பிரீமியம் பேருந்து சேவைக்கான திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரீமியம் பேருந்து திட்டத்தின் மூலம் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பினரைச் சேர்ந்தவர்களும் பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் உரிமம் பெறுபவர்கள் ஒன்பது இருக்கைகளுக்கு குறையாத குளிரூட்டப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து கட்டணம் டிஜிட்டல் முறையிலும், அமர்ந்து பயணிக்கும் வகையிலும் வசதி செய்ய வேண்டும். ஜனவரி 1,2025-ஆம் ஆண்டிற்குப் பிறகு வாங்கப்படும் அனைத்து பேருந்துகளும் மின்சாரத்தில் இயக்கப்படும்.

காவல் கரங்கள் :

21.04.2021-ஆம் ஆண்டு சென்னை காவல்துறையால் உருவாக்கப்பட்ட காவல் கரங்கள் திட்டத்தினை (Police Arms Scheme) தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு காவல் கரங்கள் திட்டத்திற்கு ஸ்காச் விருதானது வழங்கப்பட்டள்ளது.

இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடி :

பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக எழுப்பப்பட்டுள்ள இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடியினை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஏற்றிவைத்தார். 

அம்ரித்ஸர் மாவட்டத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லைப் பகுதியில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் 418 அடி உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

பாம்புக்கடி – உயிரிழப்பவர்கள் பட்டியல்

பாம்புக்கடியால் உலகளவில் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியாவில் ஆண்டுக்கு 58 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.

தமிழ் நாடானாது இந்தியா அளவில் பாம்புக்கடியால் உயிரிழப்பவர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளது.

உலகில் 350 பாம்பு இனங்களில் 60 பாம்பு இனங்கள் மட்டுமே விஷம் கொண்டவையாக உள்ளன.

இந்தியாவின் முதல் அதிவேக (RRTS-Regional Rapid Transit System) ரயில் :

மாநில நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தை நவீனமயப்படுத்த இந்த அதிவிரைவு ரயிலுக்கு 'நமோ பாரத்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஷாஹிபாபாத் - துஹாய் இடையே 17 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் ஷாஹிபாபாத், காஜியாபாத், குல்தாா், துஹாய், துஹாய் டிபோட் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். பயணிகளின் வருகைக்கு ஏற்ப 5 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக இந்த ரயில்கள் 180 கி.மீ. வேகத்தில் செல்லும். முதல்கட்டமாக ரூ.30,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பானிபட் வரையில் நீட்டிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பங்காரு அடிகளார்

பெண்கள் கருவறைக்கு சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சியை செயல்படுத்திய மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்.

2013-ல் பத்ம ஸ்ரீ விருதினை பெற்றுள்ள இவர் ஆதிபராசக்தி கல்வி, மருத்து பண்பாட்டு அறநிலை அறக்கட்டளை நிறுவனராக செயலாற்றி வந்துள்ளார்.

பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்கள் (Pramod Mahajan Rural Skill Development Centre) :

இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக மகாராஷ்டிராவில் 34 ஊரக மாவட்டங்களில் 511 இடங்களில் பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்கள் (Pramod Mahajan Rural Skill Development Centre) திறக்கப்பட்டுள்ளது.

பேரிடர் ஒத்திகை: செல்லிடபேசிகளுக்கு வரும் குறுந்தகவல் :

தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், பேரிடா் கால தேசிய அளவிலான அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபாா்க்கும் நோக்கத்துடன் தொலைத்தொடா்பு துறை மூலம் தொலைபேசி ஒளிப்பரப்பு எச்சரிக்கை அமைப்பு மூலம் பேரிடா் கால அவசர தொடா்பு பணிகளை மேம்படுத்தும் வகையில் மாதிரி சோதனையாக அனைத்து செல்லிடப்பேசிகளுக்கும் அக். 20-ஆம் தேதி பரிசோதனை அழைப்பு விடுக்கப்படுகிறது.

இதன்மூலம் பெருவெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடா் சமயங்களில் பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை குறித்து உரிய சமயத்தில் தொலைபேசி வழியாக எச்சரிக்கை விடுக்க இயலும். அக்டோபா் 20-ஆம் தேதியன்று மேற்கொள்ள உள்ள எச்சரிக்கை அழைப்பு பரிசோதனைக்காக மட்டுமே தேசிய பேரிடா் மேலண்மை அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பரிசோதனை அழைப்பு தொடா்பாக, பொதுமக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் எனவும், அதற்கு எந்தவித எதிா்வினையாற்றும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது

இந்தியாவின் ‘யுபிஐ’ சிறந்து:

சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் செயல்படுத்தப்பட்டு எல்லை தாண்டிய பணப் பரிவா்த்தனையில் இந்தியாவின் ‘யுபிஐ’ சிறந்து விளங்குவதாக அமெரிக்க நிதி அமைச்சக உதவி செயலா் ஜெய் ஷாம்பாக் பாராட்டு தெரிவித்தாா்

ஷகாரொவ் பரிசு 2023

சோவியத் ரஷ்யாவின் மனிதப் போரளாயியான ஆண்ட்ரே ஷரோகாவின் நினைவாக வழங்கப்படும் ஷகாரொவ் பரிசு-2023 ஈரானின் மாஷா அமீனி நிகராகுவாவின் வில்மா நெட்டே எஸ்கார்சியா, ரொனால்டோ இவாரெஸ் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

 988 முதல் இவ்விருதானது வழங்கப்பட்டு வருகிறது.

