TODAY CURRENT AFFAIRS IN TAMIL 22.10.2023

TNPSC PAYILAGAM
By -
0

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 22.10.2023

58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு:

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என்று அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியர்களை நேரடி நிர்ணயம் செய்வதற்கான உச்ச வயது வரம்பானது தற்பொழுது மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

பொதுப்பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர 53 எனவும், இதர பிரிவினர் 58 வயதாகவும் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் வயதுவரம்பு இருந்தது

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள் ஷுப்மன் கில் - 38 போட்டிகளில் ஹாசிம் ஆம்லா - 40 போட்டிகளில் ஜாகிர் அப்பாஸ் - 45 போட்டிகளில் கெவின் பீட்டர்சன் - 45 போட்டிகளில் பாபர் அசாம் - 45 போட்டிகளில் ராஸி வாண்டர் துசென் - 45 போட்டிகளில்

உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்:

உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி படைத்துள்ளார்.

உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவர் இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் இதுவரை 2 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கபில் தேவ், வெங்கடேஷ் பிரசாத், ராபின் சிங், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக தலா ஒரு முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

உலகக் கோப்பையில் அதிகமுறை 4 விக்கெட்டுகள் 

  • மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 6 முறை 
  • இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா) - 5 முறை 
  • முகமது ஷமி (இந்தியா) - 5 முறை 
  • (முகமது ஷமியைத் தவிர மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் உலகக் கோப்பையில் இரண்டு முறைக்கு மேல் 4 விக்கெட்டுகளை எடுத்தது கிடையாது) 

உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர்கள் 

  • ஜாகிர் கான் - 44 விக்கெட்டுகள் 
  • ஜவகல் ஸ்ரீநாத் - 44 விக்கெட்டுகள் 
  • முகமது ஷமி - 36 விக்கெட்டுகள் 
  • அனில் கும்ப்ளே - 31 விக்கெட்டுகள் 
  • ஜஸ்பிரித் பும்ரா - 29 விக்கெட்டுகள் 
  • கபில் தேவ் - 28 விக்கெட்டுகள்

தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள்:

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு காவல்துறையில் 1973 ஆம் ஆண்டு பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் அப்போது 1 காவல் உதவி ஆய்வாளர், 1 தலைமை காவலர், 20 காவலர்கள் என 22 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். தற்போது, 35,329 பெண் காவல் அதிகாரிகள், காவலர்கள் பணியில் உள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி கடந்த ஆண்டு ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு வழங்கப்படும் உயரிய கௌரவமான குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் பொன்விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், பெண் காவலர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்கள் அனைவருக்கும் சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)