TODAY CURRENT AFFAIRS IN TAMIL 27.10.2023

TNPSC PAYILAGAM
By -
0



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 27.10.2023:


தமிழகம் முழுவதும் 6.11 கோடி வாக்காளர்கள்:

தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடி பேர், பெண்கள் 3.10 கோடி பேர், மூன்றாம் பாலினத்தவர் 8,016 பேர் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்களும் குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.

பசுமை சிமெண்ட் :

தமிழக அரசானது தயாரித்த அரசு, வலிமை போன்று பசுமை சிமெண்ட் (Green Cement) தயாரிக்கப்பட உள்ளது.

TANCEM நிறுவனமானது 1976-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசிற்கான சிமெண்டுகளை தயாரித்து வருகிறது.

பணக்கார நாடுகளில் குடியுரிமை :

OECD (The Organization for Economic Cooperation and Development) வெளியிட்டுள்ள இடம் பெயர்வு அறிக்கையின்படி பணக்கார நாடுகளில் குடியுரிமை பெறுவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியர்கள் 2021-ஆம் ஆண்டில் 1.3 லட்சம் பணக்கார நாடுகளில் குடியுரிமையை பெற்றுள்ளன.

இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் நாடுகளில் முறையே அமெரிக்கா, ஆஸ்திரேலியா,  கனடா இ டம்பிடித்துள்ளன.

19 வயது ஹரியாணா இளைஞருக்கு இன்டர்போல் தடுப்பு ஆணை:

இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற ஹரியாணாவைச் சேர்ந்த யோகேஷ் காடியன் என்பவருக்கு எதிராக சர்வதேச காவல் துறை, தடுப்பு ஆணை பிறப்பித்துள்ளது. 19 வயதான யோகேஷ் கடியான் அமெரிக்காவுக்கு போலி கடவுச்சீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்றுள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற சதிகள் மற்றும் கொலை முயற்சிக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

3-வது பெரிய பொருளாதார நாடு:

அமெரிக்காவின் எஸ் அண்ட் பி குளோபல் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  2030-ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கிா்கிஸ்தானில் எஸ்சிஓ கூட்டம் :

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாடுகள் சா்வதேச சட்டங்கள், பிற நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடுக்கு மதிப்பளிக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா். 

கிா்கிஸ்தான் தலைநகா் பிஷ்கெக்கில்  நடைபெற்ற எஸ்சிஓ நாடுகளின் 22-ஆவது பிரதமா்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கா், தனது உரையில் சீனாவை இவ்வாறு மறைமுகமாக குற்றஞ்சாட்டினாா்.

கிர்கிஸ்தான் நாட்டின் பீஷ்கெக்கில் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் (SCO) கூட்டமைப்பில் உள்ள 22வது பிரதமர்கள் கூட்டம்  நடைபெறுகிறது.

பெய்ஜிங்கினை தலைமையகமாக கொண்டு SCO 2001-ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வமைப்பின் நிரந்தர உறுப்பு நாடுகளாக சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், பாகிஸ்தான், உருசியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன.

கோல்கா நதி – உத்திரகாண்ட் :

ஜம்ராணி அணை பல்நோக்கு திட்டமானது உத்திரகாண்ட்டின் கோல்கா நதியின் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த நதியானது ராம்கங்கா நதியின் துணை ஆறு உள்ளது

உத்திரகாண்ட், ஜம்ராணி கிராமத்தில் வழியே பாய்கிறது.

உத்தரகண்ட் தமிழ்ச் சங்கமம் :

உத்தரகண்ட் மாநிலம் சார்பில் டிசம்பர் 8, 9-ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்கு, தமிழக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 26) சென்னையில் நடைபெற்றது. அதில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சத்பால் மஹாராஜ், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுரப் பகுகுணா ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மற்றும் உத்தரகண்ட் இடையே கலாச்சாரத் தொடர்பு உள்ளது. தமிழ் இலக்கணநூல் எழுதிய அகத்தியரின் ஆசிரமம் உத்தரகண்டில் உள்ளது. வடமாநிலங்களில் உத்தரகண்டில் மட்டும்தான் முருகன் கோவில் உள்ளது. சமீபத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நடத்தப்பட்டதுபோல, உத்தரகண்டில் உத்தரகண்ட் தமிழ்ச் சங்கமம் வெகுசிறப்பாக நடத்தப்படவுள்ளது” என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

கேரளா-காசர்கோடு :

கேரளா, காசர்கோடு மாவட்டம் நிர்வாகத்திற்காக மரம், மலர், பறவை, மற்றும் இனங்களை தனக்கென சொந்தமாக அறிவித்துள்ளது. இவ்வறிப்பு இந்தியாவில் காசர்கோடு மாவட்டம் அறிவித்துள்ளது.

  • மரம் – கஞ்சிரம்
  • மலர் – பெரிய பொலதலி
  • பறவை – வெண்வயிற்று கடல் பருந்து இனம்
  • விலங்கு – கேண்டரின் ராட்சத மென் ஓடு கொண்ட ஆமை

தேர்தல் ஆணைய விளம்பர தூதராக ராஜ்குமார் ராவ் நியமனம் :

வாக்காளர்களை வாக்களிப்பதற்கு ஊக்குவிக்கவும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களை தேர்தல் விழிப்புணர்வுக்கான விளம்பர தூதராக இந்திய தேர்தல் ஆணையம் அவ்வப்போது நியமிக்கும்.

தேசிய அளவில் விழிப்புணர்வு அடையாளமாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, நடிகர் அமீர் கான், சமூக சேவகி நிருகுமார், பாடகர் ஜஸ்பீர் ஜசி ஆகியோர் இதற்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். 