ரயில் மோதல்களில் இருந்து காட்டு யானைகளை பாதுகாக்கும்- (AI) :

ரயில் மோதல்களில் இருந்து காட்டு யானைகளை பாதுகாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆரம்ப எச்சரிக்கை முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதுமையான திட்டம் எட்டிமடை(கோயம்புத்தூர்) – வாளையார் (பாலக்காட்) ரயில் பாதையில் செயல்படுத்தப்படும்.

உலக தொலைதூர வேலை குறியீட்டில் (GRWI) :

உலக தொலைதூர வேலை குறியீட்டில் (GRWI) 108 நாடுகளில் இந்தியா 64 வது இடத்தில் உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15 இடங்கள் பின்தங்கியுள்ளதாகவும் தொலைதூர வேலைக்கான நாட்டின் தயார்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக தொலைதூர வேலை குறியீட்டை சைபர் பாதுகாப்பு நிறுவனமான NordLayer வெளியிட்டுள்ளது. டென்மார்க், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி முறையே 1வது, 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன. 

அவை பின்வரும் வரைமுறை படி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

  • இணைய பாதுகாப்பு 
  • பொருளாதார பாதுகாப்பு 
  • டிஜிட்டல் மற்றும் இயற்பியல் உள்கட்டமைப்பு 
  • சமூகப் பாதுகாப்பு

தங்க மயில் விருது :

கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (REC) இடர் மேலாண்மையில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக மதிப்புமிக்க தங்க மயில் விருதைப் பெற்றுள்ளது. 1991 ஆம் ஆண்டில் இந்திய இயக்குநர்கள் நிறுவனத்தால் (IOD) நிறுவப்பட்ட தங்க மயில்விருதுகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் சிறப்பிற்கான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரமாக உருவெடுத்துள்ளன. கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் ஜூலை 1969 இல்அமைக்கப்பட்டது .இந்த நிறுவனம் மகாரத்னாஅந்தஸதை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

அப்னா சந்திரயான் :

சந்திரயான்-3 தொடர்பான கற்றலுக்கான அப்னா சந்திரயான் இணையதளத்தை மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளம் பள்ளி மாணவர்களுக்கு சந்திரயான்-3 திட்டம் தொடர்பான வினாடி வினாக்கள் மற்றும் புதிர்கள் போன்ற செயல்பாட்டு அடிப்படையிலான தகவல்களை அவர்களுக்கு வழங்குகிறது. இந்த இணையதளத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) உருவாக்கியுள்ளது.

The Reverse Swing: Colonialism to Cooperation’ :

அசோக் டாண்டன் எழுதிய ‘The Reverse Swing: Colonialism to Cooperation’ என்ற புத்தகத்தை இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் வெளியிட்டார். பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டு அடிமைத்தனத்தின் வலிமிகுந்த நினைவுகளை விட்டுவிட்டு புதிய இந்தியாவின் பெருமைக்கான புத்தகமாக எழுதப்பட்டுள்ளது.சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய-இங்கிலாந்து உறவுகளில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களை நூலாசிரியர் எழுதியுள்ளார்.

COP28 -  ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு 2023:

COP28 என்று அழைக்கப்படும் 2023 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12, 2023 வரை துபாயில் நடைபெற உள்ளது .1992 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் முதல் காலநிலை உடன்படிக்கைக்குப் பின்னர் ஆண்டுதோறும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இது உலகளாவிய வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தாக்கங்களுக்கு ஏற்ப கொள்கைகளை உருவாக்க அரசாங்கங்களால் நடத்தப்படுகிறது .

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து 4-வது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி:

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த விராட் கோலி இலங்கையின் ஜெயவர்த்தனேவை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறினார். 

  1. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் சச்சின் டெண்டுல்கர் - 34357 ரன்கள் 
  2. குமார் சங்ககாரா - 28016 ரன்கள் 
  3. ரிக்கி பாண்டிங் - 27483 ரன்கள் 
  4. விராட் கோலி - 26026 ரன்கள் 
  5. மஹேலா ஜெயவர்த்தனே - 25957 ரன்கள்


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 20

20th October உலக புள்ளியியல் தினம் : ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20 அன்று அனுசரிக்கப்படும் உலக புள்ளியியல் தினம், மேம்பட்ட, நம்பகமான மற்றும் உயர்தர புள்ளிவிவரங்களின் முக்கிய பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய அனுசரிப்பாகும். உலக புள்ளியியல் தினம் 2010ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஐக்கிய நாடுகள் புள்ளியியல் ஆணையத்தின் 41 வது அமர்வில் முன்மொழியப்பட்டது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியை முதல் உலக புள்ளியியல் தினமாகக் ஆணையம் பரிந்துரைத்தது.

20th October உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் (World Osteoporosis Day) :கருப்பொருள்: “Build Better Bone”

20th October தேசிய ஒற்றுமை தினம் (National Solidarity Day) :தேசிய ஒற்றுமை தினம் 1962 ஆம் ஆண்டு சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நடந்த போரை நினைவுபடுத்துகிறது.இந்தப் போரில் இந்தியாவை சீனா தோற்கடித்தது.இந்த போரில் நாட்டின் பல வீரர்களும் வீரமரணம் அடைந்தனர், 1966ல், இந்திரா காந்தி பிரதமராக இருந்தார் அவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. போரில் போரிட்ட வீரர்கள் மற்றும் கடமையின் போது உயிரை தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களை கவுரவிக்கும் வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி ‘தேசிய ஒற்றுமை தினம்’ என்று பிரதமர் இந்திரா காந்தியை உள்ளடக்கிய இந்தக் குழு அறிவித்தது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023

Post a Comment

0Comments

Post a Comment (0)