MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
பாலாஜி விஸ்வநாத் (1713-1720)
- உள்நாட்டுப் போரால் சிக்கலிலிருந்த அரசைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர சாஹூவுக்கு பாலாஜி விஸ்வநாத் உதவினார்.
- மேற்குக் கரையோரத்தில் கனோஜி ஆங்கிரே அதிக அதிகாரம் படைத்த கடற்படைத் தளபதியாகத் திகழ்ந்தார்.
- உள்நாட்டுப்போரின் போது கனோஜி ஆங்கிரே தாராபாய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஐரோப்பியரால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி அவருக்கு எடுத்துரைத்த பேஷ்வா சாஹூவிடம் தனக்குள்ள விசுவாசத்தை உறுதி செய்தார்.
- ஜாகீர்களை வழங்கும் நடைமுறை மீண்டும் வழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பேஷ்வாவின் பதவி மரபு சார்ந்ததாக ஆனது.
- பேஷ்வா என்ற பாரசீக சொல்லின் பொருள் "முதன்மையான" அல்லது "பிரதம அமைச்சர்" என்பதாகும்.