இதேபோல தமிழ்நாட்டின் தேர்தல் விளம்பரத் தூதர்களாக பாடகி சித்ரா, நடிகர்கள் நிழல்கள் ரவி, ரோபோ சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வரிசையில் நடைபெற இருக்கிற 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

நிலவு குடிச்ச சிங்கங்கள்-புத்தகம் :

இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் சுயசரிதை நிலவு குடிச்ச சிங்கங்கள் என்ற புத்தகமாக நவம்பரில் வெளியாக இருக்கிறது.

"கலிக்ஸ்கோகா" என்ற தடுப்பூசி :

பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் கோகோயின் மற்றும் கிராக் போதைக்கான ஒரு அற்புதமான சிகிச்சையை "கலிக்ஸ்கோகா" என்ற தடுப்பூசி வடிவில் உருவாக்கியுள்ளனர். இந்த புதுமையான தடுப்பூசி உடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதன் மூலம் கோகோயினின் விளைவுகளை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல் மருத்துவக் கல்லூரியைப் பெற்றிருக்கிறது நாகாலாந்து:

மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், முதல் மருத்துவக் கல்லூரியைப் பெற்றிருக்கிறது நாகாலாந்து. அக்டோபர் இரண்டாம் வாரத்தில், நாகாலாந்து மாநிலம் கோஹிமாவில், மிக ரம்மியமான பின்னணியில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

பாரத் நேஷனல் சைபர் செக்யூரிட்டி பயிற்சி (NCX) 2023 :

பாரத் நேஷனல் சைபர் செக்யூரிட்டி பயிற்சி (NCX) 2023, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS), இந்திய அரசு (GoI), ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்துடன் (RRU) மூலோபாய கூட்டுறவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது . பாரத் என்சிஎக்ஸ், சிஐஎஸ்ஓ மாநாட்டை நடத்தியது, இதில் 200க்கும் மேற்பட்ட தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் (சிஐஎஸ்ஓக்கள்) கலந்து கொண்டனர்.

ஹம்மதத்தா துறைமுகம் :

இலங்கையின் ஹம்மதத்தா துறைமுகத்திற்கு சீன நாட்டின் ஆய்வுக்கப்பல் ஷியான் 6  வருகை தந்துள்ளது.

இதற்கு முன் சீன உளவு கப்பலான யுவான்வாங் 5 இலங்கைக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

கத்தாரில் 8 இந்தியா்களுக்கு மரண தண்டனை விதிப்பு :

கத்தாா் நாட்டில் உளவுக் குற்றச்சாட்டில் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து  தீா்ப்பளித்தது. 

இந்த தீா்ப்பு குறித்து இந்தியா பெரும் அதிா்ச்சி தெரிவித்துள்ளது. இவா்கள் 8 பேரும் கத்தாரில் உள்ள ‘அல் தாரா’ என்ற தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா். இந்த நிலையில், கத்தாரின் ரகசிய கடற்படை திட்டங்களை உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் இவா்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனா்.

'ஆராட்டு' திருவிழா :

திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோவிலில் 'ஆராட்டு' திருவிழா கொண்டாடப்படும் ஒரு வளமான பாரம்பரியம் உள்ளது.

'ஆராட்டு' திருவிழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்தின் தலைவர் இன்றும் பாரம்பரிய உடையில் ஊர்வலத்தின் போது தெய்வங்களின் சிலைகளை அழைத்துச் செல்வதுதான். ஆராட்டு விழா ஆண்டுக்கு இருமுறை கொண்டாடப்படுகிறது.

மிகப்பெரிய தொலைநோக்கி :

சீனா நாடானது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான டிரைடெண்டினை (TRIDENT) நீருக்கடியில் நியூட்ரினோ கண்டறிய தயாரிக்கிறது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU):

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) அக்டோபர் 24 அன்று கினியா வளைகுடாவில் தங்கள் முதல் கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தியது. அக்டோபர் 5 ஆம் தேதி பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா கடல்சார் பாதுகாப்பு உரையாடலின் மூன்றாவது கூட்டத்தின் அடிப்படையில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா:

இந்த நிதியாண்டில் ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. 

2023 ஏப்ரல்-செப்டம்பரில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 11.3 சதவீதம் சரிந்து 59.67 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 67.28 பில்லியன் டாலராக இருந்தது. 

இதேபோல், இந்தியா மற்றும் சீனா இடையேயான இருவழி வர்த்தகமும் 3.56 சதவீதம் குறைந்து 58.11 பில்லியன் டாலராக உள்ளது.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி – இந்தியா :

இந்தியாவில் முதன்முறையாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் மகளிருக்கான 7 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 27

27th October காலாட்படை தினம் :1947-ல் ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை வெளியேற்றிதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. 76-வது தினத்தை இந்திய ராணுவம் கொண்டாடுகிறது

27th October உலக ஆடியோ விஷுவல் பாரம்பரிய தினம் (World Audiovisual Heritage Day) :எதிர்கால சந்ததியினருக்காக நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஆடியோ-விஷுவல் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களை கவுரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 ஆம் தேதி உலக ஆடியோவிஷுவல் ஹெரிடேஜ் தினம் அனுசரிக்கப்படுகிறது . பதிவுசெய்யப்பட்ட ஒலி மற்றும் ஒலிப்பதிவு ஆவணங்களின் (திரைப்படங்கள், ஒலி மற்றும் வீடியோ பதிவுகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.கருப்பொருள்: “Your Window to the World-உலகிற்கு உங்கள் சாளரம்".

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

Post a Comment

0Comments

Post a Comment (0)